18 Apr 2019

குழாய் மூலம் வழங்கப்படுகின்ற நீர் தொடர்ச்சியாக வராமையால் மக்கள் சிரமம்

SHARE
மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்றுப் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மண்டூர், கணேசபுரம், சங்கர்புரம், போன்ற கிராமப் பகுதியில் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையினால் வழங்கப்பட்டுவரும் குழாய் மூலமான நீர் சீரான முறையில் கிடைப்பதில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
தற்போதைய வரட்சியான கால நிலையில் கிணறுகள் வாய்க்கல்கள் அனைத்தும் வற்றிப்போயுள்ள நிலையில் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையினால் அம்பாறை மாவட்டத்திலிருந்து மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைப்புறக் கிராமங்களுக்கு வழங்கப்படுகின்ற குடிநீர் சீராக வழங்கப்படாமையால் அமப்பகுதி மக்கள் மிகுந்த சிரமங்களை எதிர் கொண்டு வருவதாக கவலை தெரிவிக்கிள்றனர்.

நாளாந்தம் வரும் நீர் காலையில் 8 மணிக்குப் பின்னர் நிறுத்தப்பட்டுவிடும்,  மாலை 6 மணிக்குப் பின்பும் நிறுத்தப்பட்டு விடும், இவற்றைவிட வெள்ளிக் கிழமைகளில் நீர் முற்றாக வராது. இதனால் பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட பலரும் மிகுந்த கஸ்ட்டங்களை எதிர்கொண்டு வருகின்றார்கள். 

இவற்றைவிட சில உள் வீதிகளுக்கு குழாய் மூலமான குடிநீர் பெறுவதற்கான இணைப்புக்கள் இதுவரையில் வழங்கப்படவில்லை எனவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இம்மக்களின் குறைபாடுகளை நிவர்த்தி செய்துவது தொடர்பில் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் மண்டூர், நிலையப் பொறுப்பதிகாரி அ.ஜெகதீபனிடம் வியாழக்கிழமை (18) தொடர்பு கேட்டபோது…

தற்போது வரட்சிகாலம் ஆகையால் நீர் தட்டுப்பாடு நிலவி வருகின்றது. ஒரு இடத்தில் சேமிக்கின்ற நீரைத்தான் பல இடங்களுக்கு அனுப்பப் படுகின்றது.   தற்பேதைக்கு வழங்கப்டுகின்ற குடிநீர் சீராக வரமுடியாத நிலைமைதான் காணப்படுகின்றது. ஏனெனில் பகலில்தான் நீர் வழங்குகின்றோம் (பகலில்தான் நீரைப் பம் பண்ணுகின்றோம் pumping) , இரவு வேளையில் வழங்குவது (இரவில்  நீரைப் பம் பண்ணுவது pumping)  நிறுத்தப்பட்டுள்ளது. எனினும் மிகவிரைவில் அப்பகுதி மக்களுக்கு தொடர்ச்சியான நீர் வழங்கக் கூடிய நடவடிக்கை எடுக்கப்படும். 

மக்கள் செறிவாக உள்ள இடங்களுக்குத்தான் தற்போதைக்கு நீர் வழங்கும் குழாய்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஏனைய இடங்களுக்கு பொருத்துவதற்குரிய நடவடிக்கைகளும் எமது அடுத்த திட்டத்தினுடாக குழாய்கள் பொருத்துவதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படும். என அவர் தெரிவித்தார். 

எது எவ்வாறாயினும் தற்போது வரட்சியாகலம் ஆகையால் மக்களும் நீர் கிடைக்கின்ற நேரத்தில் நீரைச் சேமித்து வைத்து பாவிப்பதற்கு பழகிக் கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.












SHARE

Author: verified_user

0 Comments: