8 Oct 2019

உலகில் முதியோர்களுக்கென்று ஓர் தனியான இல்லம் இருக்கக்கூடாது - இந்திய திரைப்பட இயக்குநர் அமீர்

SHARE
உலகில் முதியோர்களுக்கென்று ஓர் தனியான  இல்லம் இருக்கக்கூடாது - இந்திய திரைப்பட இயக்குநர் அமீர்.
உலகில் முதியோர்களுக்கென்று ஓர் தனியான  இல்லம் இருக்கக்கூடாது பெற்றோர் பிள்ளைகளுடன் இருப்பதுதான் சரியான வாழக்கையாகும் என இந்திய திரைப்பட இயக்குநர் அமீர் தெரிவித்துள்ளார்.

அகிலன் பவுண்டேசன் மற்றும் லண்டன் ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தின் ஸ்தாபகரும் சமூகசேவையாளருமான கோபாலகிருஸ்ணன் அவர்களின் அழைப்பின் பேரில் இலங்கைக்கு வருகைதந்த இயக்குநர் அமீர் அவர்கள் வோல்தம்ஸ்ரோ   லண்டன் ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தின் அனுசரணையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுக்கபட இருக்கும் பல சமூகநலன்புரி திட்டங்களை ஆரம்ப்பித்துவைக்கும் நிகழ்வகளில் பங்கு பற்றியிருந்தார்.

அந்த வகையில் செவ்வாய்;கிழமை (08) பழுகாமம் கொக்குநாரையில் அமைக்கப்பட்டுள்ள மதிரிப்பண்ணையை திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து களுவாஞ்சிகுடி நந்தவனம் முதியோர் இல்லத்தினை வோல்தம்ஸ்ரோ   லண்டன் ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தின் அனுசரணையில் நடாத்துவதற்கு உதியோக பூர்வமாக பொறுப்பேற்றுக்கொள்ளும் ஆரப்ப நிகழ்வு போன்றவற்றில் கலந்து கொண்டார். இந்த ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்…. 

வாழ்க்கையில் கொடுமை என்பது வறுமை, வறுமையிலும் வறுமையை விடகொடுமை எதுவென்றால் முதுமையில் வறுமை இதுதான் உலகில் இருக்கின்றவற்றில் கொடுமையான விடயமாகும். இங்கு முதியோர் இல்லங்களை மிகவும் சிறப்பாக நடாத்தி வருகின்றார்கள். என்று சொல்கின்றனர் அதற்காக நான் வாழ்த்துக்களை தெரிவிக்கப்போவதில்லை என்னைப் பொறுத்தமட்டில் இந்த உலகில் முதியோர் இல்லம் என்ற ஒன்று இருக்கக் கூடாது என்று நினைக்கின்றவன் நான் முதியேபார்களுக்கென்று தனியான ஒர் இல்லம் இருக்கக்கூடாது தாயின் கருவறையில் இருந்து பத்து மாதம் சுமந்து வெளியில் வந்த இங்கு இருக்ககூடிய ஆண்களாக இருக்கட்டும் பெண்களாக இருக்கட்டும் நீங்கள் உங்களுடைய பிள்ளைகளை பெற்றெடுத்திருப்பீர்கள் அவர்களை ஆளாக்கி விடுவீர்கள் ஆனால் அவர்களுடன் இறுதிவரை இருப்பது என்பதுதான் சரியான வாழ்க்கையாக இருக்கும். அதைவிடுத்து தனியான இல்லம் அமைத்து அதனை வாழ்ந்துவருவது தாய்தந்தை உறவை இல்லாமல் செய்வதாக அமைந்துவிடும். இதற்காகத்தான் நான் முதியோர் இல்லங்கள் இருக்ககூடாது என்ற கருத்தினை கூறியிருந்தேன்.

வெளிநாடுகளில் அவ்வாறு இருக்கின்றார்கள் நாங்கள் இந்த மண்ணில் அவ்வாறான வாழ்க்கையொன்றை வாழ்வது பொருத்தமற்றதாகும் ஆனாலும் காலத்தின் கோலம் இதுபோன்ற இல்லங்களை உருவாக்குவதற்கு துணைநிற்கின்றது. இருந்தும் காலம் அமைத்துக் கொடுத்த இவ்வாறான இல்லங்களை பராமரிப்பது என்பது பெரிய புண்ணியமாகத்தான் நான் பார்க்கின்றேன் என அவர் இதன்போது தெரிவித்தார். இந்நிகழ்வுகளில் அகிலன் பவுண்டேசன் இஸ்தாபகர் மு.கோபாலகிருஷ்ணன், இணைப்பாளர் வி.ஆர்.மகேந்திரன், மற்றும் நிருவாகத்தினர், அரச உத்தியோகஸ்த்தர்கள் பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.






















SHARE

Author: verified_user

0 Comments: