17 Dec 2019

மட்டக்களப்பு மாவட்ட இலக்கிய விழா – 2019

SHARE
மட்டக்களப்பு மாவட்ட இலக்கிய விழா – 2019      
மட்டக்களப்பு மாவட்டத்தின் விழுமியங்களையும், தொன்மைகளையும், கலாசார பண்புகள் மற்றும் மட்டக்களப்பிற்கே உரித்தான கலைகள் அவற்றின்பாலெழுந்த படைப்புக்களையும் முழு உலகிற்கு அறியச் செய்வதற்கான அர்த்தமிகு நிகழ்வாக 2019 ஆம் வருடத்திற்கான மாவட்ட இலக்கிய விழா  மாவட்ட கலாசார அதிகார சபையின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு   மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மா.உதயகுமார் தலைமையில் (17) செவ்வாய்க்கிழமை மிகச் சிறப்பாக நடைபெற்றது.

மாவட்டத்தின் பாரம்பரியங்களையும், மண்ணிற்குரித்தான தன்னிறைவுச் சுவடுகளையும் பேணும் நோக்கில் இந் நிகழ்வுகள் மட்டக்களப்பு சார்ள்ஸ் மண்டபத்தில் இடம்பெற்றது. 

நிகழ்விற்கு பிரதம அதிதிகளாக கிழக்குப் பல்கலைக்கழக தமிழ்த் துறை சிரேஸ்ட விரிவுரையாளர் திருமதி.ரூபி வலன்ரீனா பிரான்ஸீஸ் மற்றும் ஓய்வு பெற்ற இலங்கை நிருவாக சேவை உத்தியோகத்தர் கே.எம்.எம்.ஷரீப் ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்தார்கள்.

மூவினங்களின் பாரம்பரியம், தொன்மை மற்றும் பல் மத கலாசார வெளிப்பாடுகள், விழுமியங்களை வெளிப்படுத்தும் பண்பாட்டு கலைநிகழ்வுகள், மட்டக்களப்பை  மையப்படுத்தி மட்டக்களப்பு கலைஞ்ஞர்களால் ஆக்கப்பட்ட திரைப்பட படைப்பு இதன்போது அரங்கேற்றப்பட்டதுடன், "எழுகதிர்" சங்சிகையும் வெளியிட்டு வைக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் தனிப்பெருமையையும் அதன் சிறப்பையும் வெளிக்கொணரும் வகையில் பல்கலை அம்சங்களைத் தாங்கியதான இந்நிகழ்விலே மாவட்டத்தின் அடுத்த தலைமுறையினருக்கும், இளையசந்ததியினருக்கும் எம் விழுமியங்களை எடுத்துச் செல்லும் வகையில் நிகழ்வுகள் அமைந்திருந்ததுடன், மாவட்டத்தின் 14 பிரதேச செயலக பிரிவுகளிலும் இருந்து பதினான்கு கலைஞர்கள் கலைச் செம்மல் விருது வழங்கி    கௌரவிக்கப்பட்டமை சிறப்பம்சமாகும்.

சிறப்பு விருந்தினர்களாக இந்நிகழ்விற்கு பிரதேச செயலாளர்கள், ஐந்து வலயக் கல்வி அலுவலகங்களின் உயரதிகாரிகள் கலந்து கொண்டிருந்ததுடன், கலைஞர்கள், ஆர்வலர்கள், எழுத்தாளர்கள், இலக்கிய ஆர்வலர்கள் என பெருந்திரளானோர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் விழுமியங்களையும், தொன்மைகளையும், கலாசார பண்புகள் மற்றும் மட்டக்களப்பிற்கே உரித்தான கலைகள் அவற்றின்பாலெழுந்த படைப்புக்களையும் முழு உலகிற்கு அறியச் செய்வதற்கான அர்த்தமிகு நிகழ்வாக 2019 ஆம் வருடத்திற்கான மாவட்ட இலக்கிய விழா மிகச் சிறப்பாக நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. 













SHARE

Author: verified_user

0 Comments: