30 Apr 2019

தீவிரவாதத்தை அனைத்து சமூகங்களும் இணைந்து எதிர்ப்பது வெற்றிக்கான அறிகுறி என்றே தெரிகிறது. மட்டக்களப்பு மாவட்ட உதவிச் செயலாளர் ஏ. நவேஸ்வரன்

SHARE
தீவிரவாதத்தை அனைத்து சமூகங்களும் இணைந்து எதிர்ப்பது வெற்றிக்கான அறிகுறி என்றே  தெரிகிறது. மட்டக்களப்பு மாவட்ட உதவிச் செயலாளர் ஏ. நவேஸ்வரன்.
தீவிரவாதத்தை அனைத்து சமூகங்களும் இணைந்து எதிர்ப்பது வெற்றிக்கான அறிகுறி என்றே  தெரிவதாக மட்டக்களப்பு மாவட்ட உதவிச் செயலாளர் ஏ. நவேஸ்வரன் தெரிவித்தார்.

தேசிய சமாதானப் பேரவையின் மட்டக்களப்பு மாவட்ட சர்வமத செயற்குழுவின் ஒருங்கிணைந்த சர்வமத சமாதான நிகழ்வு மட்டக்களப்பு கூட்டுறவுக் கேட்போர் கூடத்தில் செவ்வாய்க்கிழமை 30.04.2019 இடம்பெற்றது.

தேசிய சமாதானப் பேரவையின் மட்டக்களப்பு மாவட்ட சர்வமதப் பேரவைக்கான இணைப்பாளர் ஆர். மனோகரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தேசிய சமாதானப் பேரவையின் திட்ட அலுவலர் கிங்ஸ்லி ராஜசிங்கம்,  உட்பட  மட்டக்களப்பு மாவட்ட சமாதானப் பேரவை உறுப்பினர்களும், பௌத்த. இந்து இஸ்லாமிய, கிறிஸ்தவ, கத்தோலிக்கரல்லாத, சமயங்களின் சமயத் தலைவர்களும் கலந்து கொண்டனர்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய மாவட்ட உதவிச் செயலாளர் நவேஸ்வரன், 
சமீபத்தில் இடம்பெற்றதுபோன்ற இவ்வாறான கொடூரச் சம்பவங்கள் எதிர்காலத்தில் இடம்பெறக் கூடாது பாதுகாத்து இனங்களுக்கிடையே ஒற்றுமை கட்டியெழுப்பப்பட வேண்டும்.

இதேபோன்று நாட்டில் சமாதானத்துடன் கூடிய சகஜநிலை ஏற்படவேண்டும் என எமது மட்டக்களப்பு மாவட்ட செயலக நிர்வாகமும் பிரதேச செயலகங்கள் மற்றும் பொலிஸ் துறை உள்ளிட்ட சகலரும் சேர்ந்து செயற்பட்டு வருகின்றனர்.

அந்த வகையில் விசேடமாக மதகுருமார், மதப் பெரியோர்கள் போன்றோர் அவர்களது மதங்களுக்கிடையே ஆன்மீக ரீதியாக நல்ல சிந்தனைகளையும் நல்ல செய்திகளையும் எண்ணங்களையும் மக்களிடையே பரப்ப செல்ல வேண்டும்.

தற்போது சில வதந்திகள் பொய்ப் பிரச்சாரங்கள் சிலரால் புரளி கிளப்பி விடப்படுகின்றன. இதனால் மக்கள் பீதியடைந்து அல்லற்படுகின்றனர். மக்கள் பீதியடையும் இவ்வாறான நிலை களையப்பட வேண்டும்.

அதேபோன்று  தீவிரவாதத்தை ஒழித்து சமுக விரோதிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படவேண்டும்.

நாட்டின் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்காக பாதுகாப்பு தரப்பினர் இரவு பகலாக பாடுபட்டுக்கொண்டிருக்கின்றார்கள் அவர்களுக்கு நாம் போதிய ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.

தமிழர்களாக, சிங்களவர்களாக, இஸ்லாமியர்களாக பறங்கியர்களாக, கிறிஸ்தவர்களாக இருப்பதில் தவறொன்றுமில்லை.

நாம் அனைவரும் ஒருமித்த வகையில் இந்த அநீதிக்கு எதிராகவும் அழிவுக்கு எதிராகவும் செயற்படுவதற்காக அணி திரள வேண்டும்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் நல்லிணக்க சூ+ழ்நிலையை ஏற்படுத்துவதற்காக இங்குள்ள சர்வமதக் குழுக்கள், அமைப்புக்களை அழைத்துப் பேசும் வேலைத்திட்டம் எதிர்வரும் ஓரிரு தினங்களில் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் நடைபெறும்.

பாதுகாப்புத் தரப்பினரைப்போல் எமது நாட்டையும் சமூகத்மையும் பாதுகாப்பதற்கு பொதுமக்களாகிய எமக்கும் பொறுப்புக்கள் உண்டு என்பதை நாம் ஒவ்வொருவரும் புரிந்துகொள்ள வேண்டும். இதற்கு சாய்ந்தமருது பிரதேசத்தில் அண்மையில் அப்பிரதேச மக்கள் செயற்பாடு ஒரு முன்னுதாரணமாகும். ஏன அவர் தெரிவித்தார். 





SHARE

Author: verified_user

0 Comments: