3 Jun 2019

முஸ்லிம் அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் இராஜினாமா

SHARE
சகல முஸ்லிம் அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களும் என அனைவரும் தங்களது பதவிகளை இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் சற்று முன்னர் தெரிவித்தார்.
அமைச்சர் ரிஷாட் பதியுதீன் உள்ளிட்ட 9 முஸ்லிம் அமைச்சர்கள், அமைச்சரவையில் இருந்து வெளியேறியுள்ளதாக ரவூப் ஹக்கீம் சற்றுமுன்னர் தெரிவித்தார்.
முஸ்லிம்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசாங்கம் தவறியதாக குற்றம்சாட்டி அவர்கள் தமது பதவியை இராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளனர் என்றும் அவர் கூறினார். இருப்பினும் பின்வரிசையில் இருந்து அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்குவோம் என்றும் அவர் தெரிவித்தார்.
அந்தவகையில் 4 அமைச்சர்கள், 4 இராஜாங்க அமைச்சர்கள், ஒரு பிரதியமைச்சர் என ஒன்பது முஸ்லிம் அரசியல்வாதிகள் தமது அமைச்சுப் பதவிகளைத் துறப்பதாக அறிவித்துள்ளனர்.
அதன்படி அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், ரிசாட் பதியுதீன், எம்.எச்.ஏ.ஹலீம், கபீர் ஹாசீம் மற்றும் எச்.எம்.எம். ஹரீஸ், அலிசாஹீர் மௌலானா, பைசல் காசீம், அமீர் அலி ஆகிய இராஜாங்க அமைச்சர்களும் பிரதியமைச்சரான அப்துல்லா மஹ்ரூப்பும் அடங்குகின்றனர்.
மேலும் முஸ்லிம் உறுப்பினர்கள் மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில் ஒரு மாதத்துக்குள் விசாரணை நடத்தி தீர்வு காணப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ரிஷாட் உட்பட முஸ்லிம் அமைச்சர்கள் சற்றுமுன்னர் இராஜினாமா?
அமைச்சர் ரிஷாட் பதியுதீன் உள்ளிட்ட முஸ்லிம் அமைச்சர்கள் சற்றுமுன்னர்  அமைச்சர் பதவிகளை இராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளனர்.
முஸ்லிம்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசாங்கம் தவறியதாக குற்றம்சாட்டி  அவர்கள் தமது பதவியை இராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளனர்.
இதில் அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் அமைச்சரவை அந்தஸ்து அற்ற அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களும் அடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலை தொடர்ந்து அமைச்சரான ரிஷாட் பதியுதீன் மற்றும் ஹிஸ்புல்லா, அசாத் சாலி ஆகியோரை பதவி விலக்குமாறு பலத்த கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் இன்று அசாத் சாலி மற்றும் ஹிஸ்புல்லா ஆகியோர் தமது ஆளுநர் பதவியினை இராஜினாமா செய்திருந்தனர்.
இதனை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் ஏற்றுக்கொண்டுள்ள நிலையில் தற்போது முஸ்லிம் அமைச்சர்கள் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.(tx.a.n)

SHARE

Author: verified_user

0 Comments: