21 Dec 2019

மட்டக்களப்பில் மீண்டும் தொடர் அடைமழை மக்கள் அவதி உலங்கு வானூர்தி மூலம் மீட்புப் பணி.

SHARE
மட்டக்களப்பில் மீண்டும் தொடர் அடைமழை மக்கள் அவதி உலங்கு வானூர்தி மூலம் மீட்புப் பணி.
அண்மைக்காலமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்து வந்த வடகீழ் பருவப் பெயற்சி மழை கடந்த சில தினங்களான ஓய்ந்திருந்த போதிலும் தற்போது மீண்டும் பொழியத் தொடங்கியுள்ளது. இதனால் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள தாழ் நிலங்கள் அனைத்தும் நீர் நிரம்பி வழிவதுடன், மக்கள் குடியிருப்புக்களும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இவற்றால் மக்களின் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பு எற்பட்டுள்ளதுடன் பல தொற்று நோய்களுக்கும் மக்கள் உள்ளாக்கி வருகின்றனர். 


இந்நிலையில் தொடர்ந்து பெய்துவரும் அடைமழையினால் மட்டக்களக்களப்பு   கொழும்பு பிரதான வீதியின் மன்னப்பிட்டியில் வெள்ள நிர் ஊடறுத்துப் பாய்வதனால் அவ்வீதியின் பிரதான போக்குரத்தும் இஸ்த்தம்தமிதம் அடைந்துள்ளது.


மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவாங்கராப் பகுதியில் அமைந்தள்ள மண்டூர் - வெல்லாவெளி பிரதான வீதியை ஊடறுத்து வெள்ள நிர் பாய்வதனால் அவ்வீதியின் போக்குவரத்து முற்றாகத் தடைப்பட்டுள்ளது. இதனைவிட அப்பிரதேசத்தின் மருதங்குடலை வீதி, ஆனைகட்டியவெளி வீதி, வேத்துச்சேனை வீதி, சங்கர்புரம் வீதி ஆகிய வீதிகளையும் ஊடறுத்து வெள்ளம் பாய்வதனால் அவ்வீதிகளுக்கான போக்குவரத்து முற்றாகத் தடைப்பட்டுள்ளதுடன் அக்கிராமங்களுக்கான நிலத் தொடர்புகளும், எதுவித போக்குவரத்துக்களுமின்றித் துண்டிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதிகளின் கிராம சேவையாளர்க்ள தெரிவிக்கின்றனர். 


இவற்றினைவிட வேத்துச்சேனைக் கிராமத்தில் சனிக்கிழமை பாம்ம்பு தீண்டிய ஒருவர் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.


இது இவ்வாறு இருக்க ஏறாவூர் பற்று பிரதேசத்தின் மாவடிஓடை, நவந்தனியாமடு, கார்மலை, வண்ணாத்தியாறு, கொக்குக்குஞ்சுமடு, ஆகிய பகுதிகளுக்கு தமது கால்நடைகளை மேய்ப்பதற்காகச் சென்ற பண்ணையாளர்கள் வெளியே வரமுடியமல் சிக்கிக் கொண்டுள்ளார்கள் இவர்கள் விமானப்படையினரின் ஒத்துழைப்புடன் உலங்கு வானூர்தி மூலம் மீட்கப்பட்டுள் கொண்டிருக்கின்றார்கள். அரசாங்க அதிபர், மற்றும், எறாவூர் பற்று பிரதேச செயலாளர், மற்றும்,  அனர்த்த முகாமைத்துவப் பிரிவினரின் முயற்சியில் விமானப்படையிரூடாக இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்;றன.


இதற்கு தமிழ் உணர்வாகளர்கள் அமைப்பு உள்ளிட்ட பல அமைப்புக்களும், மீட்புக் குழுக்களும், பொதுமக்களும் அவர்களது ஒத்துழைப்புக்களை வழங்கி வருகின்றனர்.

இது இவ்வாறு இருக்க  சனிக்கழமை காலை 8.30 மணியுடன் கடந்த 24 மணித்தியாலங்களில் உறுகாமம் பகுதியில் அதிகளவு மழை வீழ்விச்ச பத்திவாகியுள்ளது. அந்த வகையில் மட்டக்களப்பு நகரில் 16.1 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சியும், நவகிரிப் பகுதியில் 66.5 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சியும்,  தும்பங்கேணிப் பகுதியில் 91.5 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சியும், 
மைலம்பாவெளிப் பகுதியில் 16.3 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சியும், பாசிக்குடாப் பகுதியில் 7.5 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சியும், ஊன்னிச்சைப் பகுதியில் 66.0 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சியும், வாகனேரிப் பகுதியில் 45.7 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சியும், 

கட்டுமுறிவுப் பகுதியில் 28.6 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சியும், உறுகாமம் பகுதியில் 105.8 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சியும், கிரான் பகுதியில் 7.8 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சியும், பதிவாகியுள்ளதாக வானிலை அவதான நிலையத்தின் மட்டக்களப்பு நிலையப் பெறுப்பதிகாரி க.சூரியகுமார் தெரிவித்தார்.

இந்நிலையில் தற்போது பொய்து வரும் மழை காரணமாக மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவு வேப்பவெட்டுவானுக்கும், மாவடியோடைக்கும் இடையில் உள்ள மதகு ஒன்றினூடாக பயணித்த உழவு இயந்திரம் வெள்ளநீரின் வேகம் காரணமாக குடைசாய்ந்ததில் பலர் நீரில் மூழ்கி கடற்படையினரால் காப்பாற்றப்பட்டுள்ளனர். இவ் விபத்தில் அனர்த்த முகாமைத்துவ பிரிவில் கடமையாற்றும் சகோதரர் ஹஸீர், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 


























SHARE

Author: verified_user

0 Comments: