23 Nov 2019

கொல்லநுலையில் திறமையை வெளிப்படுத்தலும் பரிசில்கள் வழங்கலும்.

SHARE
கொல்லநுலையில் திறமையை வெளிப்படுத்தலும் பரிசில்கள் வழங்கலும்.
மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கொல்லநுலை விவேகானந்த வித்தியாலயத்தில் வெள்ளிக்கிழமை (22) மாலை மாணவர்களின் திறமையை வெளிப்படுத்தலும், பரிசில்கள் வழங்கல் நிகழ்வும் நடைபெற்றது.

குறித்த பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்களினால் ஆற்றுகை செய்யப்பட்ட தோப்பிழந்தோம் விழிப்புணர்வு நாடகமும், அப்பூதியடிகள் பக்தி நாடகமும் இதன்போது ஆற்றுகை செய்யப்பட்டன.

தோப்பிழந்தோம் நாடகம் கிழக்கு மாகாணமட்டத்தில் நடாத்தப்பட்ட குறுநாடகப்போட்டியில் முதலிடத்தினைப் பெற்றிருந்தது. இந்நாடகத்தில் பங்கேற்றிருந்த மாணவர்களை கௌரவிக்கும் வகையில், பதக்கம் அணிவிக்கப்பட்டு, பரிசில்களும் வழங்கப்பட்டன. இந்நாடகத்தினை ஆற்றுகை செய்த ஆசிரியருக்கும், வழிகாட்டிய அதிபருக்கும் நினைவுச்சின்னம் வழங்கி வைக்கப்பட்டன. மேலும் அப்பூதியடிகள் நாடகத்தில் நடித்த மாணவர்களுக்கும் பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இதன்போது, வகுப்பு ரீதியாக முதன்நிலை பெற்ற மாணவர்களுக்கும் பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டன. வித்தியாலய அதிபர் சா.விக்னேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மண்முனை தென்மேற்கு கோட்டக்கல்விப் பணிப்பாளர் ந.தயாசீலன், கிராம அமைப்புக்களின் பிரதிநிதிகள், பெற்றோர்கள், மாணவர்கள் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.









SHARE

Author: verified_user

0 Comments: