10 Jun 2019

தலதா மாழிகைக்கு முன்னால் ஒரு புத்தபிக்கு நடகமாடுகின்றார் என்பதற்காக, அவருக்கு உறுதுணையாக நாங்கள் நாடகமாடக் கூடாது.

SHARE
தலதா மாழிகைக்கு முன்னால் ஒரு புத்தபிக்கு நடகமாடுகின்றார் என்பதற்காக, அவருக்கு உறுதுணையாக நாங்கள் நாடகமாடக் கூடாது.
இன்றுவரை இந்த புத்த பிக்குகள் என்ன செய்து கொண்டிருக்கின்றார்கள்; முல்லைத்தீவு நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தில் புத்தர் சிலை வைத்து விகாரை அமைப்பதற்கும் ஒரு புத்த பிக்கு முயற்சிக்கின்றார், அதுபோல் திருகோணமலை கன்னியா வென்னீர் ஊற்றுப் பகுதியில் பிள்ளையார் சிலையை உடைத்து விட்டு புத்தர் சிலை வைப்பதற்கு இன்னுமொரு பிக்கு முயற்சித்துக் கொண்டிருக்கின்றார். மட்டக்களப்பு மங்களராமய புத்த பிக்கு கெவுளியாமடு கிராமத்தில் கிராம சேவகர் ஒருவரை கெட்ட வார்த்தைகள் கூறி அவதூறு செய்தார், அதே பிக்கு மட்டக்களப்பு பிள்ளையாரடியிலே புத்தர் சிலை வைக்க முயற்சி செய்தார், தலதா மாழிகைக்கு முன்னால் ஒரு புத்த பிக்கு நாடகமாடுகின்றார் என்பதற்காக, அவருக்க உறுதுணையாக நாங்கள் நடகமாடக் கூடாது. மட்டக்களப்பிலே அந்த நாடகம் அரங்கேறியிருந்தது.  

என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்துள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் அவர்களின் கம்பரெலிய வேலைத் திட்டத்தினூமாக 60 லெட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டில் மேற்கொள்ளப்பட்ட 3 வீதிகள் திறந்து வைக்கும் நிகழ்வு மட்டக்களப்பு களுதாவளையில் ஞாயிற்றுக்கிழமை (09) இடம்பெற்றது.

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை தவிசாளர் ஞானமுத்து யோகநாதன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கிராம பெரியோர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், பிரதேச சபை உறுப்பினர்கள், பொது மக்கள் என பலரும் இதன்போது கலந்து கொண்டிருந்தனர். இதன்போது கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலே கோவிந்தன் கருணாகரம் (ஜனா) இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும்  தெரிவிக்கையில்… 

நல்லாட்சி என்ற பெயரில் 2015 ஆம் ஆண்டு உருவாகி தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அதரவுடன் இன்றுவரை  நிலைத்திருக்கின்ற இந்த ஆட்சியில் பல அபிவிருத்தித் திட்டங்கள் எமது மாவட்டத்தை நோக்கியும் வந்து கொண்டிருக்கின்றன. இந்த நேரத்தில்,  இந்த அரசுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு முண்டு கொடுத்துக் கொண்டிருக்கின்றது. என்ற சிலரின் இழிவான வார்த்தைக்கு மத்தியில் தற்போது பாதிக்கப்பட்ட எமது மக்களின் தேவைகளை நிறைவேற்றிக் கொண்டிருக்கின்றது. எமது வடக்கு கிழக்கு மக்கள் கடந்த போர் சூழல் காரணத்தினர் கல்வி கலை, வேலைவாய்ப்பு, கலாசாரம். பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்ட எமது மக்களுக்கு தற்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு  சில அபிவிருத்திகளைச் செய்து கொண்டிருக்கின்றது.

10 வருடங்களாக தமிழ் மக்களும். தமிழ் தேசியக் கூட்டமைப்பும் எமது போராட்த்திற்கு தீர்வு காணவேண்டும் நாங்கள் இழந்த உரிமைகளை மீழப் பெற்று எங்களை நாங்களே அளக்கூடிய ஒரு பிரதேசத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும். அப்பிரதேசத்திலே சுய நிர்ணய உரிமைகளுடன் எமது மக்கள் சந்தோசமாக வாழ வேண்டும் என்று, இராஜ தந்திர ரிதியாக போராடிக் கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த நேரத்திலே கடந்த ஏப்ரல் 21 இல் இடம்பெற்ற குண்டுத்தாக்குதலின் பின்னர் இந்த நாடு அல்லோல கல்லோலப் பட்டுக் கொண்டிருக்கின்றது. 

தமிழ் பேசும் முஸ்லிங்கள் மாத்திரம் அல்ல சில இடங்களில் தமிழில் பேசினால், எங்களையும்கூட இந்த நாட்டின் பெரும்பான்மைச் சமூகத்தினர் சந்தேகக் கண்கொண்டு பார்க்கக்கூடிய நிலை தோன்றியுள்ளது. இத்தனைக்கும் அந்தப்பிரச்சனை உருவெடுத்ததற்கு எமது மாவட்டத்தின் காத்தான்குடியில் நிகழ்நிதிருக்கின்றதென்றால் அது மட்டக்களப்புக்குப் பெருமையா காத்தான்குடிக்கு இழிவா என்ற கேள்வியும் எழும்புகின்றது. இந்தப் பிரச்சனை காத்தான்குடியில் உடனடியாக உருவெடுத்திருக்கவில்லை. அது குறைந்தது 5 அல்லது 6 ஆண்டுகளுக்கு முன்னர் இது உருவெடுத்திருக்க வேண்டும்.  ஆனால் காத்தான்குடியிலுள்ள 28 வருடங்கள் அரசியல அதிகாரத்திலிருக்கின்ற கிழக்கு மாகாண முன்னாள் ஆளுனர் அவர்கள் அவருக்கும் இந்தப்பிரச்சனைக்கும் சம்மந்தம் இல்லை, அவருக்கு எதுவும் தெரியாது என்று கூறுவது முழுப் பூசணிக்காயை சோற்றிற்குள் மறைக்கும் ஒரு நிகழ்வாகவே நாங்கள் பார்க்க வேண்டியிருக்கின்றது. ஒரு ஊரிலே 28 வருடங்கள் அதிகாரத்திலே இருந்த கொண்டு அதே ஊரிலே நடப்பது எதுவும் தெரியாது என்பது அவர் எவ்வாறு அரசியல் செய்திருப்பால், எனவே இவர் பொய் கூறுகின்றார் என்பது இந்த நாட்டிற்கே தெரியும். 

இந்த நாட்டிலே இந்த முஸ்லிம் பயங்கரவாதிகளினால் ஏற்படுத்தப்பட்ட அழிவுக்கும். ஆட்டூழியங்களால் 250 இற்கு மேற்பட்டோர் உயிரிழந்தும், 500 இற்கு மேற்பட்டேர் காயமடைந்துமாள்ளார்கள். இச்சம்பவத்தில் 2 ஆளுனர்களும், ஒரு அமைச்சரும் இந்நாட்டு மக்களால் குற்றச்சாட்டப் பட்டுள்ளார்கள். இவர்கள் மூவரும் விசாரிக்கப்பட வேண்டும், குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால் அவர்கள் தண்டிக்கப்படல் வேண்டும் என அனைவரும் கூறினார்கள். இவர்களுக்கு எதிராக நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தினதேரர் கண்டியிலே சாகும்வரையில் உண்ணாவிரதம் இருந்தார். 

மொட்டை அடித்து காவியுடை தரித்த பிக்குமாரை தமிழ் மக்கள் நன்கு அறிவார்கள். இந்த நாட்டிலே ஏற்பட்ட அழிவுகள் அனைத்திற்கும் காரணமானவர்கள் பித்தம் பிடித்த புத்த பிக்குகள்தான் என்பதை நாங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். 1958 இலே தந்தை செல்வாவிற்கும் எஸ்.டப்பிள்யு.ஆர்.டி.பண்டாரா நாயக்காவுக்கும் இடையில் ஏற்பட்ட ஒப்பந்தத்தை குளப்பியடித்து கண்டி யாத்திரை சென்ற இந்த புத்த பிக்குகள் அதனுடன் நிறுத்திக் கொள்ளாமல் அப்போதைய பிரதமாராக இருந்த எஸ்.டப்பிள்யு.ஆர்.டி.பண்டார நாயக்காவையும் சுட்டுக் கொன்றதும் ஒரு புத்த பிக்குதான். அந்த ஒப்பந்தம் மாத்திரம் அன்று நிறைவேறியிருந்தால் தமிழ் மக்கள் இன்று சந்தித்துக் கொண்டிருக்கும், லெட்சக்கணக்கான உயிர்களைப் பலி கொடுத்திருக்கத் தேவையில்லை. எமது கல்வி கலாசாரங்கள் உள்ளிட்ட கோடிக்கணக்கான சொத்துக்களையும் இழந்திருக்கத் தேவையில்லை. 

இன்றுவரை இந்த புத்த பிக்குகள் என்ன செய்து கொண்டிருக்கின்றார்கள்; முல்லைத்தீவு நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தில் புத்தர் சிலை வைத்து விகாரை அமைப்பதற்கும் ஒரு புத்த பிக்கு முயற்சிக்கின்றார், அதுபோல் திருகோணமலை கன்னியா வென்னீர் ஊற்றுப் பகுதியில் பிள்ளையார் சிலையை உடைத்து விட்டு புத்தர் சிலை வைப்பதற்கு இன்னுமொரு பிக்கு முயற்சித்துக் கொண்டிருக்கின்றார். மட்டக்களப்பு மங்களராமய புத்த பிக்கு கெவுளியாமடு கிராமத்தில் கிராம சேவகர் ஒருவரை கெட்ட வார்த்தைகள் கூறி அவதூறு செய்தார், அதே பிக்கு மட்டக்களப்பு பிள்ளையாரடியிலே புத்தர் சிலை வைக்க முயற்சி செய்தார், தலதா மாழிகைக்கு முன்னால் ஒரு புத்த பிக்கு நாடகமாடுகின்றார் என்பதற்காக, அவருக்க உறுதுணையாக நாங்கள் நாடகமாடக் கூடாது. மட்டக்களப்பிலே அந்த நாடகம் அரங்கேறியிருந்தது.  

புத்தபிக்குகள் எமது இனத்திற்கு என்ன செய்தார்கள் என்பதை அறியாமலா நாங்கள் அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும். எதிரிக்கு எதிரி நண்பனாக எப்போதும் இருந்து விடக்கூடாது. உண்மையிலே ஹிஸ்புல்லா அவர்கள் குற்றமிளைத்திருந்தால் தண்டிக்கப்பட வேண்டும். இந்த ஹிஸ்புல்லாதான் ஓட்டமாவட்டியிலே காளிகோயிலை இடித்துவிட்டு மீன் மார்க்கட் கட்டினேன், நீதிபதியை மாற்றினேன், என்றல்ல்லாம் மார்தட்டிக் கூறியவர். 

மட்டக்களப்பு மாவட்டத்திலுள் 74 வீத வாழும் தமிழ் மக்களை வஞ்சித்தவர் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் எந்த மாற்றுக் கருத்துக்களும் இல்லை. மன்னாரிலே தமிழ் மக்களின் காணிகளைப் பிடிக்கும் முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீன் அவர்கள் தண்டிக்கப்ட வேண்டும், அதுபோல் அசாத்சாலியும் விசாரித்து தண்டிக்கப்பட வேண்டும். குற்றமிழைத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். அதற்கு ஜனாதிபதி, நாடாளுமன்றம் நீதித்துறை, இவைகளிருந்தும், கண்டியிலே ஒரு புத்த பிக்கு உண்ணாவிரதம் இருக்கின்றார் என்பதற்காக எம்மை காலம் காலமாக அழித்தொழித்த அந்த பிக்குவுக்கு நாங்கள் இங்கு உண்ணாவிரதம் இருக்கக்கூடாது. 

நூற்றுக்கணக்கன அரசியல் கைத்திகள் சிறையிலே வாடுகின்றார்கள், ஆயிரக்கணக்கான எமது காணிகள் சூறையாடப்படுகின்றன, அதற்காக உண்ணாவிரமத் இருக்காலாம். ஆனால் இந்த மொட்மைப் பிக்குகளுக்காக உண்ணாவிரம் இருப்பது பிழை. எமது தமிழ் சமூகத்திற்கு முஸ்லிம் சமூகத்தினர் தீங்கு விளைவித்தீருக்கினறார்கள். அவர்கள் விசாரிக்கப்பட்டு அவர்களுக்குரியை தண்டினை வழங்கப்பட வேண்டும் என அவர் இதன்போது தெரிவித்தார்.  
  








SHARE

Author: verified_user

0 Comments: