7 Mar 2019

கதிரவெளி - கட்டுமுறிவு விவசாய வீதி அபிவிருத்திக்கு முன்னுரிமை அளிக்குமாறு கோரிக்கை கட்டுமுறிவு விவசாயிகள் சங்கச் செயலாளர் ரீ.ஜீ. குருகுலசிங்கம்

SHARE
கதிரவெளி - கட்டுமுறிவு விவசாய வீதி அபிவிருத்திக்குமுன்னுரிமை அளிக்குமாறு கோரிக்கை கட்டுமுறிவு விவசாயிகள் சங்கச் செயலாளர் ரீ.ஜீ. குருகுலசிங்கம்
கதிரவெளி - கட்டுமுறிவு விவசாய வீதி முழுமையாகத் திருத்தியமைக்கப்பட்டு அதன் நன்மைகள் விவசாயிகளுக்குக் கிட்ட வேண்டும் என்று அதிகாரிகளைக் கோரியுள்ளதாக மட்டக்களப்பு கட்டுமுறிவு விவசாயிகள் சங்கச் செயலாளர் ரீ.ஜீ. குருகுலசிங்கம்  தெரிவித்தார்.

இதுபற்றி வியாழக்கிழமை 07.03.2019 வாகரையில் இடம்பெற்ற விவசாயிகளுடனான அதிகாரிகள்  கலந்து கொண்ட கூட்டத்தின் பின்னர் மேலும் தெரிவித்த குருகுலசிங்கம்,

கட்டுமுறிவு பிரதேசத்திலுள்ள விவசாயிகள் பயன்படுத்தும் வீதிகள் நீண்ட காலமாக வெள்ளப்பாதிப்பிற்குள்ளாகிய நிலையில் புனரமைப்புச் செய்யப்படாமலும், பராமரிக்கப்படாமலும் உள்ளதால் அவற்றைத் திருத்தியமைத்துத் தருமாறு அதிகாரிகளிடமும் விவசாய அமைச்சரிடமும் பலமுறை  வேண்டுகோள் விடுத்தோம்.

சுமார் 19 கிலோமீற்றர் நீளமான கதிரவெளி-கட்டுமுறிவு விவசாய வீதி முற்றுமுழுவதுமாக திருத்தியமைக்கப்பட வேண்டும்.

ஏற்கெனவே இவ்  வீதியின் சுமார் 5 கிலோமீற்றர் நீளமான பகுதியே திருத்தியமைக்கப்பட்டுள்ளது.  

ஏனைய 14 கிலோமீற்றர் பெருநீளப் பகுதி நீண்ட காலமாகத் திருத்தியமைக்கடாமல் போக்குவரத்துச் செய்ய பொருத்தமற்ற நிலையில் காணப்படுகின்றது. எனினும், விவசாயிகள் வேறு வழியின்றி பெருஞ்சிரமத்திற்கு மத்தியில் இந்த வீதியையே பயன்படுத்தி வருகின்றனர்.

எதிர்வரும் காலங்களில் இவ்வீதியின் சுமார் 6 கிலோமீற்றர் நீளமான பகுதியை திருத்தியமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் உறுதியளித்துள்ளார்.

இது மகிழ்ச்சிக்குரிய விடயம். எனினும், இவ்வீதி முழுமையாகத் திருத்தப்படாலேயே பிரதேச விவவாயிகள் முழுமையான நன்மையை அனுபவிக்க முடியும்.” என்றார்.

SHARE

Author: verified_user

0 Comments: