24 Oct 2019

update news மின்னேரியாவில் போக்குவரத்துச் சபை – தனியார் பயணிகள் பஸ் கோர விபத்து 48 பயணிகள் காயம் சாரதி பலி.

SHARE
மின்னேரியாவில் போக்குவரத்துச் சபை – தனியார் பயணிகள் பஸ் கோர விபத்து 48 பயணிகள் காயம் சாரதி பலி.
மட்டக்களப்பு – கொழும்பு நெடுஞ்சாலை மின்னேரியாவில் இடம்பெற்ற பாரிய கோர விபத்தில் இரு பஸ்களிலும் பயணம் செய்த சுமார் 48 பயணிகள் காயமடைந்ததோடு சாரதி ஒருவரும் பலியாகியுள்ளார் என மின்னேரியா பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பிலிருந்து கல்முனை நோக்கி சென்றுகொண்டிருந்த இலங்கைப் போக்குவரத்துச் சபை கல்முனை சாலைக்குச் சொந்தமான பயணிகள் பஸ் வண்டியும் கல்முனையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த தனியார் பயணிகள் பஸ்ஸ{ம் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

சம்பவத்தில் இலங்கைப் போக்குவரத்துச் சபை பஸ் சாரதியான ஓட்டமாவடி மீராவோடையைச் சேர்ந்த ஹஸன் லாபீர் சமீம் (வயது 55) என்பவர் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளார்.

இரு பஸ்களிலும் பயணித்தவர்களில் காயமடைந்தோரை இராணுவத்தினர், பொலிஸார், பொதுமக்கள் ஆகியோர் விரைந்து உதவியதுடன் பொலொன்னறுவை வைத்தியசாலையில் சேர்ப்பித்துள்ளனர்.

உடனடியாக 3 அம்பியூலன்ஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டு காயமடைந்த பயணிகள் மீட்கப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

சம்பவ தினமான புதன்கிழமை (23) இரவு 11.15 மணியளவில் இரு பஸ்களும் தத்தமது வழித்தடத்தில் பயணித்துக் கொண்டிருக்கும்போது இடைநடுவே கார் ஒன்று குறுக்கிட்டதில் இந்த விபத்து நேர்ந்தாக சம்பவத்தைக் கண்டவர்கள் தெரிவித்து அதேவேளை பொலிஸார் இச்சம்பவம்பற்றி விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.







SHARE

Author: verified_user

0 Comments: