17 Jun 2019

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஹிஸ்புல்லா சாதுரியமாக ஏமாற்றியுள்ளார் - சிறிநேசன் எம்.பி.

SHARE
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஹிஸ்புல்லா சாதுரியமாக ஏமாற்றியுள்ளார்  - சிறிநேசன் எம்.பி.
நடாளுமன்றத் தெரிவுக்குழு விசாரணைகளை ஊடகங்கள் வாயிலாக நாங்கள் பார்த்துக் கொண்டு வருகின்றோம் அதிலே கிழக்கு மாகாண முன்னாள் ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா அவர்கள்  அவரது தரப்பு வாதங்களை முன் வைத்து எந்த வகையிலாவது அவரை நியாயப்படுத்தக்கூடிய வாதங்களை முன்வைத்துள்ளதோடு அவரை மறந்து சிற்சில உண்மைகளை அவர் வெளியிட்டுக்கொண்டுதான் இருக்கின்றார். 

என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்துள்ளார்.

கம்பரெலிய திட்டதின் கீழ் களுதாவளை பொது விளையாட்டு மைதானத்தில்  ஒரு மில்லியன் ரூபா செலவில் கட்டப்பட்ட உடைமாற்றும் கட்டடம், மற்றும்  இரண்டு மில்லியன் ரூபா ஒதுக்கீட்டில் புணரமைக்கப்பட்ட களுதாவளை அரிசியாலைவீதி, மற்றும் இரண்டு மில்லியன் ரூபா ஒதுக்கீட்டில் புணரமைக்கப்பட்ட கொம்புச்சந்தி வீதி ஆகியன மக்களின் பாவனைக்குத் திறந்து திறந்து வைக்கும் நிகழ்வு சனிக்கிழமை(15) நடைபெற்றது.

மண்முiனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் தவிசாளர் ஞா.யோகநாதன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கோ.கருணாகரம்(ஜனா) மண்முiனை தென்எருவில் பற்று பிரதேச சபையின் உபதவிசாளர் திருமதி.க.ரஞ்சினி, பிரதேசசபை உறுப்பினர் எம்.தேவதாசன், மற்றும் கிராம பெரியோர்கள், பொதுமக்கள், கிராம பொது அமப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். 

இதன்போது கலந்து கொண்டு அபிவிருத்தித் திட்டங்களை திறந்து வைத்து விட்டு ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்…..

சஹரான் என்பவர் தற்போதைய ஜனாதிபதியின் ஆதரவாளராகத்தான் செயற்பட்டவர் என்றும், கடந்த ஜனாதிபதித் தேர்தலில் எப்போதும் தான் மகிந்த ராஜபக்ஸவின் ஆதரவாகத்தான் செற்பட்டதாகவும், ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளார் அவ்வாறு பார்க்கப்போனால் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஹிஸ்புல்லா அவர்கள் எவ்வளவு சாதுரியமாக ஏமாற்றியுள்ளார் என்பதை எம்மால் அவதானிக்க முடிகின்றது. அவரது சகல சக்தியையும் பதவித்து கடந்த ஜனாதிபதித் தேர்திலில் மகிந்த ராஜபக்ஸவை வெற்றிபெற வைக்க வேண்டும் என்று செயற்பட்டவர்தான் ஹிஸ்புல்லா அவர்கள். பின்னர் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஹிஸ்புல்லா அவர்கள் தேலிவியடந்த பின்னர் மைத்திரிபால சிறிசேனவிற்கு எதிராக செயற்பட்ட ஹிஸ்புல்லா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமே செற்று தேசியல் பட்டியல் எம்.பியாக பதவி ஏற்றார். பின்னர இராஜாங்க அமைச்சராகவும், பின்னர் கிழக்கு மாகாண ஆளுனராகவும் நியமனம் பெற்றுள்ளார் என்றால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களை எவ்வளவு தூரம் ஹிஸ்புல்லா ஏறமாற்றியுள்ளார் என்பதை  நாங்கள் அவதானிக்க வேண்டும். இந்நிலையில் தம்மை தெரிவு செய்த சிறுபான்மை மக்களைப்பற்றிச் சிந்திக்காமல ஜனாதிபதி அவர்கள் தம்மை ஏமாற்றிய ஒருவருக்கு உயர் பதவிகளை வழங்கியுள்ளார். இந்நிலையில் கடந்த ஜனாதிபத்தித் தேர்தலில் மகிந்த ராஜபக்சவிற்கும், சஹரான் என்பவர் மைத்திரிபால சிறிசேனவின் பக்கம் செயற்பட்டவர் எனவும் விசித்திரமான கருத்தை ஹிஸபுல்லா  தெரிவித்திருப்பதானது அவர் மகிந்தராஜபக்சவின்  பக்கம் பாய்வதற்கு முடிவெடுத்துவிட்டார்போல் தெரிகின்றது. எனவே ஹிஸ்புல்லா என்பவர் ஒரு கொள்கை இல்லாதவர் ஒரு சுயநல அரசியல் செய்கின்றவர் என்றுதான் சொல்லவேண்டும். 

ஹிஸ்புல்லா ஆரம்பத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசிலும், பின்னர் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிலும், பின்னர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, பின்னர் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ், தற்போது அவர் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியை நோக்கித் தாவ இருக்கின்றார் எனவே காலத்திற்குக் காலம் அரசியல் தலைவர்களை அவர் ஏமாற்றி அரசியல் செய்து வந்துள்ளார்.

அவர் பன்மைத்துவ சமூகத்தின் மத்தியில் அனைவரையும் அரவணைப்பது போன்றும், ஆளுனராக இருக்கும்போது வேறான கருத்துக்களையும், காத்தான்குயில் அவரது கருத்து இன்னுமொரு வித்திலும், செயற்படுகின்றார் எனவே ஹிஸ்புல்லாவின் நாக்கு பலவிதமாக இருக்கின்றதா அல்லது அவரது நோக்கு பலவிதமாக இருக்கின்றதா என்பது பற்றித்தான் சிந்திக்க வேண்டும். எது எவ்வாறு அமைந்தலும் அவரது சுயநல, வியாபார, நிதியை ஈட்டிக் கொள்ளும் அரசியல், காணிகளை அதிகளவு வாங்கிக் கொள்ளும் அரசியல், தன்னுடைய சொத்துக்களைப் பெருக்கக்கூடிய, மக்களை ஏமாற்றக்கூடிய அரசியல் என்பவறை மிகவும் சாகஜமாக செய்துகொண்டிருக்கின்றார். இந்நிலையில் அனைது முஸ்லிம் மக்களையும், நாங்கள் பகைவர்களாக எடுத்துக் கொள்ளவில்லை அவர்களது சில அரசியல் தலைவர்கள் முஸ்லிம் மக்களை சந்தர்ப்ப வாத்திற்குப் பயன்படுத்திக் கொள்கின்றார்கள்.

ஹிஸ்புல்லா அவர்கள் ஆளுனராக இருந்த காலத்தில் காத்தான்குடி மக்களுக்குரிய தலைவராக செயற்பட்டாரே தவிர கிழக்கிலுள்ள பன்மைத்துவ சமூகத்திற்குரிய தலைவர் என்பதைக் காட்டவில்லை. இவர் ஆளுனராக வந்தவுடன் கிழக்கில் கல்வியை கீழ் மட்டத்திற்குக் கொண்டு வந்திருந்து, பின்னர் கிழக்குமாகாண கல்வி உதவிச் செயலாளராக நியமிக்கப்பட்ட ஒருவரை மீண்டும் கல்விக்குரிய கிழக்குமாகாண பணிப்பாளராக நியமித்தார். பின்னர் முகாமைத்துவ உதவியளார் நியமனங்களின் போது ஒருவித பாகுபடுத்தலை வழங்கி நியமனம் வழங்க முனைந்தார் இந்த இரண்டு விடையங்களும், நீதிமன்றத்தினூடாகத்தான் வென்றெடுக்கப்பட்டன இதில் அவர் சரியான முறையில் செயற்படவில்லை என்பது புலப்படுகபின்றது.

முஸ்லிம் மக்களை உசுப்பி விட்டு அரசியல் செய்வதாகத்தன் அவரது பேச்சுக்கள் அனைத்தும் அமைந்துள்ளன. அண்மையில் அவர் பள்ளிவாசலில பேசுகின்றபோது இலங்கையில் முஸ்லிங்கள் சிறுபான்மையானவர்களாக இருந்தாலும் உலகத்தில் பெரும்பான்மையானவர்கள் என தெரிவித்துள்ளார். இவ்வாறான கருத்துக்கள் முஸ்லிம் மக்களை தீவிரத்தன்மைக்கு உசுப்பி விடுவது போன்றுதான் அமைந்துள்ளன. 

வடக்கு கிழக்கு இணைப்பை உடைத்தெடுக்க வேண்டும், அதன் மூலமாக தமிழர்களைப் பலவீனப்படுத்த வேண்டும். போரினவாத்திலிருந்து தமிழர்கள் தங்களைத் தற்கர்துக் கொள்வதற்காக தமிழர்கள் என்பது மாத்திரமின்றி தமிழ் பேசும் சமூகமாக இருக்கவேண்டும் என்பது பற்றி முற்போக்கான சிந்தனையாளர்கள் விரும்புகின்றார்கள். இச்சந்தர்ப்பத்தில்தான் ஹிஸ்புல்லா அவர்கள் வடக்கிலிருந்து கிழக்கைப் பிரித்தெடுத்து பேரினவாதிகளுக்கு கிழக்கைத் தீனிபோட வேண்டும்.  என்பதோடு அவருடைய வாக்கு வங்கியை மாத்திரம் வைத்துக் கொண்டுதான் செயற்படுகின்றார். இவர் காத்தான்குடிக்கு அருகிலுள்ள தமிழ் கிராமங்களுக்கு ஒரு அபிவிருத்தியையும் செய்யவில்லை எனவே இவர் ஏனைய இனத்தவர்களுக்கும் தலைமை தாங்கக்கூடிய தகுதியை இழந்திருக்கின்றார். அருகிலுள்ள தமிழ் கிராமங்களை அபிவிருத்தி செய்ய முடியாதவர் எவ்வாறு கிழக்கு மாகாணத்திற்குத் தலைமை தாங்கக்கூடிய யோக்கியம் கிடைக்கும்.

எனவே ஜனாதிபதி அவர்கள் ஹில்புல்லா அவர்களால் ஏமாற்றப்படுகின்ற ஏமாழியாக அல்லது கோமாழியாக இருக்கக்கூடாது. இந்நிலையின் இனி ஜனாதிபதி அவர்களின் உதவி தேவையில்லை என ஹிஸ்புல்லா நினைத்துக் கொண்டு சஹரானோடு ஜனாதிபதியை கோர்த்து விட்டிருக்கின்றார். மகிந்த ராஜபக்சவை சுற்றவாழியாக காட்டுவதற்கு முற்பட்டிருக்கின்றார். இது அவரின் அடுத்த அரசியல் பாய்ச்சலுக்குரிய விடையமாகத்தான் பார்க்க முடிகின்றது.

இந்நிலையில் ஹிஸ்புல்லா அவர்களின் அடிவருடிகளாக மாறக்கூடிய ஒரு சில தமிழர்களும் இருக்கத்தான் செய்கின்றார்கள்.  மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தைச் சீரளிக்கின்ற நிலமையை உருவாக்கியிருக்கின்றார் குறிப்பாக தமிழ் மக்களின் கல்வி மீது சிறிய அளவேனும் அவருக்கு அக்கறையில்லை. தமிழர்களின் கல்வி சீரழிந்து போகவேண்டும் என நிழனைக்கின்றார். இதற்கு ஹிஸ்புல்லா அவர்களும், கிழக்குமாகாண முன்னாள் கல்விப் பணிப்பாளர் நிசாம் அவர்களும் பொறுப்புக் கூறியே ஆகவேண்டும் என அவர் தெரிவித்தார்.SHARE

Author: verified_user

0 Comments: