10 Oct 2019

வாணி விழாவும் ஆயுத பூசையும்.

SHARE
வாணி விழாவும் ஆயுத பூசையும்.
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில்  வாணி விழாவும் ஆயுத பூசையும் நடைபெற்றது. விழாவானது மாவட்ட செயலக வளாகத்தில் அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் தலைமையில் உத்தியோகத்தர்களின் பங்களிப்புடன் மிகவும் சிறப்பான முறையில் மாவட்ட கலாசார உத்தியோகத்தர் குணநாயகம் ஒழுங்கு செய்திருந்தார் இதற்கான ஆலோசனைகளை மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.சுதர்சினியும் உதவி மாவட்ட செயலாளர் எ. நவேஸ்வரன் ஆகியோர் வழங்கினர்.

இவ் வழாவிற்கான பிரதமகுரு சிவபஸ்ரீறி உ. ஐகதீஸ்வரன் குருக்கள் மாவட்ட செயலகம் மட்டக்களப்பு. அவர்களினால் பூசை அலங்காரம் கும்பம் சொரிதல் நிகழ்வுகள் சிறப்பாக இடம் பெற்றது.

வாணிவிழாவின்  ஆரம்ப நிகழ்வாக சாயி சேவாசங்க உறுப்பினர்களினால் பஐனை பாடல்களும் மட்ஃவின்சன் பெண்கள் உயர்தர பாடசாலை மாணவிகளின் வரவேற்பு நடனம் மற்றும் விநாயகர் துதி சொற்பொழிவு பன்னிசை பாமாலை ஓதல் என பல கலை நிகழ்வுகள் நடத்தப்பட்டிருந்தமை சிறப்பான அம்சங்களாகும்.

அரசாங்க அதிபர் உறையாற்றுகையில் இம்மாதமானது மிகவும் பெருமைக்குரிய மாதமாகவே கருத வேண்டும் எனவும் இக்காலத்தில்தான் சிறுவர் முதியோர் வரமும் நடக்கின்றது அதே காலத்தில்;தான் நவராத்திரி விழாவும் இடம்பெறுவது சிறப்புக்குரிய அம்சமாகவே கருதுவதாகவும் நவராத்திரி தொடர்பான கருத்துக்களையும் வழங்கி செயலகத்தின் பணியாற்றும் எல்லா மதங்களை பின்பற்றுபவர்களும் கலந்து சிறப்பித்தமையை பாராட்டினார்.

வாணிவிழாவுடன் இம்முறை ஆயித பூசையும் நிகழ்த்தி கும்பம் சொறியும் நிகழ்வும் இம்முறை சிறப்பாக நடந்தேறியது இவ் விழாவில் பங்கேற்று நடனம் நாட்டியம் பண்ணிசை பேச்சு சொற்பெழிவு ஆற்றியோருக்கு பரிசில்களும் சான்றிதல்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது அத்தோடு 1ம் ஆண்டு கல்வி கற்ற விருக்கின்ற சில மாணவ சிறார்களுக்கான கற்றல் உபகரணங்களும் அரசாங்க அதிபரினால் வழங்கப்பட்டது. 








SHARE

Author: verified_user

0 Comments: