12 Oct 2019

ஜனாதிபதித் தேர்தலில் சரத் பென்சேக 2010 ஆம் ஆண்டு ஏன் தோல்வியடைந்தார் என்று தெரியுமா?

SHARE
ஜனாதிபதித் தேர்தலில் சரத் பென்சேக 2010 ஆம் ஆண்டு ஏன்  தோல்வியடைந்தார் என்று தெரியுமா?
அப்போது சரத் பொன்சேகாவை தமிழ் தேசியக்கூட்டமைப்பு கண்மூடிக்கொண்டு ஆதரிக்கவில்லை அப்போதிருந்த 22 நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒன்றிணைந்து அவரிடம், வடக்குகிழக்கு இணைக்கவேண்டும், அரசியல் தீர்வுவைப் பெற்றுத்தரவேண்டும், கைதிகளின் விடுதலை உள்ளிட்ட பல விடையங்களை உள்ளடக்கிய ஆவணங்களைப் பார்த்ததன் பின்னர் அதில் அவர் கையொப்பம் இட்டதன் பின்னர்தான் நாம் அவருக்கு ஆதரவு வழங்கினோம். அதனை நாங்கள் வெளியில் சொல்ல வேண்டாம் என்ற ரீதியில் நாம் அதனை நாம் சொல்லவில்லை. ஆனால் எமது சக நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் ஊடக சந்திப்பில் ஒன்றில் மக்களிடம் சொல்லவேண்டிய தேவை இருந்ததன் காரணமாக சரத் பொன்சேகவிடம் நாங்கள் செய்து கெண்ட எழுத்துமூலமான உடன்படிக்கை பெற்றிருக்கின்றோம் என்பதைக் கூறிவிட்டார். பின்னர் சிங்கள ஊடகங்கள் சரத் பொன்சேகா நாட்டைப் பிரித்துக்  கொடுக்கப்போகின்றார் எனத் தெரிவித்து, அதனை அடிக்கடி சிங்கள  ஊடகங்கள் வெளிப்படுத்தி காரணமாகத்தான் சரத் பொன்சேக 2010 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் தோலிவியுற்றார். என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாக்கியச்செல்வம் அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கதின் பெண் போராளியாகவிருந்து முதலாவது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மாலதியின் 32 ஆண்டு நினைவு தினம் வியாழக்கிழமை (10) மட்டக்களப்பு வெல்லாவெளியில் இடம்பெற்றது. இதன்போது கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்iயிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்iயில்…

பெண்விடுதலை பற்றிக்கூறியவர் பாரதியார் அதனை செயலில் காட்டியவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்த பெண்போராளிகள்தான். அதிலே முதலாவது வித்தாகியவர்தான் மாலதி. ஆண்களுக்குச் சரிநிகர் சமமாக பெண்விடுதலையை எவ்வாறு பெறலாம் என்பதை அவர்கள் செயலில் காட்டியிருந்தார்கள். மாலதியின் இலட்சியப் போராட்டத்தின் வடிவங்கள்தான் தற்போது மாறியுள்ளன, மாறாக இலட்சியங்கள் இதுவரையில் மாறவில்லை. தந்தை செல்வா எடுத்த அந்த அகிம்சை ரீதியான போராட்டம் தலைவர் பிரபாகரனால் ஆயுத ரீதியாக முன்நெடுக்கப்பட்டு தற்போது  இராஜதந்திர ரீதியாக எமது தலைவர் முன்நெடுத்துக் கொண்டிருக்கின்றார்.  தற்போது எமது விடுதலைப் போராட்டத்தை சர்வதேசம் தீர்மானிக்கின்ற சக்தியாக மாறியுள்ளது. 50 ஆயிரம் மாவிரர்கள் 3 இலட்சத்திற்கு மேற்பட்ட பொதுமக்களையும் இழந்த நிலையில் நாம் இவ்வாறான நிகழ்வுகளில் கலந்த கொண்டிருக்கின்றோம். 

போராளியின் நிகழ்வுகளையும், தமிழர்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட படுகொலை நிகழ்வுகளையும் ஏன் நினைவு கூரப்படவேண்டும் என்றால் இவ்வாறான தியாகங்களை எமது மக்கள் செய்திருக்கின்றார்கள் என்பதையும், தியாகம் செய்தவர்களை நினைவுவேண்டும் என்பதையும் எமது அடுத்த சந்ததியினர் அறியவேண்டும் என்பதற்காகத்தான். மாறாக இவ்வாறான நிகழ்வுகள் மீண்டும் ஒரு அயுதப்போராட்டத்தை ஆர்பிப்பதற்காக வேண்டியோ, அல்லது ஆயுதப்போராட்டம் ஏந்தி விடுதலை பெறுவதற்காகவோ அல்ல என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். 

முள்ளிவாய்க்காலில் இறுதி யுத்தம் நிறைவு பெற்று 10 வருடங்கள் நிறைவு பெற்றுள்ள போதிலும் எந்தவொரு தீர்வும் எமக்குக்  போச்சுவார்த்தை மூலமாக  கிடைக்கவில்லை.  தமிழீழ விடுதலைப் புலிகள் மௌனித்ததிற்குப் பின்னர் தமிழ் தேசியக் கூட்டமைப்பு எவ்வளவோ விட்டுக்கொடுப்புடன், மிகவும் நேர்த்தியாக செயற்பட்டுள்ளது. 

இலங்கையின் சுதந்திர தின நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கலந்து கொண்ட வரலாறு கிடையாது ஆனால் எமது தலைவர் சம்பந்தன் ஐயா கலந்து கொண்டிருக்கின்றார், எக்காலத்திலும் தேசியக் கொடியைப் பிடித்த வரலாறு கிடையாது ஆனால் ஒரு மேதினத்திலே தற்செயலாக ரணில் விக்கிரம சிங்க கொடுத்த கொடியை சம்மந்தன் ஐயா தேசியக் கொடியைப் பிடித்துவிட்டார் என்ற கருத்துக்கள் எழுந்திருந்தன. இவ்வாறு பல விட்டுக்கொடுப்புக்களைச் செய்திருந்த போதிலும் எமக்கு இதுவரையில் ஒரு நிரந்தர அரசியல் தீர்வு கிடைக்கவில்லை. இந்நிலையில்தான் நாங்கள் இன்னுமொரு ஜனாதிபதித் தேர்தலைச் சந்திக்கவிருக்கின்றோம். 

தமிழ் தேசியக் கூட்டமைப்பு தொடர்ற்சியாக ஜனநாயக ரீதியாக மக்கள் ஆணையைப் பெற்ற கட்சியாகத்தான் இன்றுவரை இருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் எமது முடிவை சரர்வதேசம் வரைப் பார்த்துக் கொண்டிருக்கின்றது. என்ன முடிவு அறிவிக்கப்போகின்றார்கள் என்பதை. ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் 35 வேட்பாளர்களில் கோட்டபாய ராஜபக்ச, சஜித் பிரேமதாஸ, மற்றும் அனுரகுமார திசாநாயக்க, ஆகிய 3 வேட்பாளர்கள்தான் முன்னிலை வேட்பாளர்களாக இருக்கின்றார்கள். இவர்களில் ஒருவர்தான் ஜனாதிபதியாக வரப்போகின்றார். ஏனைவர்கள் போடுகாய் வேட்பாளர்களாக உள்ளார்கள். இந்த 3 பிரதான வேட்பாளர்களுள் தமிழ் மக்;களுக்கான தீர்வைத் தரக்கூடியதாக எந்த வேட்பாளர்களும் இல்லை. 
18 வருடங்கள் இணைந்திருந்த வடக்குகிழக்கைப் பிரித்தது ஜே.வி.பி, தொடற்சியாக இனப்படுகொலையை செய்தது. ஐக்கிய தேசியக் கட்சி, தொடர்ந்து படுகொலை செய்து முள்ளிவாய்க்கால் வரைக்கும் படுகொலை செய்தது ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியாகும், இந்த விடையத்திதில்தான் நாங்கள் சிந்திக்க வேண்டியவர்களாகவுள்ளோம். 

2010 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட சரத் பொன்சேகவுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு வாக்களிக்குமாறு தெரிவித்திருந்தது. அதுபோல் தற்போது கோட்டபாய ராஜபக்சவுக்கு வாக்களிக்குமாறு கூறலாம்தானே என  சிலர் கேட்கின்றார்கள்.  2010 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட இருவருமே இனப் படுகொலையைச் சந்தித்தவர்கள். ஒருவர் கட்டளையிட்டவர், மற்றவர் களத்தில் நின்றவர். இதில் கூடியவர் யார் குறைந்தவர்யார் என்பதைப் பார்க்கவேண்டியதாக இருந்தது. அப்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு முடிவெடுப்பதற்கு முன்பே மக்கள் தீர்மானித்துவிட்டார்கள். அப்போது அஞ்சல் மூல வாக்களிப்பு நடைபெற்ற பின்னர்தான் நாங்கள் சரத் பென்சேகவிற்கு வாக்களிக்குமாறு கேட்டிருந்தோம். 

அப்போது சரத் பொன்சேகாவை தமிழ் தேசியக்கூட்டமைப்பு கண்மூடிக் கொண்டு ஆதரிக்கவில்லை அப்போதிருந்த 22 நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒன்றிணைந்து அவரிடம், வடக்குகிழக்கு இணைக்கவேண்டும், அரசியல் தீர்வுவைப் பெற்றுத்தரவேண்டும், கைதிகளின் விடுதலை உள்ளிட்ட பல விடையங்களை உள்ளடக்கிய ஆவணங்களைப் பார்த்ததன் பின்னர் அதில் அவர் கையொப்பம் இட்டதன் பின்னர்தான் நாம் அவருக்கு ஆதரவு வழங்கினோம். அதனை நாங்கள் வெளியில் சொல்ல வேண்டாம் என்ற ரீதியில் நாம் அதனை நாம் சொல்லவில்லை. ஆனால் எமது சக நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் ஊடக சந்திப்பில் ஒன்றில் மக்களிடம் சொல்லவேண்டிய தேவை இருந்ததன் காரணமாக சரத் பொன்சேகவிடம் நாங்கள் செய்து கெண்ட எழுத்துமூலமான உடன்படிக்கை பெற்றிருக்கின்றோம் என்பதைக் கூறிவிட்டார். பின்னர் சிங்கள ஊடகங்கள் சரத் பொன்சேகா நாட்டைப் பிரித்துக்  கொடுக்கப்போகின்றார் எனத் தெரிவித்து, அதனை அடிக்கடி சிங்கள  ஊடகங்கள் வெளிப்படுத்தி காரணமாகத்தான் சரத் பொன்சேக 2010 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் தோலிவியுற்றார். என அவர் தெரிவித்தார்.

  


SHARE

Author: verified_user

0 Comments: