27 Sept 2019

இலங்கை பூர்வீகமாக தமிழர்களுக்கு உரித்தான நாடாக இவிளங்கியிருக்கின்றது – யோகேஸ்வரன் எம்.பி.

SHARE
இலங்கை பூர்வீகமாக தமிழர்களுக்கு உரித்தான நாடாக இவிளங்கியிருக்கின்றது – யோகேஸ்வரன் எம்.பி.
இலங்கை நாடானது பூர்வீகமாக தமிழர்களுக்கு உரித்தான நாடாக இவிளங்கியிருக்கின்றது. ஏனெனில் தமிழர்கள் இந்நாட்டின் பூர்வீகக் குடிகள் என்பதனால் தமிழர்களுக்காக ஒரு வரவுக்காலம்கூட இந்த நாட்டின் சரித்திரத்தில் இல்லை. மாறாக பௌத்த சிங்களவர்களுக்கான வரவுக் காலத்தை மகாவம்சம் மிகத் தெழிவாகக் காட்டிநிற்கின்றது. இந்நாட்டை ஆண்டவர்கள் நாங்கள் இதற்போது இந்நாட்டில் அடிமையாக இருக்கின்றோம் என்ற ரீதியிலே வடக்கு கிழக்கு இணைந்த தாயகத்தில் முதன் முதலாக தந்தை செல்வா அவர்கள் அகிம்சை ரீதியாக தமிழர்களுக்கான உரிமைப் போராட்டத்தை ஆரம்பித்தார். அவரின் போராட்டத்தின் முடிவு சரியானதாக அமையாததால் 1986 ஆம் ஆண்டு வடக்கு கிழக்கு இணைந்த தாயகத்தைப் பிரகடனப்படுத்தியிருந்தது.

என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து உண்ணாவிரதமிருந்து உயிர் நீத்த தியக தீபம் திலீபனின் 32 வது  நினைவு வணக்க நிகழ்வு மட்டக்களப்பு மண்டூர் - கணேசபுரம் கண்ணகி விளையாட்டுக் கழக மைதானத்தில் புதன்கிழமை(25) மாலை நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்….

இந்தியா தங்களைத் தாங்களே ஆளுகின்ற நிலமையை உருவாக்கியது காந்தியடிகளின் அகிம்சைவழிப் போராட்டம் என என அப்போதிருந்து தற்போதுவரை தெரிவித்து வருகின்றது. அவரின்போராட்டத்தினால் மேலைத்தேய நாடுகள் 1947 ஆம் அண்டு இந்தியாவிற்குச் சுதந்திரத்தைப் பெற்றுக் கொடுத்தார்கள். பின்னர் 1948 இல் இலங்கைக்குச் சுதந்தரம் கிடைக்கின்றது. இந்தியா அகிம்சையை நம்புகின்றது. என்பதனால்தான் இலங்iயில் ஒரு போராளியாக இருந்த திலீபன் அவர்கள் அகிம்சைவழியைக் கையிலெடுத்து 1987.09.15 அன்று தனது உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பிக்கின்றார். இந்தியாவை நம்பித்தான் திலீபன் அவர்கள் 5 அம்சக்கேரிக்கையை முன்வைத்து உண்ணாநோம்பிருந்து உயிர் நீத்தார். 

இலங்கத் தமிழர்களின் பிரச்சனைகள் தொடர்பில் ஆரம்பத்தில் இந்திராக்காந்தி கூடிய அக்கறை காட்யிருக்கின்றார். அதன்பின்னர் ராயுகாந்தி அந்த அக்கறையைத் தொடர்ந்தார். அதன்நிமிர்த்தம்தான் 13 வது சீர்திருத்தத்தை அடிப்படையாகக் கொண்டு இலங்கை இந்திய ஒப்பந்தம் கொண்டுவரப்பட்டது. பின்னர் அதிலே குறைபாடு இருக்கின்றது என்பதை அப்போதிருந்த எமது தலைவர்கள், தற்போதைய தலைவர் சம்மந்தன் ஐயா அவர்கள் வரைக்கும் முன்னாள் ஜனாதிபதி மறைந்த ஜே.ஆர்.ஜெயவர்த்தனவுக்குச் சுட்டிக்காட்டியிருந்தார்கள். அந்த சுட்டிக்காட்டல்கூட அவர்களால் பிற்காலத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டடு அதற்கு வழிவகுக்கப்படவில்லை. 

பின்னர்தான் 1987 இல் ஆயுதப்போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த காலகட்டத்தில், திலீபன் உயிரைச் துச்மாக மதித்து அகிம்சையைக் கையில் எடுத்து போராடினார். சர்வதேசம் தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாத முத்திரை குத்துகின்றது. ஆனால் தமிழீழ விடுதலைப்புலிகள் ஒரு காலகட்டத்தில் அகிம்சையை ஆயுதமாக எடுத்திருந்தார்கள். அவர்கள் அகிம்சையைக் கணக்கிலெடுக்கவில்லை, அகிம்சையால் சுதந்திரம் பெற்ற இந்திய நாடும் கவனத்திலெடுக்கவில்லை. இது ஒரு வரலாறாகும். இதனைச் சர்வதேச சமூகம் ஏற்றுக் கொள்ளவேண்டும். திலிபன் கேட்டுப்போராடிய விடையங்கள் இன்றும் இந்த நாட்டிலே நிறைவேறாமல்தான் உள்ளன. 

திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் இடம்பெறுகின்றன. அவசரகாலச் சட்டம் நடைமுறையிலுள்ளது. சிறைகளில் இளைஞர்கள் இன்றும் வாடுகின்றார்கள். திலீபனின் கோரிக்கைகள் இன்றுவரை ஏற்றுக் கொள்ளாத அரசாங்கம், அகிம்சைப் போராட்டத்தையும் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆதனால்தான் ஆயுதப்போராட்டம் உருவெடுத்தெது.

இலங்கை அரசு தேசிய தௌகீத் ஜமாத் அமைப்பை புலனாய்வாளர்களாக வைத்திருந்தார்களே தவிர அவ்வமைப்பை அவர்கள் புலனாய்வு செய்யவில்லை. அதன் வேதனையை தமிழ் மக்கள் அண்மையில் அனுபவித்திருந்தார்கள். மாறாக அகிம்சைக்கா நாங்கள் நிகழ்வுகளை ஏற்பாடு செய்கின்றபோது எங்கைளப் புலனாய்வு செய்வதற்கு பலர் எம்மைச் சுற்றி நிற்கின்றார்கள். புலனாய்வாளர்கள் சரியாகச் செயற்ட்டிருந்தால் எமது மக்கள் ஏப்ரல் 21 இல் அழிந்திருக்கமாட்டார்கள். 

திலீபன் காட்டிய பாதை தமிழர்களின் வரலாற்றில் மறக்கவும், மறைக்கவும் முடியாது, இந்திய அரசாங்கம் எமக்கு தீர்வு பெற்றுக் கொடுத்திருந்தால் இவ்வாறான நிலமை ஏற்பட்டிருந்திருக்காது. இலங்கையின் துன்பியலில் இந்தியாவுக்கும் பங்கு இருக்கின்றது. இலங்கையில் நடைபெற்ற இறுத்திக்கட்ட யுத்ததின்போது இலங்கை அரசுக்கு இந்திய இராணுவம் உதவியது. அதற்குப்பின்னர் தமிழர்களுக்கு நியாயமான தீர்வைப் பெற்றுக் கொடுப்பதற்கு இந்திய தம்மை முழுமையாக அற்பணிக்கவில்லை.

எனவே 13 வது திருத்ததிற்கு அப்பால் சென்று எங்களை நாங்களே ஆளுகின்ற நியாயமான தீர்வைத்தான் நாங்கள் எதிர்பார்க்கின்றோம். திலீபனின் தியாகம் என்றோ ஒரு நாள் இந்த மண்ணில் மலரும். அதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு முன்னின்று செயற்படும். என அவர் இதன்போது தெரிவித்தார்.

SHARE

Author: verified_user

0 Comments: