21 Jul 2019

நிதி ஒதுக்கீடுகளை வைத்துக் கொண்டு ஊழல் மோசடி இலஞ்சம் இல்லாமல் மக்களுக்கு அபிவிருத்திகளைச் செய்யவேண்டும் - ஸ்ரீநேன் எம்.பி

SHARE
நிதி ஒதுக்கீடுகளை வைத்துக் கொண்டு ஊழல் மோசடி இலஞ்சம் இல்லாமல் மக்களுக்கு அபிவிருத்திகளைச் செய்யவேண்டும் - ஸ்ரீநேன் எம்.பி
எமது வருங்கால பிள்ளைகளை எப்படியாவது கற்பித்துவிடவேண்டும். கல்வியினூடாக எதிர்காலத்தில் எமது இப்பிரதேசம் மாற்றம் ஏற்படவேண்டும். இதுவரையில் (கம்பரெலிய) ஊரக எழுச்சித்திட்டத்தினூடாக 50 கோடி ரூபா பணம் கிடைக்கப்பெற்றுள்ளது. இவற்றினைவிட அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல ஊடாக வீதி அபிவிருத்திக்கு 7 கோடி ரூபாக்களும், அமைச்சர் கபீர் காசிம் ஊடாக 5 கோடி ரூபாவும், இதனைவிட வரவு செலவுத்திட்டத்தின் பன்முகப்படுத்தப்பட்ட நிதிஒதுக்கீட்டில் நாக்கரைக் கோடி ரூபா, மற்றம் நீர் குழாய் பொருத்துவதற்குமாக சேர்த்து நான் நாடாளுமன்ற உறுப்பினராக வந்ததன் பின்னர் எனக்கு இதுவரையில் மொத்தம் 72 கோடி ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த ஒதுக்கீடுகளை வைத்துக் கொண்டு ஊழல் மோசடி இலஞ்சம் இல்லாமல் மக்களுக்கு அபிவிருத்திகளைச் செய்யவேண்டும்.

என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளர். (கம்பரெலிய) ஊரக எழுச்சித்திட்டத்தின் கீழ் போரதீவுப்பற்றுப் பிரதேச சபை உறுப்பினர் இ.தியாகராசாவின் பரிந்துரைக்கமைய பிலாலிவேம்பு கிராமத்தில் அமைக்கப்படவுள்ள ஆலயத்திற்கு அடிக்கல் நடுத் நிகழ்வு புதன்கிழமை (17) இம்பெற்றது. இதன்போது கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் குறிப்பிடுகையில்…..
வீதி அபிவிருத்திகளுக்காக ஒரு பிரதேசத்திற்குட்பட்ட கிராமாத்திற்கு 20 இலட்சம் ரூபாய் ஒதக்கீடு செய்யப்பட்டது அங்கு கிட்டத்தட்ட 200 கொங்றீட் வீதி போடப்பட்டுள்ளது. இதே போன்று இன்னுமொரு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கிராமத்திற்கு 20 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டபோது அற்கு 140 மீற்றர் தூரம்தான் கொற்றீட் வீதி போடப்பட்டுள்ளது. இவ்வாறுதான் நிலமை இருக்கின்றது. பொதுநலன்களைவிட சுயநலன்கள் அதிகரித்துவிட்டால் வீதிகள் செப்பனிடுவதற்கு பணம் செலவளிப்பதைவிட வீடுகளில் செலவளிப்பது அதிகரித்துவிடும். 

எமது ஒதுக்கீடுகளில் நாங்கள் 5 வீதம், 10 வீதம் என கொமிசன் கேட்பதில்லை, எமது ஒதுக்கீடுகளில் ஊர் முழுமையாக அனுபவிக்கவேண்டும் என மேற்கொண்டு வருகின்றோம். சிலவேளைகளில் எம்மைப்பற்றி பொய்யான வாந்திகள் பரப்பப்படுவதும் உண்டு ஒருவர் தெரிவித்திருந்தார் சம்மந்தன் ஐயா 3 கோடி ரூபா வாங்கியுள்ளதாகவும், இன்னுமொருவர் தெரிவித்திருந்தார் மண்டூர் பாலம் அமைப்பதற்கு வந்த நிதியை கூட்டமைப்பு எடுத்து செலவு செய்துவிட்டது என தெரிவித்திருந்தார். இவ்வாறு சிலர் பொய்யுரைத்து அரசியல் செய்து வருகின்றார்கள். பொய்களை உரைத்து அரசியல் செய்கின்றவரகள் ஒருபோதும் வெற்றிபெறமுடியாது.  

உயர் பதிவிகளில் இருக்கின்றவர்களில் சிலர் செருக்குடனும், தலைக்கனத்துடனும், நடந்து கொள்கின்றார்கள். எனவே அனைவரும் மனிதர்கள் என்ற எண்ணத்துடன் நடந்து கொள்ளவேண்டும். அதுபோல் அரசியல் செய்வதும் உழைப்புக்காக அரைசியல் செய்யக்கூடாது. எங்களிடமிருந்த ஒரு எம்.பி. கடந்த காலத்தில் ஏற்பட்ட அரசியல் சதி முயற்சியில் எங்களிடமிருந்து பறந்துவிட்டார். தமிழ் மக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பக்கு வாக்களிப்பது அந்தக் கட்சியில் 5 ஆண்டுகளாவது இருந்து மக்களுக்காக உழைக்கவேண்டும் என்றுதான், மாறாக சுயநலத்துக்காக உழைத்து சொத்துக்களைச் சேர்க்கவேண்டும் என்பதற்காக அல்ல. அதுபோல்தான் எமது கட்சியில் போட்டியிட்ட சகோதரி ஒருவர் 46000 வாக்குகளைப் பெற்றார். பின்னர் அவர் மகிந்த ராஜபக்சவின் கட்சியில் சேர்ந்தார் அப்போது அவர் 1600 வாக்குகளைத்தான் பெற்றார். இவ்வாறுதான் அம்பாறையில் பியசேன என்பவரும் பறந்தார். என தெரிவித்த அவர் தற்போது நவீன ரீதியில் மொட்டைக்கடிதங்களை தற்போதைய முகநூல்களில் சிலர் எழுதுகின்றார்கள். எனவும் குறிப்பிட்டார்.


SHARE

Author: verified_user

0 Comments: