24 May 2019

இராணுவ தளபதியின் வேண்டுகோளில் பேரில் கிழக்கு மாகாணத்தில் மாணவர்களின் வருகை 95 வீதத்தால் அதிகரிப்பு - மட்டு வலய கல்விப்பணிப்பாளர்- எ.மயில்வாகனம்.

SHARE
இராணுவ தளபதியின் வேண்டுகோளில் பேரில்  கிழக்கு மாகாணத்தில் மாணவர்களின் வருகை  95 வீதத்தால்  அதிகரிப்பு - மட்டு வலய கல்விப்பணிப்பாளர்- எ.மயில்வாகனம்.
இராணுவ தளபதியின் வேண்டுகோளில் பேரில்  கிழக்கு மாகாணத்தில் மாணவர்களின் வருகை  95 வீதத்தால்  அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக மட்டக்களப்புக் வலய  கல்விப்பணிப்பாளர் எ.மயில்வாகனம் தெரிவித்தார்.

கல்வி அமைச்சினால்    2 ஆம் தவணை கற்றல் நடவடிக்கைகளுக்காக பலத்த பாதுகாப்புக்கு மத்தியில்  பாடசாலைகள் ஆரம்பத்திலுள்ள நிலையில் கிழக்கு மாகாணத்தில்  இராணுவ தளபதியின் வேண்டுகோளில் பேரில்  கிழக்கு மாகாணத்தில் மாணவர்களின் வருகை 95 வீதம் வெள்ளிக்கிழமை (24) அதிகரித்து காணப்பட்டுள்ளது. 

கிழக்கு மாகாணத்தில்  இராணுவ தளபதியினால் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பின் மீதும் அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வைத்து வெள்ளிக்கிழமை குண்டு வெடிப்பக்கு முன்னர் இருந்த மாதிரி மக்கள் அதிகளவில் தமது பிள்ளைகளை உற்சாகமாக பாடசாலைக்கு அழைத்து வருவதை காணக்கூடியதாக இருந்தது. ஆசிரியர்களின் வரவும் வளமையாக இருந்தது. கடந்த வாரத்தை பார்க்கிலும் வெள்ளிக்கிழமை கனிஸ்ட பிரிவு மாணவர்கள் உட்பட மாணவர்களின் வரவு வீதம் மட்டக்களப்பு நகர் புறபாடசாலைகளில் அதிகரித்துள்ளதை அவதானிக்க கூடிய தாகவுள்ளது.  இதேவேளை மட்டக்களப்பின் மற்றைய கல்வி வலயங்களிலும் வெள்ளிக்கிழமை மாணவர்களின் வரவு வீதம் அதிகரித்து காணப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்வி அமைச்சினால் சகல பாடசாலை வளாகம் மற்றும் மாணவர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தபட்ட பின்பு மட்டக்களப்பிலுள்ள 5 கல்வி  வலயங்களுக்குட்பட்ட பாடசாலைகள் பாடசாலைச் சமுகத்தின் ஒத்துழைப்புடன் இராணுவத்தின் பலத்து  பாதுகாப்புக்கு மத்தியில்   கனிஸ்ட பிரிவு உட்பட பாடசாலைகள் கற்றல்  செயற்பாடுகள் இடம்பெற்றன. மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்து முகமாக சகல பாடசாலைகளிலும் பரிசோதனை நடவடிக்கைகளின் பின்பு மாணவர்கள் ஆசிரியர்கள்   பாடசாலை வாளகத்தினுள் அனுமதிக்கப்பட்டனர். கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள் வழமைபோனறு முன்னெடுக்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கதாகும்.










SHARE

Author: verified_user

0 Comments: