16 Oct 2019

தேசிய சமாதானப் பேரவையின், ஏற்பாட்டில் இன முரண்பாடுகள் சாதகமான இணக்கப்பாட்டின் மூலம் கட்டியெழுப்புதல் தொடர்பான கலந்துரையாடல்.

SHARE
தேசிய சமாதானப் பேரவையின், ஏற்பாட்டில் இன முரண்பாடுகள் சாதகமான இணக்கப்பாட்டின் மூலம் கட்டியெழுப்புதல் தொடர்பான கலந்துரையாடல்.
தேசிய சமாதானப் பேரவையின், மட்டக்களப்பு மாவட்ட சர்வமாத செயற்குழுவின் ஏற்பாட்டில், சமயங்கள் மற்றும் இன முரண்பாடுகள் சாதகமான இணக்கப்பாட்டின் மூலம் கட்டியெழுப்புதல் தொடர்பாகவும்  தற்போதைய நிலைமையினை ஆராய்ந்து எதிர்காலத்தில் இன நல்லிணக்கத்தினை  ஏற்படுத்தும் செயல்முறைகள் பற்றிய கலந்துரையாடல்  செவ்வாய்கிழமை (15) மட்டக்களப்பு கல்லடி தனியார் விடுதி ஒன்றில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட சர்வமத செயற்குழுவின் இணைப்பாளர் ஆர்.மனோகரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் இலங்கை தேசிய சமாதானப் பேரவையின் திட்ட முகாமையாளர் சமன் செனவிரெட்ன, கலந்துகொண்டு இச் செயற்பாடுகளை ஆராய்ததுடன் கருத்துரைகளையும் வழங்கினார்.

இதன்போது மட்டக்களப்பு  மாவட்டத்தில் அண்மையில் நடைபெற்ற முரண்பாட்டின் பினனர்; முஸ்லிம் மக்கள் முகம் கொடுக்கும் நடைமுறைப் பிரச்சனைகள் தொடர்பில் கருத்துக்கள் முன்வைக்கபபட்டது.

மேலும் இன அல்லது மத முரண்பாடுகளால் நாட்டில் ஏற்படும் பாதகமான விளைவுகள் பற்றியும் ஆராயப்பட்டன.

பொருளாதார வளர்ச்சிக்கும் அமைதிக்கும் இன விரிசல் பெரும் சவாலாக இருப்பதால் அது குறித்து உடன் செயற்பாட்டில் இறங்குமாறு செயற்பாட்டாளர்களுக்கு தாம் அறைகூவல் விடுப்பதாக இந்நிகழ்வில் கலந்துகொண்ட தேசிய சமாதானப் பேரவையின் திட்ட முகாமையாளர் சமன் செனவிரெட்ன தெரிவித்தார்.

இதன் முதற் கட்டமாக, மட்டக்களப்பு மாவட்டத்தில் இன விரிசல் ஏற்படக்கூடிய எல்லைப் பிரதேசங்களுக்கு அரச, அரச சார்பற்ற சிவில் அமைப்புக்களின் உதவியுடன்  சர்வமாத  உறுப்பினர்கள் மற்றும்  தேசிய சமாதானப் பேரவை உள்ளிட்டோர் நேரடியாக சென்று இன நல்லுறவை ஏற்படுத்தும் செயற்பாடுகளை மேற்கொள்வதென இதன்போது தீர்மானிக்கப்பட்டது.

இந் நிகழ்வில் மட்டக்களப்பு மற்றும் காத்தான்குடி பொலிஸ் நிலையங்களின் பொலிஸார், அரச அரச சார்பற்ற அமைப்புக்களின் பிரதிநிதிகள், மாவட்ட சர்வமாத செயற்குழுவினர் ஊடகவியலாளர்கள் என பலர் கலந்துகொண்டனர்.














SHARE

Author: verified_user

0 Comments: