24 Nov 2019

இரா. நாகேந்திரன் எழுதிய வரலாறு இலகு வழிகாட்டி பாடநூல் வெளியீடு

SHARE
மட்டக்களப்பு  செங்கலடி விவேகானந்தா வித்தியாயத்தில் ஆசிரியர் இரா. நாகேந்திரன் எழுதிய வரலாறு  இலகு வழிகாட்டி  பாடநூல்  வலயக் கல்விப் பணிப்பாளரால் வெளியிடப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்டம், கல்குடா கல்வி வலயத்திலுள்ள செங்கலடி விவேகானந்தா வித்தியாயத்தில் இடைநிலை பிரிவு மாணவர்களின் வரலாற்றுப் பாட அடைவு மட்டத்தினை அதிகரிக்கும் நோக்கில் ஆசிரியர் இராசசிங்கம் நாகேந்திரன் எழுதிய இலகு வழிகாட்டி துணைப் பாடநூல்  வெள்ளிக்கிழமை (22) வெளியிடப்பட்டது.

விவேகானந்தா வித்தியாய அதிபர் எஸ்.சிவலிங்கராஜாவின் வழிநடத்தலுக்கமைவாக பிரதி அதிபர் வாணி ரமேஸ் தலைமையில் பாடசாலை மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் கல்குடா கல்வி வலயக் கல்விப் பணிப்பாளர் தினகரன் ரவி பிரதம அதிதியாக கலந்துகொண்டு பாடநூலினை வெளியிட்டு வைத்தார்.

தரம் 8  புதிய பாடத்திட்டம் வரலாறு எனும் துணைப் பாடநுலினை மாணவர்கள் இலகுவில் கற்றுக் கொள்வதற்காகவும் இந் நுல் மாணவர்களுக்கு ஓர் இலகு வழிகாட்டியாக அமையும் என இந்நுலின் ஆசிரியர் நாகேந்திரன் தெரிவித்தார்.

மேலும் இந்நிகழ்வில், கோட்க் கல்வி பணிப்பாளர்களான நா.குணலிங்கம், ச.தட்சனாமூர்த்தி, மற்றும் பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினர், ஆசிரியர்கள், மாணவர்கள் என பலர் கலந்துகொண்டனர்.



SHARE

Author: verified_user

0 Comments: