26 Dec 2019

மண்முனை துறையில் குப்பை கொட்டுபவர்களுக்கு சட்டநடவடிக்கை கண்காணிக்கவும் விசேட ஏற்பாடு – தவிசாளர் புஸ்பலிங்கம்.

SHARE
மண்முனை துறையில் குப்பை கொட்டுபவர்களுக்கு சட்டநடவடிக்கை கண்காணிக்கவும் விசேட ஏற்பாடு – தவிசாளர் புஸ்பலிங்கம்.
மட்டக்களக்பு மாவட்டம் மண்முனை தென்மேற்கு பிரதேசசபை எல்லைக்குட்பட்ட மண்முனைத் துறையில் குப்பை கொட்டுபவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும், இதனைக் கண்காணிக்க விசேட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் மண்முனை தென்மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் சி.புஸ்பலிங்கம் தெரிவித்தார்.

அண்மைக்காலமாக மண்முனை மேற்கு பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட மட்டக்களப்பு வாவியை அண்டிய பகுதிகளில் இனம் தெரியாத நபர்களினால் இரவு வேளைகளில் குப்படைகள் கொட்டப்படு வருவது குறித்து வியாழக்கிழமை (26) தொடர்பு கொண்டு கேட்டபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இவ்விடையம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்…

குறித்த பகுதியில், இனந்தெரியாதோரால் குப்பைகள் கொட்டப்பட்டு வருவதாகவும், குறிப்பாக அயல் பிரதேசசபைக்குட்பட்ட இனந்தெரியாத சிலரே குப்பைகளை கொட்டிவருவதாக அறியமுடிகின்றது. அவ்வாறு குப்பைகளை கொட்டுபவர்களை இனங்கண்டு அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளோம்.

மேலும், குறித்த குப்பைகள் இரவு நேரங்களிலேயே கொட்டப்படுவதாகவும் தெரியவருகின்றது. அவ்வாறு குப்பைகளை கொட்டுபவர்களை கண்காணிக்க விசேட ஏற்பாடொன்றும் செய்யப்பட்டுள்ளது.

அப்பகுதியில் குப்பைகள் அண்மைக்காலங்களில் கொட்டப்பட்டு, இருதடவைகள் பிரதேசசபையினால் அவற்றினை அகற்றும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டிருந்தன, பிரதேசத்திற்குட்பட்ட பொது இடங்களில் இவ்வாறான குப்பைகள் இனந்தெரியாதோரால் வீசப்பட்டும் வருகின்றன. அவர்களையும் இனங்கண்டு அவர்களுக்கு எதிராகவும் சட்டநடவடிக்கை எடுக்கவுள்ளோம்.

திண்மக்கழிவுகளை அகற்றுவதற்கான இடம் இல்லாமையினால், உக்கக்கூடிய கழிவுகளை பிரதேசசபையினால் பெற்றுக்கொள்ள முடியாதுள்ளதாகவும், திண்மக்கழிவகற்றலுக்கான இடத்தினை பெறுவதற்கு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். 

SHARE

Author: verified_user

0 Comments: