29 Sept 2019

பக்கத்து வீட்டில் பாதித் தேங்காய் கடன்வாங்கி கறி சமைக்கும்போது எனது 7 தென்னை மரங்களிலிருந்த 140 தேங்காய்கள் நள்ளிரவில் மாயம் பொலிஸில் முறைப்பாடு

SHARE
பக்கத்து வீட்டில் பாதித் தேங்காய் கடன்வாங்கி கறி சமைக்கும்போது எனது 7 தென்னை மரங்களிலிருந்த 140 தேங்காய்கள் நள்ளிரவில் மாயம் பொலிஸில் முறைப்பாடு.
பராமரிக்கப்பட்ட தென்னை மரங்களிலிருந்த சுமார் 140 தேங்காய்கள் நள்ளிரவில் மாயமானதாக ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை 29.09.2019 பதிவு செய்யப்பட்டுள்ள அந்த முறைப்பாட்டில் முறைப்பாட்டாளரான ஐயங்கேணியைச் சேர்ந்த சேகுமுஹம்மது செய்னம்பு (வயது 60) என்பவர் விவரங்களைத் தெரிவித்துள்ளார்,

முறைப்பாட்டில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
ஏறாவூர் 3ஆம் குறிச்சியிலுள்ள எனது சகோதரனின் வீட்டையும் வீட்டு வளவிலுள்ள பயன்தரும் மரங்களையும் நானே பராமரித்து வருகின்றேன்.

அங்குள்ள 7 தென்னை மரங்கள் அதிகளவான தேங்காய்களுடன் காணப்பட்டன. ஆனால் சனிக்கிழமை நான் வழமைபோன்று தென்னை மரங்களைப் பராமரிப்பதில் ஈடுபட்டிருந்தபோது தென்னை மரத்தில் தொங்கிக் கொண்டிருந்த பழுத்த நிலையிலுள்ள சுமார் 140 தேங்காய்கள் மாயமாய் மறைந்து விட்டுள்ளன.

தேங்காய் நன்றாக முற்றிப் பழுக்கட்டும் என்பதற்காக நான் அவற்றைப் பிடுங்காமல் மரத்திலேயே விட்டு வைத்திருந்தேன்.

அதேவேளை சனிக்கிழமை நான் அயல் வீட்டில் பாதி தேங்காய் கடன் வாங்கி கறி சமைத்திருந்தேன்.

அவ்வாறிருக்போது எனது பராமரிப்பிலிருந்த தேங்காய்கள் திருடப்பட்டுள்ளது வருத்தமளிக்கிறது.

எனவே, சந்தேக நபரிடமிருந்து தகுந்த நஷ‪;ட ஈடு பெற்றுத் தரப்படுவதோடு சறந்தேக நபரைப் பொலிஸார் எச்சரிக்கவும்வேண்டும” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இச்சம்பவம்பற்றி ஏறாவூர் பொலிஸார் விசாரiணைகளில் ஈடுபட்டுள்ளனர்.


SHARE

Author: verified_user

0 Comments: