27 Sept 2019

அவுஸ்திரேலியா நாட்டு உயர் ஸ்தானிகர் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இம்மாவட்டத்தின் வளர்ச்சிக்கு உதவுவது தொடர்பாக கலந்துரையாடினார்.

SHARE
அவுஸ்திரேலியா நாட்டு உயர் ஸ்தானிகர் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில்  இம்மாவட்டத்தின் வளர்ச்சிக்கு உதவுவது தொடர்பாக கலந்துரையாடினார்.
இலங்கைக்கான அவுஸ்திரேலியாநாட்டு உயர் ஸ்தானிகர் டேவிட் ஹொலி மட்டக்களப்பு மாவட்ட செயலகத்துக்கு வருகைதந்து இம்மாவட்டத்தின் வளர்ச்சிக்கு உதவுவது தொடர்பாக மாவட்டத்தின் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.சுதர்சினி ஸ்ரீகாந்த் மற்றும்மாவட்ட செயலக உயரதிகாரிகள், மற்றும் சர்வதேச தொண்டார்வ நிறுவனங்களின் பிரதிநிதி களையும் சந்தித்து கலந்துரையாடினார்.

மாவட்ட செயகத்துக்கு வருகைதந்த அவுஸ்திரேலியா நாட்டு உயர் ஸ்தானிகர்டேவிட் ஹொலிக்கு பாரம்பரிய கலாச்சார முறையில் மகத்தான வரவேற்பளிக்கப்பட்டது. அவுஸ்திரேலியா நாட்டு உயர் ஸ்தானிகருக்கு மாவட்ட அரச அதிபர் அலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்பில் மாவட்டத்தில் பலஇனமக்களும் ஐக்கியமாகவாழ்வது பற்றியும் இங்குள்ள இயல்பு வாழ்க்கைமற்றும் மாவட்டத்தின் முக்கிய தேவைகள் இங்குள்ள வளங்களின் தன்மை மற்றும் இளைஞர்களின் தொழிலில்லாபிரச்சினைகள்  பற்றியும் மேலதிக அரசாங்க அதிபர் திருமதிசுதர்சினி ஸ்ரீகாந்த் விபரமாக எடுத்துரைத்தார்

இதன்போது இம்மாவட்டத்தில் சுற்றுலாத்துறையின் வளர்ச்சிக்குநிறைய இயற்கைவழங்களிருப்பதால் இத்துறையின் வளர்ச்சிக்கு உதவுமாறும் நீண்டகாலமாக வெள்ள அனர்த்தங்களைச் சந்திக்கும் இம்மாவட்டத்துக்கு நிலையான வடிகான்கள் அமைக்கவும், உதவிகளை வழங்குமாறும் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி ஸ்ரீகாந்த் உயர்ஸ்தானிகரை கேட்டுக்கொண்டார்.

அதன் பின்னர் தொழில் வளிகாட்டுதல் தொடர்பான இணையத்தள மொன்றும் இங்கு உயர்யஸ்தானிகரால் அங்குராப்பணம் செய்துவைக்கப்பட்டது இதன்மூலம் சுற்றுலாத்துறைதொடர்பான தொழில்களையும் தொழில் பயிற்சிகளையும் தொழில் வாய்ப்பற்ற இளைஞர்களின் தொழிலில்லாபிரச்சினைக்கும் இலகுவான வழிகளை அடையமுடியுமென்றும் இங்கு தெரிவிக்கப்பட்டது.

இந்நிகழ்வில்மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி சசிகலாபுன்னிய மூர்த்தி காணிப்பிரிவின் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி நவரூபரஞ்சனி முகுந்தன் அவுஸ்திரேலியா நாட்டுதவியில் அபிவிருத்திதிட்டங்களை அமுல்படுத்தும் நிறுவனங்களின் பிரதிநிதிகள்பலரும் பிரசன்னமாகியிருந்தனர்.



SHARE

Author: verified_user

0 Comments: