7 Nov 2019

சிறுபான்மையினங்களையும் பெரும்பான்மை இனத்தையும் ஐக்கியப்படுத்தும் தலைவனாக சஜித் பிறேமதாஸ அடையாளம் காணப்பட்டுள்ளார். முன்னாள் முதலமைச்சர் நஸீர் அஹமட்.

SHARE
சிறுபான்மையினங்களையும் பெரும்பான்மை இனத்தையும்  ஐக்கியப்படுத்தும் தலைவனாக சஜித் பிறேமதாஸ அடையாளம் காணப்பட்டுள்ளார்.
முன்னாள் முதலமைச்சர் நஸீர் அஹமட்.
இந்த நாட்டின் சிறுபான்மையினங்களையும் பெரும்பான்மையினத்தையும் ஐக்கியப்படுத்தும் தலைவனாக சஜித் பிறேமதாஸவை ரணில் விக்கிரமசிங்ஹ அடையாளம் கண்டு அவரது தலைமைத்துவத்தை அங்கீகரிக்கும்படி மக்களைக் கேட்டுள்ளதால் அதனை சிறுபான்மையினங்கள் ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்துவதில் தவறேதுமில்லை என கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் செய்னுலாப்தின் ஆலிம் நஸீர் அஹமட் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் செய்னுலாப்தீன் ஆலிம் நஸீர் அஹமட்டினால் ஏற்பாடு செய்யப்பட்ட பொதுமக்கள் இளைஞர் யுவதிகளுக்கான சந்திப்பு ஏறாவூரில் முன்னாள் முதலமைச்சரின் வாசஸ்தலத்தில்  புதன்கிழமை பகல்  06.11.2019 இடம்பெற்றது.

அங்கு தொடர்ந்து பிரதமர் முன்னிலையிலும் இளைஞர் யுவதிகள் மார்க்கப் பிரமுகர்கள் அரசியல்p பிரமுகர்கள் முன்னிலையிலும் உரையாற்றிய முன்னாள் முதலமைச்சர், இந்த மாவட்டத்தில் வாழும் எங்களுடைய தமிழ் முஸ்லிம் சிங்கள மக்களின் தேவைகள் சம்பந்தமான கோரிக்கைகள் அடங்கிய அறிக்கையை ஏற்கெனவே பிரதமரிடம் நான் கையளித்துள்ளேன்.

அதன்படி பாரிய அபிவிருத்தித் திட்டங்களும் தொழில் வாய்ப்புக்களும் வாழ்வாதாரத் திட்டங்களும் முன்னெடுக்க அந்த அறிக்கையில் வலியுறுத்தியுள்ளேன்.

அந்த விடயத்தில் பிரதமரும் அக்கறையாக உள்ளார். எனவே எல்லாம் எதிர்வரும் தேர்தலில் நாம் வழங்கும் ஒத்துழைப்பைப் பொறுத்து நமது பிரச்சினைகள் தேவைகள் அனைத்தையும் முடிந்தளவு தீர்த்து சுபீட்சமான சாந்தியும் சமாதானமும் நிறைந்த வாழ்வுக்கு வழி கோலலாம்.
இங்கு வாழும் தமிழ் முஸ்லிம் சிங்கள மக்கள் வன்முறையை அன்றி ஐக்கியத்தையும் அமைதியையும் அபிவிருத்தியையும் வேண்டி நிற்கின்றார்கள். அரசியல் தலைமைகள் அதற்கு வழிசமைக்க வேண்டும்” என்றார்.

இந்நிகழ்வில் அமைச்சர் ரவி கருணாநாயக்க, கிழக்கு முன்னாள் மாகாண ஆளுநர் ரோஹித்த போகொல்லாகம உட்பட பல அரசியல் பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.

SHARE

Author: verified_user

0 Comments: