22 Dec 2019

மட்டக்களப்பு கொழும்பு நெடுஞ்சாலையை வழி மறித்த வெள்ளம் தடுமாறிய பயணம்.

SHARE
மட்டக்களப்பு கொழும்பு நெடுஞ்சாலையை வழி மறித்த வெள்ளம் தடுமாறிய பயணம். 
சனிக்கிழமையன்று 21.12.2019 திடீரென மாதுறுஓயா ஆறு பெருக்கெடுத்து மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பகுதிகளை மூழ்கடித்தனால் போக்குவரத்தும் ஸ்தம்பித நிலையை அடைந்திருந்தது.

மட்டக்களப்பு – கொழும்பு நெடுஞ்சாலையில் சித்தாண்டி, புணானை, வெலிக்கந்தை, மன்னம்பிட்டி ஆகிய பகுதிகள் சுமார் 2 தொடக்கம் 4 அடி வரையான வெள்ள நீரில் மூழ்கியிருந்தது.

எதிர்பாராத விதமாக திடீரென ஏற்பட்டு வீதியை வழிமறித்த இந்த வெள்ளப் பெருக்கால் போக்கு வரத்து பல மணிநேரம் ஸ்தம்பித்துப் போயிருந்தது.

சிறிய வாகனங்களில் பயணம் செய்தோர் தமது பயணத்தைத் தொடர முடியாமல் தடுமாறிப் போய் நின்றார்கள்.

அதேவேளை வெள்ளநீரில் சிக்கிக் கொண்ட சிறிய ரக வாகனங்களை கட்டி இழுத்து வந்து கரை சேர்த்து உதவும் வகையில் பல கனரக வாகனங்கள் ஈடுபட்டிருந்தன. 

தடைப்பட்ட பயணத்தைத் தொடர்வதற்கு உதவும் விதமாக பெண்கள், குழந்தைகள், வயோதிபர்கள் ஆகியோர் உழவு இயந்திரங்களில் ஏற்றி கரைசேர்க்கப்பட்டனர்.

மட்டக்களப்பு – கொழும்பு நெடுஞ்சாலையில் புணானைப் பகுதி பெரு வெள்ளத்தில் மூழ்கியிருப்பதை படங்களில் காணலாம். 






SHARE

Author: verified_user

0 Comments: