29 Jul 2019

ஜனாதிபதி செயலகதேசிய உணவு உற்பத்தி நிகழ்ச்சி நிலக்கடலை உற்பத்தி அறுவடைவிழா

SHARE
ஜனாதிபதி செயலகதேசிய உணவு உற்பத்தி நிகழ்ச்சி நிலக்கடலை உற்பத்தி அறுவடைவிழா.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனையில் ஜனாதிபதி செயலகம் அமுல்படுத்தும் தேசிய உணவு உற்பத்தி நிகழ்ச்சி திட்டத்தின்கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் மறுபயிர் ஊக்குவிப்பு அடிப்படையில் நிலக்கடலை உற்பத்திசெய்கை மாவட்ட செயலகத்தின் மாவட்ட  விவசாயத் திணைக்களத்தின் மேற்பார்வையில் 13 பிரதேச செயலகப்பிரிவில் சுமார் 345 ஏக்கரில் மேற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

மாவட்ட செயலாளரும் அரசாங்க அதிபருமான மாணிக்கம் உதயகுமாரின் வேண்டுகோளின்பேரில் நிலக்கடலை உற்பத்திசெய்கைக்கு இங்கு ஜனாதிபதி செயலகம் சுமார் 48 இலட்சம்ரூபாவை ஒதுக்கீடு செய்துமுழுக்க மானிய உதவியில் 700 விவசாயிகளுக்கு சுமார் 13 ஆயிரத்தி 600 கிலோ கிராம் விதை நிலக்கடலை அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

குறித்த நிலக்கடலை அறுவடைவிழா வியாழக்கிழமை (25) ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவின் மாவடியோடைவேப்பவட்டவான் பகுதியில் நடைபெற்றது. மாவட்ட விவசாய பணிப்பாளர் வை.வீ. இக்பால் தலைமையில் நடைபெற்ற இந்த அறுவடைவிழாவில் ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச செயலாளர் என்.வில்வரத்தினம் மட்டக்களப்பு விவசாய பிரதிப்பணிப்பாளர் வீ..பேரின்பராசா தேசிய உணவு உற்பத்தி நிகழ்ச்சி திட்டத்தின் கிழக்கு மாகாண ஒருங்கிணைப்பாளர் கே.ஜெ.செகமனசிங்க தேசிய உரச்செயலக உதவிப்பணிப்பாளர்  கே.எல்.எம்.சிறாஜுன்.பிரதேச கணக்காளர்.ஜோ.ஆனந்தராஜ் உட்பட பல அதிகாரிகளும், விவசாயிகளும் இதன்பேது பிரசன்னமாகியிருந்தனர் 









SHARE

Author: verified_user

0 Comments: