24 Dec 2019

மாவட்ட அனர்த்த நிலைமைகள் தொடர்பாக பிரதேச செயலாளர்களுடன் கலந்துரையாடல்

SHARE

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான எஸ்.வியாளேந்திரன் அவசரமான ஒரு கூட்டத்தினை இன்று காலை(24) 9.30 மணியளவில் மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமாருடன் இணைந்து மாவட்ட அனர்த்த நிலைமைகள் தொடர்பாக பிரதேச செயலாளர்களுடன் கலந்துரையாடப்பட்டது.மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினால் முன்னெடுக்கப்பட்ட பணிகள் மிகவும் காத்திரமானதாக அவதானிக்கபட்டதாகவும் மக்களுக்கு எவ்வாறான உயிரிழப்புக்களும் இல்லாத வகையில் சிறப்பாக மீட்பு பணியில் ஈடுபட்ட அரசாங்க அதிபர் உட்;;பட அனைத்து உத்தியோகத்தர்களையும் பாராட்டியிருந்தார்.
மட்டக்களப்புக்கு தேவையான அபிவிருத்தி செயல் திட்டங்களை எவ்வாறான தடைகளுமின்றி தொடர்ந்து எமது புதிய ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ தலைமையில் முன்னெடுக்க ஆயத்தமாக உள்ளோம்.

இதனைத்தவிர நாட்டில் ஒரு லட்சம்  வேலைவாய்ப்பினை ஜனாதிபதி முன்னெடுக்கவுள்ளார். இத் திட்டத்தில் கல்விப் பொது சாதாரண தரத்தில் சித்தியடையாத வறுமை நிலையில் உள்ள குடும்பங்களுக்கு முதல் இடம் வழங்கவும் இதற்கான சுற்று நிருபம் விரைவில் வெளிவரவுள்ளதாவும் பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக் குழுத்தலைவருமான எஸ்.வியாளேந்திரன் தெரிவித்தார்.









SHARE

Author: verified_user

0 Comments: