4 Oct 2019

மட்டக்களப்பில் சிறார்களின் ஆற்றலை விருத்தி செய்ய கல்வியமைச்சு நடவடிக்கை.

SHARE
மட்டக்களப்பில் சிறார்களின் ஆற்றலை விருத்தி செய்ய கல்வியமைச்சு நடவடிக்கை.
கல்வியமைச்சின் சிறுவர்களின் ஆற்றலை விருத்தி செய்யும் விசேட திட்டத்தின் கீழ் சிறுவர்களின் ஆக்கங்களை வெளிப்படுத்தும் திட்டங்களை தற்போது கிழக்கு மாகாணத்தில் உள்ள முன்பள்ளிப்பாடசாலைகளில் கல்வித்திணைக்களம் முன்னெடுத்து  வருகின்றது.

இந்த விசேட திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு வொனிங்டன் முன்பள்ளி பாடசாலை மட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலகத்தின் முன்பள்ளி அபிவிருத்தி பிரிவின் வழிகாட்டுதலில்  ஏற்பாடு செய்திருந்த சிறார்களின் ஆக்க கண்காட்சி இக் கல்லூரி வளாகத்தில் இன்று இடம் பெற்றது.
இக் கல்லூரி அதிபர் திருமதி ஐp செல்வரானி லூக்             தலைமையில் நடைபெற்ற இந்த ஆக்க கண்காட்சியினை  மட்டக்களப்பு மாவட்ட வலயக்கல்வி அலுவலகத்தின் முன்பள்ளி அபிவிருத்தி உதவிப்பணிப்பாளர் ம.புவிராஐ; சம்பிரதாய பூர்வமாக இன்று காலை ஆரம்பித்து வைத்தார்.

இக் கண்காட்சியில் சிறார்களினால் உருவாக்கப்பட்ட கைவினை பொருட்கள் காட்சிக்குட்படுத்தபட்டிருந்தன. இங்கு உதவி பணிப்பாளர் புவிராஐ; கருத்து தெரிவிக்கையில் சிறார்களின் கற்றல் திறன்கள் வளர்வதற்கு இவ்வாறான விசேட திட்டங்களை கல்வியமைச்சு அமுல் நடத்திவருகின்றது இதற்கமைய சிறார்களின் வளர்ச்சியில் அக்கறை கொண்டு இவ்வாறான பயன்மிகு ஆக்கத்திறன் கண்காட்சியை ஏற்பாடு செய்திருந்த பாடசாலை நிருவாகத்தினருக்கு  நன்றி பாராட்ட கடமைப்பட்டுள்ளேன் என கூறினார்.

இந்நிகழ்வில் ஓய்வு பெற்ற சேவைக்கால கல்வி ஆலோசகர்   குணரெட்னம். முன்னாள் மில்கோ பால் சபையால் அதிகாரி வி. சிவபாலன் மற்றும் பெருமளவு பொதுமக்களும் கலந்து சிறப்பித்தனர். 

SHARE

Author: verified_user

0 Comments: