27 Apr 2019

அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது வொலிவோரியன் கிராமத்தில் இடம்பெற்ற தாக்குதலில் 16 பேர் பலி பாதுகாப்புக்காக படையினர் குவிப்பு.

SHARE
அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது வொலிவோரியன் கிராமத்தில் வெள்ளிக்கிழமை (27) இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் இதுவரையில் கிடக்கப்பெற்ற தகவலின்படி 16 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் தகல்கள் தெரிவிக்கின்றன.
சுனாமி வீட்டுத்திட்டமாகக் காணப்படும் வொலிவேரியன் கிராமத்தில் வாடகைக்குத் தங்கியிருந்த ஆயுததாரிகள், தொடர்பில் சந்தேகம் கொண்ட அக்கிராம மக்கள் பொலிசாருக்கு தெரிவித்துள்ளனர். உடனே இஸ்த்தலத்திற்கு விரைந்த பொலிசாரும், இராணுவத்தினரும், கிராமத்தையே சுற்றிவளப்பில் ஈடுபட்டனர். இதன்போது ஆயுததாரிகளுக்கம், இராணுவத்தினருக்கும் இடையில் பரஸ்பர தாக்கதல்கள் இடம்பெற்றன. இதன்போது ஆயுததாரிகள் உள்ளிட்ட 16 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றது.

வெள்ளிக்கிழமை (26) எனது நண்பர் ஒருவர் ஓடிவந்து என்னிடம் ஆயுத்துடன் ஒரு வீட்டில் அதிகம் பேர் இருப்பதாக சொன்னார். சிவில் அமைப்பில் இருப்பதனால் எனக்கும் ஒரு பொறுப்பு இருக்கின்றது. நான் அவ்விடத்திற்கு போகவில்லை தூரத்தில் நின்று அவதானித்தேன் இரண்டுபோர் ஆயுத்துடன் நிற்பதை ஒரு வேன் ஒன்று நிற்பதையும், அவதானித்தேன். பின்னர் உடனே நான் பொலிசாருக்கு  தொலைபேசியில் அறிவித்தேன். 

எம்மை வெளியில் திரியவேண்டாம், ஏனைய பொதுமக்களையும் வெளியே திரிய வேண்டாம் எனவும், இங்கு பொலிசாரை அனுப்பியுள்ளதாகவும், என்னிடம் பொலிசார் தெரிவித்தனர். பின்னர் 3 குண்டு வெடிப்புச் சத்தங்;கள் கேட்டன, பின்னர் தொடற்சியாக 2 மணித்தியாலங்கள் ஆயுததாரிகளுக்கும், படையினருக்கும் இடையில் மோதல் இடம்பெற்றது. சனிக்கிழமைn(27) காலை சம்ப இடத்திற்குச் சென்று பார்த்தேன், வெள்ளிக்கிழமை நான் பார்த்த ஆயுததாரிகள் உயிரிழந்து கிடப்பதைக் கண்டேன். என சாய்ந்தமருது வொலிவோரியன் கிராமத்தின் சிவில் அமைப்பின் உறுப்பினர் எம்.அன்சார் தெரிவித்தார்.

இது இவ்வாறு இருக்க சனிக்கிழமை (27) காலை அக்கிராமத்திலுள்ள மக்கள் அனைவரும் அங்குள்ள காரியப்பர் வித்தியாலயத்திற்கு வரவளைக்கப்பட்டு தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை இராஜங்க அமைச்சர் எச்.எம்.எம்.ஹீர், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம்.மன்சூர், கல்முனை மானகர சபை முதல்வர் மற்றும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள், மற்றும் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் பார்வையிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் வொலிவோரியன் கிராமத்திலுள்ள அனைத்து வீடுகளும், இராணுவத்தினரால் சுற்றிவளைக்கப்டப்பட்டு, தேடுதல் நடவடிக்கை ஒன்றும் முன்நெடுக்கப்பட்டு வருகின்றன.

இச்சம்பவத்தில் படுகாயமடைந்த இருவர் கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக அவ்வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரி ஏ.எல்.எவ்.றகுமான் தெரிவித்ததுள்ளார்.

உயிரிழந்தவர்களின் சடலங்களை வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்ல பொலிசார் நடவடிக்கைகளை எடுத்துள்ளதோடு, விசாரணைகளையும், துரிதப்படுத்தப்படுத்தியுள்ளனர்.

இருந்த போதிலும் கல்முனைப் பகுதி தற்போது வரைக்கும் பொலிஸ் ஊடரங்குச் சட்டம் அமுலிலிருந்து வருகின்றது. இதனனால் கல்முனை, சாய்ந்தமருது பகுதிகளிலுள்ள அனைத்து வர்த்தக நிலையங்கள், கடைகள், அரச, அரச சார்பற்ற நிறுவனங்கள் வங்கிகள் உள்ளிட்ட எதுவும் சனிக்கிழமை (27) இயங்கவில்லை. அப்பகுதியெங்கும், இராணுவத்தினர், குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளன. இதனால் அப்பகுதிகளில் மக்கள் நடமாட்டம் முன்றாக இல்லாமலுள்ளதையும், போக்குவரத்துக்களும், அற்ற நிலையும் காணப்படுகின்றது.
























SHARE

Author: verified_user

0 Comments: