1 Oct 2019

தமிழ் தேசியக்கூட்டமைப்பு நல்லாட்சி அரசாங்கத்தில் அமைச்சுப் பெறுப்புக்களைப் பெற்று வடக்கு கிழக்கில் அபிவிருத்தியைச் செய்திருக்கலாம் - பொ.பிரபாகரன் .

SHARE
தமிழ் தேசியக்கூட்டமைப்பு நல்லாட்சி அரசாங்கத்தில் அமைச்சுப் பெறுப்புக்களைப் பெற்று வடக்கு கிழக்கில் அபிவிருத்தியைச் செய்திருக்கலாம் - பொ.பிரபாகரன் .
நல்லாட்சியை கவிழவிடாமல் பாதூகத்தது தமிழ் தேசியக்கூட்டமைப்பு அவ்வாறு ஆட்சியைக் காப்பாற்றியவர்கள் அரசாங்கத்தில் அமைச்சுப் பெறுப்புக்களைப் பெற்று வடக்கு கிழக்கில் அபிவிருத்தியைச் செய்திருக்கலாம். இளைஞர் யுவதிகளுக்கு தொழில்வாய்ப்பக்களை ஏற்படுத்திக் கொடுத்திருக்கலாம், வீதி அபிவிருத்திகள், கட்டடங்கள், போன்றவற்கை அமைத்திருக்கலாம்தானே என சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தமிழ் ஊடகப் பிரிவுக்குப் பொறுப்பான முத்துக்குமார் பிரபாகரன் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா பொதுஜனப் பெரமுன கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் ப.சந்திரகுமார் தலைமையில் மட்டக்களப்பில் அமைந்துள்ள அக்கட்சியின் காரியாலயத்தில் செவ்வாய்க்கிழைமை (01) நடைபெற்ற மக்கள் சந்திப்பின்போது கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார் இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்….

மக்கள் நல்லாட்சிக்கு வாக்களித்து மக்களுக்கு ஒன்றுமே நடைபெறவில்லை.  இந்த தீபாவெளிக்கு இனப்பிரச்சனைக்குத் தீர்வு பெற்றுத்தருவோம், என தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தெரிவித்து வருவது வழங்கம். ஆனால் பின்னர் அவர்கள் அதுபற்றிக் கதைப்பதே இல்லை. மட்டக்களப்பு மக்கள் சொல்வதெல்லாம் ஐயோ இந்த ஆட்சி மாறவேண்டும், ஒரு அபிவிருத்தியும் இல்லை, எமது மக்கள் 30 வருடம் பின்னோக்கிச் சென்றுவிட்டார்கள், என்றுதான் தெரிவிக்கின்றார்கள். 

தமிழ் மக்களின் சுயவாழ்வை மேம்படுத்தி தொழில்வாய்ப்புக்களை வழங்குவதற்கும், பிரதேசத்தை அபிவிருத்தி செய்வதற்கும், கோட்டபாய ராஜபக்ச தயாராகவுள்ளார். எனவே மக்களும் அவர்கள் மீது நம்பிக்கையாக இருக்கவேண்டும்.  இந்நிலையில் கோட்டபாய ராஜபச்கவுக்கு வாக்களிக்க வேண்டாம் எனவும் சிலர் தெரிவித்துவருகின்றார்கள். 

ஐக்கிய தேசியக் கட்சி சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராக தெரிவு செய்துள்ளார்கள். அவருக்கு தமிழ், சிங்கள, மற்றும் மஸ்லிம் மக்கள் அனைவரும் சஜித் பிரேமதாஸவுக்கு வாக்களித்திடுவார்களா என்ற எண்ணங்கள் மக்கள் மத்தியிலிருந்து எழலாம். ஆனால் எமக்கு அதனால் எந்தப்பிரச்சனையும் இல்லை. ஏனெனில் கடந்த உள்ளுராட்சி மன்றதேர்தலில் எமது கட்சி 52 இலட்சம் வாக்குகளைப் பெற்றிருந்தோம், ஐக்கிய தேசியக் கட்சி 30 லெட்சம் வாக்குகளைத்தான் பெற்றது. இதனை மக்கள் நன்கு விளங்கிக்கொண்டு செயற்பட்டால் சரிதான் என அவர் இதன்போது தெரிவித்தார். 









SHARE

Author: verified_user

0 Comments: