29 Dec 2019

ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி கிழக்கில் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் சேர்ந்து செயற்படும் - கிழக்குமாகாண முன்னாள் உறுப்பினர் இரா.துரைரெத்தினம்.

SHARE
ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி கிழக்கில் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் சேர்ந்து செயற்படும் - கிழக்குமாகாண முன்னாள் உறுப்பினர் இரா.துரைரெத்தினம். 
எதிர்காலத்தில் கிழக்கு மாகாணத்தில்;; ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி தமிழ் தேசிய கூட்டமைப்புடன்; நாடாளுமன்ற தேர்தலிலும் மாகாணசபை தேர்தலிலும் சேர்ந்து இயங்குவதற்கு தயாரான நிலையில் இருக்கின்றோம். என ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் பிரதி தலைவரும் கிழக்குமாகாண முன்னாள் உறுப்பினருமான இரா.துரைரெத்தினம் தெரிவித்தார். 

மட்டக்களப்பு வாவிக்கரை வீதியல் அமைந்திருக்கும் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் கட்சி காரியாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை (29) இடம்பெற்ற ஊடவியலாளர் மாநாட்டில்; இவ்வாறு அவர் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்… 

கடந்த மாதம் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் கூட்டப்பட்ட கட்சி கூட்டத்தில் மத்தியகுழு தெளிவாக தீர்மானம் எடுத்துள்ளது. அந்த தீர்மானத்தில் கிழக்கு மாகாணத்தை பொறுத்தளவில் எந்த சந்தர்ப்பத்திலும் ஜக்கியத்துக்கு தடையாக இருந்து விடக்கூடாது, தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களை அதிகரிக்க வைப்பதும் கிழக்கு மாகாண சபையில் தமிழர் ஒருவர் முதலமைச்சராக வருவதற்கும் எமது கட்சி கிழக்கு மாகாணத்தில் ஒற்றுமைப்பட்டால் மட்டும் தான் அது முடியும். 

எனவே ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியை பெறுத்தளவில் எந்த சந்தர்ப்பத்திலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழர்களுடைய வாக்குகளை பிரிப்பதற்கு உறுதுணையாக நிற்காது. அதேவேளை தமிழர் பிரதிநிதித்துவத்தை பாது காப்பதற்காக எதிர்காலத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் பேசுவதற்கான தயார் நிலையில் இருக்கின்றோம்.

இந்த விடயங்கள் தொடர்பாக எமது கட்சியில் நாங்கள் வடக்கு நிலைமைகள் வேறு. கிழக்கு நிலமைகள் வேறு. வடக்கை பெறுத்தமட்டில் யார் போhட்டியிட்டாலும் தமிழ் பிரதிநிதிகள் வரக்கூடிய வாய்ப்புக்கள் இருக்கின்றது. ஆனால் கிழக்கை பெறுத்தவரையில் கடந்த 40 வருடமாக அபிவிருத்தியிலும் அரசியல் ரீதியாக இன ரீதியாகவும் வீதாசார அடிப்படையிலும்  பாதிக்கப்பட் சமூகம் தமிழ் சமூகம். 

இதன் அடிப்படையில் மக்கள் பல கோரிக்கைகளை எம்மிடம்  முன்வைத் திருக்கின்றார்கள.; எனவே எதிர்காலத்தில் தமிழர்களுடைய வாக்குகள் பிரிபடாமல் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி பாத்துக் கொள்ளக் கூடிய முழுப்பொறுப்பும் எம்மிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நம்பிக்கையை மக்கள் தந்திருக்கின்றார்கள். 

எனவே அந்த மக்களின் நம்பிக்கை வீண்போகாமல் எதிர்காலத்தில் வாக்குகளை பிரிப்பதற்கு உடந்தையாக இருக்காமல் எதிர்காலத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் கிழக்கு மாகாணத்தில் சேர்ந்து இயங்குவதற்குரிய கருத்தொற்றுமையுடன் நாங்கள் இருக்கின்றோம் . இதை தமிழ் தேசிய கூட்டமைப்பு பரிசீலனை செய்யப்படவேண்டும் 

கடந்த காலத்தில் எமது கட்சி தமிழ் தேசிய கூட்டமைப்புடன் பல கசப்பான உணர்வுகள் இருக்கின்றன எனவே அந்த கசப்பானவற்றை நாங்கள் விட்டு கிழக்கு மாகாணத்தில் நாங்கள் ஒரு நிலைப்பாட்டிற்கு வருவதற்காக எமது கட்சி இந்த விடயங்களை பரிசீலனை செய்து கிழக்கு மாகாணத்தில் நாங்கள் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் சேர்ந்து செயற்படக் கூடியவாறு ஒரு இணக்கப்பாட்டிற்கு எமது கட்சி வரவேண்டும் வரும் என்ற நம்பிகை எனக்குண்டு என்றார். 

SHARE

Author: verified_user

0 Comments: