29 May 2019

இந்த நாட்டில் முதுகெலும்பு என்று சொல்லப்படுகின்ற இளைஞர்கள், யுவதிகள் உண்மையில் மதிக்கப்படல் வேண்டும்.

SHARE
இந்த நாட்டில் முதுகெலும்பு என்று சொல்லப்படுகின்ற இளைஞர்கள், யுவதிகள் உண்மையில் மதிக்கப்படல் வேண்டும். ஒருபோதும் இளைஞர் யுவதிகள் மிதிபடக்கூடாது என்பதற்காக நாங்கள் காலா காலமாக நாங்கள் வேலை செய்து வருகின்றோம். அவர்களுடைய உணர்வுகள், உணர்ச்சிகள், வெளிக்காட்டல்கள், அனைத்தையும் நாட்டிலுள்ள ஒவ்வொருவரும் மதித்து நடக்க வேண்டும். அவர்களுக்கு, இனரீதியான, பிரதேச ரீதியான வேறுபாடுகள், குறிப்பாக எந்தவிதமான வேறுபாடுகளும் காட்டாது ஒரு இளைஞனின் உணர்வு மதிக்கப்படுமாக இருந்தால், இந்த நாட்டிலே ஒரு முழு நிறைவான சமாதானம் தோற்றுவிக்கப்படும். தற்போதைய நிலையில் யாரும் எதிர்பார்க்காதா ஒரு சூழலையை அனுபவித்துக் கொண்டிருக்கின்றோம். இவற்றுக்கு இளைஞர்களும், யுவதிகளும், சவாலாக உள்ளபோதும் இன ரீதியான முறுகல் நிலைகளும் தோற்றுவிக்கப்பட்ட ஒரு சூழலாக இருக்கின்றது. இக்காலகட்டத்தில் நாட்டில் அமைதியான சூழல் நிலவுவதற்காக வேண்டி தற்போது அவசரகாலச் சட்டம் கொண்டுவரப்பட்டாலும், இந்நாட்டிலே ஒவ்வாறு இளைஞரும் சுதந்திரமாக வாழ வேண்டும், அவனுக்கான உரிமைகளை அவன் அனுபவிக்க வேண்டும். இந்நிலையில் இளைஞர்கள் இன்று யோசிக்கத் தொடங்கியிருக்கின்றார்கள். 
ஏன இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளர் ஏ.சிம்.ஏ.அஸீஸ் தெரிவித்துள்ளார்.

அன்புக்கும் நட்புக்குமான இளைஞர் வலையமைப்பு அமைப்பினால் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் யவதிகளின் ஆளுமை விருத்தி மற்றும் நவீன தொழில் நுட்பத்தை விருத்தி செய்வதற்ககாக வேண்டி அதற்கான  காரியலயம் ஒன்று செவ்வாய்க்கிழமை (28) மட்டக்களப்பு கண்ணகியம்மன் கோயில் வீதியில் திறந்து வைக்கப்பட்டது. இதன்போது கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போத அவர் மேலும் தெரிவிக்கையில்…..

ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் இளைஞர்களின்போக்கு கடும் வித்தியாசமாக இருந்தது. போதைப்பொருளில், காதல் விவகாரங்கள், கையடக்கத் தொலைபேசிகள் வழியாக சமூக ஊடகங்கள் வழியாகவும் சில இளைஞர்களும், யுவதிகளும், மூழ்கியிருந்தார்கள், ஆனால் இக்காலகட்டத்தில் ஒவ்வவொரு இளைஞனும், யுவதியும் நமது நாட்டு மக்களுக்காக, எமது சமூதாயத்திற்காக நாம் எதைச் சாதிக்கப் போகின்றோம் என யோசிக்கின்றார்கள். 

இந்த நாட்டின் சொந்தக்காரர்கள் என்று சொல்லப்படுகின்றவர்கள் நாங்கள்தான். அந்த சொந்தக் காரர்களுக்கு எந்தவிதத்திலும் பாரபட்டசம் காட்;டக்கூடாது என்பதில் நாங்கள் மிகக் கவனமாக இருக்கின்றோம். காலங்காலமாக நாங்கள் யாருக்கும் அடிமைத்தனத்திற்குள் உள்வாங்கப்பட்டு அடிமையாக நாங்கள் மாறக்கூடாது என்பதற்காக ஒவ்வாரு புத்தியுள்ள இளைஞர்களும் சிந்திக்கின்ற தருணமாக இது காணப்படுகின்றது. 

1978 ஆம் ஆண்டு அரசியலமைப்பு யாப்பின் 3 ஆம் அத்தியாயத்தில் உள்ள அடிப்படைய உரிமையில் உள்ள அனைத்து உரிமைகளையும், ஒவ்வொரு தனிமனிதனும் அனுபவிக்க வேண்டும். அதில் பாரபட்டசம் காட்டக்கூடாது என குறிப்பிடப்பட்டுள்ளது அவ்வாறு பாரட்பட்சம் காட்டப்படுகின்ற சந்தர்ப்பத்தில் அங்கு அடிப்படை மீறல்கள் உள்ளதாக நாங்கள் கருதமுயும். 

தற்போது நமது நாடு முழுவதும், நல்லிணக்கச் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றன. மனித உள்ளங்களில் இருக்கின்ற அந்த உள்ளாந்த உணர்வுகள் அவர்களின் வெளிக்காட்டல்களாக இருக்கின்றன. தமிழ், முஸ்லிம், சிங்களம், பயங்கியர் என்று வேறுபாடு காட்டாமல், முழு சமூகமும், ஒருமித்த குரலில் இலங்கைத் தேசத்திற்காக, ஒற்றுமையாக இருந்து செயற்படுகின்றார்கள். ஆனாலும் சில செயல்கள் நடந்தேறி வருகின்றன. அதனை நாங்கள் ஒருபோதுமே அனுமதிக்க முடியாது. இந்த நாட்டில் ஒரு தனிமனிதன் வாழ்வதற்கு முழுச் சுதந்திரம் இருக்க வேண்டும். அதற்கு இந்நாட்டு அரசாங்கம் மட்டுமல்லாது சட்டசங்களும் முழுதாகத் தரவேண்டும். 

நாட்டில், தொழில் இல்லப் பிரச்சனை, சுதந்திரமாக நடமாட முடியாத பிரச்சனை, சுதந்திரமாக வேலை செய்ய முடியாத பிரச்சனை, கடந்த 28 வருடகாலமாக நாங்கள் அனுபவித்து வந்த பிரச்சனை தற்போது மீண்டும் வந்திருக்கின்றது. அது தற்போது வேறொரு விசுவரூபத்தில் வந்திருக்கின்றது. ஆனால் நாங்கள் ஒருபோதுமே சளைக்காமல், தலைகுனியாமல், இந்த நாட்டுக்காகவும், நாட்டு மக்களுக்காகவும். எமது சமூதாயத்திற்காகவும், உழைக்க வேண்டும் என்ற உத்வேகம் இன்று ஒவ்வாரு இளைஞர்கள் மற்றும் யுவதிகள் மத்தியில் வந்திருக்கிறது. அதற்காகத்தான் தற்போது போது அமைப்புக்கள் எல்லாம் இளைஞர்கள் மத்தியில் வேலை செய்வதற்கு முன்வந்துள்ளன. 

இவ்வாறுதான் வாழ் வேண்டும் என்பதை நமது சமயங்கள் சொல்லியிருக்கின்றன. அற்காக எமது பாரமரியங்கள், வளக்காறுகள் வித்திட்டிருக்கின்றன. தற்போது அனைத்தும் குழம்பிய நிலையில் செய்வதறியாது சிந்தித்துக் கொண்டிருக்கின்றோம். எனினும் நாங்;;கள் குழம்பவேண்டிய அவசியம் இல்லை. இந்நாட்டின் உரிமை எமக்கும் இருக்கின்றது. யாருக்கும் பாரபட்சம் காட்ட முடியாது, யாரையும் சிறுபான்மை என்றோ, பெரும்பான்மை என்றோ ஒதுக்க முடியாது. உரிமை என்ற ரீதியில் அவர் நினைத்தபடி வாழ்வதற்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டு அது அரசியலமைப்பில் அது தெழிவாகக் காட்டப்பட்டுள்ளது. சகோதரத்துவம் பேணப்பட லேவண்டும், சக வாழ்வு கட்டியெழுப்பட வேண்டும். நாட்டில் இருக்கின்ற எல்லப்பிரச்சனைகளுக்கும். இளைஞர் சமுதாயம் தோளோடு தோள் நின்று தோள் கொடுத்து. மேற்கொள்கின்றபோதான் இந்நாட்டில் அருமையான சுதந்திரத்தையும். சுபீட்சத்தையும், பெறமுடியும் என்ற நம்பிக்ககை இருக்கின்றது. என அவர் தெரிவித்தார்.





SHARE

Author: verified_user

0 Comments: