30 Aug 2019

2019/2020 ஆம் ஆண்டுக்கான பெரும்போகப் பயிர்ச்செய்கைக்கான ஆரம்பக் கூட்டங்கள்

SHARE
மட்டக்களப்பு மாவட்டத்தின் 2019/2020 ஆம் ஆண்டுக்கான பெரும்போகப் பயிர்ச்செய்கைக்கான ஆரம்பக் கூட்டங்கள் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் இரண்டாம் வாரமளவில் நடைபெறவுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட விவசாயப் பணிப்பாளர் வை.பீ.இக்பால் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்ட விவசாயப் பணிப்பாளர் பெரும்போகப் பயிர்ச்செய்கை சம்பதமாக அவர் வியாழக்கிமை (29) தெரிவிக்கையில்....

உன்னிச்சை, உறுகாமம், கித்துள்வெவ, வெலிக்காகண்டி, நவகிரி, தும்பங்கேணி, கடுக்காமுனை, புழுகுணாவி, அடைச்சகல், கட்டுமுறிவு, மதுரங்கேணி, கிரிமிச்சை, வாகனேரி, புணாணை, தரவை, வடமுனை, ஆகிய நீர்ப்பாசனத் திட்டங்களைப் பயன்படுத்தி பெரும்போகப் பயிர்ச்செய்கை மேற்கொள்ளும் விவசாயிகளும், குத்தகைதாரர்களும், காணிச் சொந்தக்காரர்களும் இக்கூட்டத்திற்கு சமூகமளிக்குமாறு வேண்டப்படுகின்றீர்கள்.

அந்தவகையில் மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச விவசாயிகளுக்கான பெரும்போகப் பயிர்ச்செய்கை ஆரம்ப கூட்டம் வவுணதீவு பிரதேச செயலகத்தில் செப்டம்பர் மாதம் 9 ஆம் திகதி காலை 9.30 மணிக்கும், அன்றையதினம் ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச விவசாயிகளுக்கான ஆரம்பக்கூட்டம்  செங்கலடி பிரதேச செயலகத்தில் பிற்பகல் 2.30 மணிக்கும், போரதீவுப்பற்று பிரதேச விவசாயிகளுக்கான ஆரம்பக் கூட்டம் 10ஆம் திகதி வெல்லாவெளி கலாச்சார மண்டபத்தில் முற்பகல் 9.30 மணிக்கும், அன்றையதினம் மண்முனை தென்மேற்கு பட்டிப்பளை பிரதேச விவசாயிகளுக்கான கூட்டம் கொக்கட்டிச்சோலை கலாச்சார மண்டபத்தில் பிற்பகல் 2.30 மணியளவிலும், கோரளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச விவசாயிகளுக்கான ஆரம்பக்கூட்டம் செம்ரெம்பர் மாதம் 12ஆம் திகதி முற்பகல் 9.30 மணியளவில் வாகரை பிரதேச செயலகத்திலும், அன்றையதினம் கோரளைபற்று தெற்கு கிரான் பிரதேச விவசாயிகளுக்கான கூட்டம் கோரகல்லிமடு கிரான் ரெஜி மண்டபத்தில் பிற்பகல் 2.30 மணியளவில் இடம்பெறவுள்ளது.

மேற்குறித்த இடங்களிலும், குறித்த திகதிகளிலும் நடைபெறும் ஆரம்பக்கூட்டத்திற்கு அனைத்து விவசாயிகளும் வருகை தந்து பெரும்போகப் பயிர்செய்கை ஆரம்பத் திகதி நிர்ணயித்தல், விதைப்புவேலைகள், விவசாயிகளின் நாட்சம்பளம் நிர்ணயித்தல், உரமானியம் விநியோகம், கால்நடைகளை மேச்சல்தரைக்கு அப்புறப்படுத்தல், அறுவடைக்காலம் நிர்ணயித்தல், தண்ணீர் பிரச்சனை,யானைப்பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

SHARE

Author: verified_user

0 Comments: