29 Jun 2019

தொழிற்பேட்டையை இந்த பிரதேசத்தில் கொண்டுவருவதற்கு முயற்சி செய்து வருகின்றேன் - யோகேஸ்வரன் எம்.பி

SHARE
தொழிற்பேட்டையை இந்த பிரதேசத்தில் கொண்டுவருவதற்கு முயற்சி செய்து வருகின்றேன் - யோகேஸ்வரன் எம்.பி
நான் ஒரு தொழிற்பேட்டையை இந்த மண்முனை தென்எருவில் பற்று பிரதேசத்தில் கொண்டுவருவதற்கு முயற்சி செய்து வருகின்றேன். 

பனை அபிவிருத்தி நிதியத்தின் ஊடாக வடக்கு கிழக்கிற்கு 5 பில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதிலே 2.5 பில்லியன் அனுமதிக்கப்பட்டு வந்துள்ளது. அதனை வடக்கு கிழக்கு மாகாணத்தை மையமாக வைத்து அதனைச் செயற்படுத்த வேண்டியுள்ளது.

என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வன் தெரிவித்துள்ளார்.

மீள்குடியேற்ற மற்றும் புணர்வாழ்வு அமைச்சின் 30 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில்  மட்.பட்செட்டிபாளையம், மகாவித்தியாலயத்தில், விஞ்ஞான ஆய்வு கூடத்திற்கான அடிக்கல் நடும் விழா வியாழக்கிழமை(27) இடம்பெற்றது. இதன்போது பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார் இதன்போதே அவர் மேலும் தெரிவிக்கையில்….

பட்டிருப்பும் கல்விவலயத்திற்குட்பட்ட குறிப்பாக படுவாங்கரைப் பகுதியில் அமைந்துள்ள பாடசாலைகளில் தேவையாகவுள்ள விஞ்ஞான ஆயுகூடங்களின் எண்ணிக்கைள், மற்றும் பாடசாலைகளின் தேவைகள் என்ன என்பதை எமக்கு தந்துதவுமாறு கோட்டக்கல்வி அதிகாரியிடம் வேண்டுகோள் கேட்டுக்கொள்கின்றேன்.

எனவே எமது பாடசாலைகளில் காணப்படும் தேவைகளை மீள்குடியேற்ற அமைச்சிடமிருந்தும், கல்வியமைச்சிலிருந்தும், நிவர்த்திசெய்யலாம். அண்மையில் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 8 பாடசாலைகளுக்கு கவ்வி அமைச்சிலிருந்து சில ஒதுக்கீடுகளைப் பெற்றுக் கொடுத்துள்ளேன். குறிப்பாக எமது மாணவர்களின் கல்வியில் நாங்கள் அனைவரும் கவனமெடுக்க வேண்டியுள்ளது. குறிப்பாக கிராமப் புறங்களைவிட நகர்புறப்பாடசாலைகளில் கல்வி கற்றால்தான் தமது பிள்ளை சிறப்பாக கற்கும் என பெற்றோர் நினைக்கின்றார்கள். ஆனால் கிராமப் புறத்தில் கற்ற பெரும்பாலான மாணவர்கள்தான் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று வெளியேறுவதை நாங்கள் காண்கின்றோம். எனவே பாடசாலைகளில் காணப்படும் வளங்களைப் பயன்படுத்தி மாணவர்களை உச்சநிலைக்குக் கொண்டு செல்லவேண்டும். 

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச மக்கள் கடற்கரை மணலில் போராடி மேட்டுநிலப் பயிர்களை செய்து தமது வருமானத்தை ஈட்டிக் கொள்கின்றார்கள். இப்பிரதேச மக்கள் அதிக முயற்சியுடைவர்கள், ஏனையவர்களைப்போல் வீட்டிலே முடங்கிக் கிடக்காமல் தமது முயற்சிகளினால் தொழில் செய்து மன்னேறுபவர்களுக்கு நாம் வாழ்வாதார ரீதியாகவும் உதவவுள்ளோம். அத்தோடு விவசாயத்தில் மிகவும் ஊக்கமாகவுள்ள இப்பிரதேசத்தில் விவசாயம் சார்ந்த தொழிற்போட்டை ஒன்றை இப்பகுதியில் அமைப்பது தொடர்பில் நாங்கள் ஆராய்ந்து வருகின்றோம். 

பட்டிருப்புத் தொகுதியை அதிக அக்கறையுடன் பார்க்கவேண்டிய கடமையிருக்கிக்கின்றது. தனித் தமிழ் தொகுதியாக இருக்கின்ற இந்தப் பட்டிருப்புத் தொகுதி கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் நாடாளுமன்ற மக்கள் பிரதிநிதியை இழந்திருக்கின்றது. இந்நிலையில் எமது ஒதுக்கீடுகளில் பெரும் பகுதி பட்டிருப்புத் தொகுதிக்கு வழங்கி வருகின்றோம். நான் கல்குடா தொகுதிக்குரிய நாடாளுமன்ற உறுப்பினர் அல்ல மட்டக்களப்பு மாவட்டத்திற்குரிய நாடாளுமன்ற உறுப்பினர்.

நாங்கள் மக்களுக்கு இயன்றவரை மக்களுக்குச் சேவை செய்து வருகின்றோம் இப்போது கிடைத்த சந்தர்ப்பங்களை சரியாகப் பயன்படுத்துகின்றோம், அதனை இன்னும் நாங்கள் சரியாக அதனைப் பயன்படுத்த வேண்டும், அமைச்சின் நிதி திறைசேரியிலிருந்து செல்வதில் மிகத் தாமதம் இருக்கின்றது. எமது பகுதியில் தொழில் இல்லாமலுள்ளது பாரிய பிரச்சனையாகவுள்ளது. அரசஉத்தியோகத்தை நம்பி நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது. அந்த வகையில் நான் ஒரு தொழிற்பேட்டையை இந்த மண்முனை தென்எருவில் பற்று பிரதேசத்தில் கொண்டுவருவதற்கு முயற்சி செய்து வருகின்றேன். 

பனை அபிவிருத்தி நிதியத்தின் ஊடாக வடக்கு கிழக்கிற்கு 5 பில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதிலே 2.5 பில்லியன் அனுமதிக்கப்பட்டு வந்துள்ளது. அதனை வடக்கு கிழக்கு மாகாணத்தை மையமாக வைத்து அதனைச் செயற்படுத்த வேண்டியுள்ளது. அந்த நிதியை கூடுதலாக தொழிற்போட்டைகளுக்குப் பயன்படுத்தலாம் என நினைத்திருக்கின்றோம். எனவே அந்த நிதியை சரியாகப் பயன்படுத்த வேண்டும் என்பதில் ஆர்வமாக இருக்கின்றேன். எனவே இப்பிரதேச அதிகாரிகள் இப்பிரதேச மக்களுக்குப் பொருத்தமான தொழிற்பேட்டைய அறிமுகம் செய்து தரவேண்டும். தொழிற்பேட்டைகளை அமைக்க வேண்டிய கடப்பாடு எமக்கு உண்டு இதற்கு அதிகாரிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். எனவே முதலில் வழங்களை வைத்துக் கொண்டு தொழிற்பேட்டைகளை அமைக்கப்பட வேண்டும். வறுமையிலிருந்து நீங்குவதற்கு முயற்சி செய்யமையும் ஒரு காரணமாகும். என அவர் தெரிவித்தார்.

SHARE

Author: verified_user

0 Comments: