2 Jun 2019

கணபதிபுரம் 195 ஆவது மாதிரிக் கிராமம் மக்கள் பாவனைக்காக கையளிக்கும் நிகழ்வு.

SHARE
மட்டக்களப்பு, மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கச்சக்கொடி செமட்ட செவண' தேசிய வீடமைப்பு திட்டத்தின் கீழ் 'கணபதிபுரம்' 195 ஆவது மாதிரிக் கிராமம் அமைக்கப்பட்டு மக்கள் பாவனைக்காக கையளிக்கும் நிகழ்வு நேற்று சனிக்கிழமை நடைபெற்றது.
2025 ஆம் ஆண்டில் 'செமட்ட செவண' யாவருக்கும் வீடு பெற்றுக்கொடுக்கும் ஒரே நோக்கில் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்படும் திட்டத்தின் அமைக்கப்பட்ட இந்த வீட்டுத்திட்டம் நிர்மாணம் மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் சஜித் பிரேமதாச மக்களிடம் கையளிக்கப்பட்டது.

இம் மாதிரிக் கிராமத்தில் சகல வசதிகளுடன் அமைக்கப்பட்ட 25 வீடுகள் இதன்போது அமைச்சரினால் திறந்துவைக்கப்பட்டதுடன் ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று அமைச்சர் வீடுகளை பார்வையிட்டு அதனை உரிமையாளரிடம் கையளித்துடன் மூலிகை தோட்டம் ஒன்றினையும் அமைச்சர் திறந்துவைத்தார்.
இந்த நிகழ்வின்போது கணபதிபுரம் நகர் கிராமத்தில் அமைக்கப்பட்டள்ள 25 வீடுகள் மற்றும் காணிதுண்டுகளுக்கான உரிமபத்திரங்கள் வழங்கப்பட்டதுடன் 115 பேருக்கு வீடமைப்பு கடனாக 863 இலட்சம் ரூபா வழங்கப்பட்டதுடன் 100பேருக்கு விசிரி கடன்களாக 155 இலட்சம் ரூபாவும் 70பேருக்கு மூக்கு கண்ணாடிகளும் வழங்கப்பட்டன.









SHARE

Author: verified_user

0 Comments: