28 Oct 2019

மண்முனை பாலத்தில் பயணிகளுக்கு ஆபத்து? அதிகாரிகள் கண்டுகொள்வார்களா?

SHARE
மண்முனை பாலத்தில் பயணிகளுக்கு ஆபத்து? அதிகாரிகள் கண்டுகொள்வார்களா?
மடட்டக்களப்பு மாவட்டம் மண்முனை பாலத்தின் முன்பகுதியில் வீதி திருத்த வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு இன்னமும் நிறைவுறுத்தப்படவில்லை. இதனால், மழை காலத்தில் போக்குவரத்தின் போது பயணிகள் விபத்துக்களை எதிர்கொள்ள வேண்டி நேரிடுமென மக்கள் குறிப்பிடுகின்றனர்.

மழைகாலங்களில் குறித்த பகுதியில் 3அடிக்கு மேல் நீர் பாய்ந்து செல்கின்றமை வழமையானதொன்று. இந்நிலையில் வீதியின் அரைப்பகுதிக்கு கொங்கிறீட் இடப்பட்டும், மீதியான அரைப்பகுதிக்கு கொங்கிறீட் இடப்படாமலும் காணப்படுகின்றது. இதன் காரணமாக மழை காலங்களில் நீர் வீதிக்கு மேலால் பாய்கின்ற போது பள்ளம், மேடுகளை இனங்காணமுடியாத நிலையேற்படும். இதனால் போக்குவரத்தின் போது வாகனங்கள் சறுக்கி விழுவதற்கும், பயணிகள் விழுந்து விபத்துக்களுக்கு உள்ளாவதற்கும், நீரில் அடித்துச் செல்லப்படுவதற்கும் வாய்ப்புக்கள் உள்ளதாகவும் பயணிகள் தெரிவிக்கின்றனர்.

நோயாளர் காவுவண்டி, பேரூந்து, அலுவலக உத்தியோகத்தர்கள், வாகனங்கள், கனகரக வாகனங்கள் என பல வாகனங்களும், நபர்கள் பலரும் இவ்வீதியால் போக்குவரத்து செய்கின்றனர். மட்டக்களப்பு மேற்கு பகுதிக்கு செல்கின்ற அதிகளவான மக்கள் இவ்வீதியின் ஊடாக போக்குவரத்தில் ஈடுபடுகின்றனர். இந்நிலையில் இவ்வீதி திருத்தப்பணிகள் நிறைவுறாதுள்ளமை வேதனையளிப்பதாக மக்கள் கூறுகின்றனர். மேலும், குறித்த வீதியை உடனடியாக செப்பனிட்டு, பயணிகள் அச்சமின்றி செல்வதற்கான வசதிகளை ஏற்படுத்துமாறும் கோரிக்கை விடுகின்றனர்.






SHARE

Author: verified_user

0 Comments: