23 Aug 2019

சித்தாண்டியில் காணாமல் ஆக்கப்பட்டோரின் 29 வது ஆண்டு நினைவேந்தல்

SHARE
மட்டக்களப்பு சித்தாண்டி சித்திரவோயுத சுவாமி ஆலயத்தில் தயஞ்சமடைந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் 29 வது ஆண்டு நினைவேந்தல் சித்திரவேலாயுத சுவாமி ஆலய முன்றலில் வெள்ளிக்கிழமை (23) நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட சர்வமத ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில் சர்வமத பிரதிநிதிகள் காணாமல் ஆக்கப்பட்டவர்களறின் குடும்ப உறவனர்கள் என பலரும் கலந்துகொண்டனர். ஈகைச் சுடர் ஏற்றி காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்காக பிரார்தனை நடைபெற்றன.

1990ம் ஆண்டு ஆவணி மாதக் காலப்பகுதியில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக தொடர்ச்சியான சுற்றிவலைப்புக்கள் நடந்து கொண்டிருந்த வேளையில் வாழைச்சேனை, பேத்தாளை, முறாவோடை, கிண்ணையடி, கிரான், சந்திவெளி, முறக்கொட்டான்சேனை, சித்தாண்டி, மாவடிவேம்பு ஆகிய கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பொது மக்கள் உயிர் அபாயம் கருத்தி சித்தாண்டி சித்திரவேலாயுத சுவாமிஆலயத்தில் தஞ்சமடைந்திருந்தனர்.

இங்கு தஞ்சமபெற்றிருந்த ஆயிரக்கணக்கான தமிழ்களில் நூற்றுக்கணக்கானோரை ஓகஸ்ட் மாதம் முதலாதம் திகதி முதல் 31ஆந் திகதிவரை இராணுவத்தினரால் விவாரணைக்கென அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்களுக்கு என்ன நடந்தது என்பது இதுவரை தெரியவில்லை. இது தொடர்பாக பலமுறை ஆணைக்குழுக்குழுக்கள் முன்னிலையில் சாட்சியமளித்த போதிலும் இதுவரை எந்தவித ஆக்கபூர்வமாதன பதிலும் எமக்குகிடைக்கவில்லை என காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்தனர். 





SHARE

Author: verified_user

0 Comments: