24 Dec 2019

மட்டக்களப்பு மாவட்டத்தில் நியமிக்கப்பட்ட பட்டதாரி பயிலுனர்களுக்கான வான்மைவிருத்தி பயிற்சிப்பட்டறை

SHARE

மட்டக்களப்பு மாவட்டத்தில் நியமிக்கப்பட்ட பட்டதாரி பயிலுனர்களுக்கான வான்மைவிருத்தி பயிற்சிப்பட்டறை ஒன்று நேற்று (23) காலை 9.30 மணிக்கு மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது.ஒரு வருடத்தினை பூர்த்தி செய்த பட்டதாரி பயிலுனர்களுக்கான திறன் விருத்தியினை ஏற்படுத்துவதற்காக 132 பட்டதாரிகளுக்கு மாவட்டத்தின் அனுபவமிக்க சிரேஸ்ட நிர்வாக சேவையாளர்கள் மற்றும் இலங்கை கணக்காளர் சேவையில் சிரேஸ்ட நிலை அதிகாரிகளினால் கருத்துரை வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அரசாங்க அதிபர் பட்டதாரி பயிலுனர்கள் தங்களின் ஆளுமை விருத்தியினை பெறுவது மாத்திரமல்லாது மொழி அறிவினைப் பெற்று உயர் நிலைக்கு வர தங்களின் தனிப்பட்ட முயற்சியினை எடுக்க வேண்டும் எனவும் தங்களின் நிரந்தர நியமனத்தின் பின்னர் தடை தாண்டல் பரீட்சைகளையும் எதிர்கொள்ள வேண்டி வரும் அதற்கும் நீங்கள் தற்போதிருந்து முயற்சிகள் பயிற்சிகளை எடுக்க வேண்டுமெனவும் அனைத்து பட்டதாரிகளும் சிறப்பாக வினைத்திறனான அரச சேவையினை முன்னெடுக்க வாழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந் நிகழ்விற்கு வளவாளர்களாக மாவட்ட செயலகத்தின் பிரதம கணக்காளர் க.ஜெகதீஸ்வரன்,மேலதிக அரசாங்க அதிபர்  காணி திருமதி.மு.நவரூபரஞ்சனி,பிரதம உள்ளக கணக்காய்வாளர் திருமதி.மோகன்,மாவட்ட செயலகத்தின் கணக்காளர் பிரேம்குமார்,உதவி மாவட்ட செயலாளர் ஏ.நவேஸ்வரன் நிர்வாக உத்தியோகத்தர் தயாபரன் ஆகியோர் அனைத்து பயிற்சிகளையும் வழங்கியிருந்தனர்.








SHARE

Author: verified_user

0 Comments: