20 May 2019

களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் தேவைகள் குறித்து முன்வைப்பு.

SHARE
மட்டக்களக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் காணப்படும் தேவைப்பாடுகள் குறித்து வைத்தியசாலை நலம்புரிச் சங்கத்தினர் கிழக்கு மாகாண சுகாதாரப் பணிப்பாளர் வைத்திய அதிகாரி எஸ்.அருள்குமரன், மற்றும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தன் ஆகியேரைச் தனித்தனியாகச் சந்தித்து கோரிக்கைகளை முன்வைத்தனர். 
களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில காணப்படும் குறைப்பாடுகள், ஆளணிப் பற்றாக்குறை வைத்திய நிபுணர்களிள் தேவைப்பாடு, போன்ற பல விடையங்கள் குறித்து இதன்போது முன்வைக்கப்பட்டன.

மட்டக்களப்பு மாவட்டத்தின பட்டிருப்புத் தொகுதியில்  அமைந்துள்ள ஒரே ஒரு ஆதார வைத்தியசாலை களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையாகும். இந்த தொகுதியிலுள்ள 145544 இற்கு மேற்பட்ட மக்கள் இந்த வைத்திய சாலையின் சுகாதார மற்றும் வைத்திய சேவையை நம்பியே வாழ்கின்றன. இந்நிலையில் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையிலுள்ள வைத்தியர்களினதும், வைத்திய நிபுணர்களின் பற்றாக்குறைகளையும் நிவர்த்தி செய்யுமாறு மேற்படி வைத்தியசாலை நலன்புரிச் சங்கத்தினர் கோரிக்கை முன்வைத்தனர். 

வைத்தியசாலை நலன்புரிச் சங்கத்தினர் கோரிக்கைகளை கேட்டறிந்த  கிழக்கு மாகாண சுகாதாரப் பணிப்பாளர் வைத்திய அதிகாரி எஸ்.அருள்குமரன், மற்றும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தன் ஆகியோர் வைத்தியசாலையின் ஆளனிப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய முயற்சி செய்வதாக தெரிவித்தனர்.

இந்நிலையில் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் சத்திர சிகிச்சை வைத்திய நிபுணராகவும், பதில் வைத்திய அத்தியட்சராகவும், தற்போது கடமையாற்றிவரும் திருகோணமலையைச் சேர்ந்த ஆ.றொகான்குமாரையும், சந்தித்து, அவரது சேவைக்கு நன்றியறிதலையும் பாராட்டையும் செய்ததோடு, அவரது சேவை பட்டிருப்புத் தொகுதி மக்களுக்கு தொடர்ந்து தேவை என்பதையும் தெரிவித்தனர்.

இந்நிலையில் களுவாஞ்சிகுடி ஆதார வைத்திய சாலையில் கடiமாயற்றி வரும் தமக்கு தற்போது சுகாதார அமைச்சினால் இடமாற்றம் வந்துள்ள போதிலும் பட்டிருப்புத் தொகுதி மக்களின் தேவைகருதியும், வைத்தியசாலை நலம்புரிச் சங்கத்தின் கோரிக்கைக்கு இணங்கவும், தாம் சுயமாக முன்வந்து இந்த வைத்தியசாலையில் தொடர்ந்து சேவை செய்வதற்கு முன்வருவதாக இதன்போது சத்திரசிகிச்சை நிபுணர் ஆ.றொகான்குமார் தெரிவித்தார்.


SHARE

Author: verified_user

0 Comments: