17 Jan 2020

கொல்லநுலை பாடசாலையில் பொங்கல் விழா

SHARE
(சாந்தன்)

கொல்லநுலை பாடசாலையில் பொங்கல் விழா.
மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கொல்லநுலை விவேகானந்த வித்தியாலயத்தில் வியாழக்கிழமை (16)  பட்டிப்பொங்கல் விழா இடம்பெற்றது.
சூரியனுக்கும், பட்டிகளுக்கும் நன்றி செலுத்தும் வகையில் இந்நிகழ்வு ஒழுங்கப்படுத்தப்பட்டிருந்தது.

இதன்போது, பொங்கல் பொங்கி படைத்து பூசைகளும் நடைபெற்றன.  கோமாதாவிற்கு விசேட பூசைகளும் நிகழ்த்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இங்கு, ஏழு பொங்கல் பானைகள் பல்வேறு விதமாக பொங்கப்பட்டிருந்தன. வகுப்புரீதியாக கோலப்போட்டி நடாத்தப்பட்டு பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.

மாணவர்களிடையே விழுமியப் பண்பினை ஏற்படுத்தும் பொருட்டும், சமய, சம்பிரதாயங்களை கடைப்பிடித்து பய,பக்தி, ஒழுமுள்ள மாணவர்களை உருவாக்கும் பொருட்டும் இந்நிகழ்வு நடாத்தப்பட்டதாக வித்தியாலயத்தின் அதிபர் சா.விக்னேஸ்வரன் தெரிவித்தார். மேலும் சமய அனுஸ்டானங்களுக்கேற்ப புதிர் எடுத்தல் வைபவம் இடம்பெற்றமையுடன், விவசாய செய்கைகளோடும், ஏனைய செயற்பாடுகளுடனும் ஒன்றிணைந்த மக்கள் எவ்வாறான நாட்டார் பாடல்களை பாடினர் என்பது குறித்த, நாட்டார் பாடல் மற்றும், ஆடல் நிகழ்வுகளும் நடைபெற்றன. நன்றி செலுத்தும் பண்பினையும் இதன்போது மாணவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையிலும் இந்நிகழ்வு ஒழுங்குசெய்யப்பட்டிருந்தது.

இதில், மண்முனை தென்மேற்கு கோட்டக்கல்விப் பணிப்பாளர் ந.தயாசீலன் மற்றும் அதிபர்கள், கிராம அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஆகியோர் பங்கேற்றிருந்தமையுடன், கோட்டக்கல்விப் பணிப்பாளரின் சேவையை பாராட்டி பொன்னாடை போர்த்தி அவரை பாடசாலை சமூகம் கௌரவித்தது.















SHARE

Author: verified_user

0 Comments: