31 Mar 2019

வினைத்திறன்மிக்க சேவைகளை மக்களுக்கு வழங்கும் வகையில் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களுக்குப் பயிற்சி

SHARE
மக்களுக்கான வினைத்திறன்மிக்க சேவைகளை வழங்கும் நோக்கோடு மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர்களுக்கு கடந்த வருடத்திற்கான செயற்திட்ட மீளாய்வு செயலமர்வு ஞாயிற்றுக்கிழமை 31.03.2019 மட்டக்களப்பு நகர மண்டபத்தில் நடைபெற்றது.
கனடா நாட்டு நிறுவனம் ஒன்றினால் நடாத்தப்பட்ட இச்செயலமர்வில் மாநகர சபையில் அங்கம் வகிக்கும் அனைத்துக்  கட்சி அங்கத்தவர்களுடன் இணைந்து செயற்திட்டங்களை முன்மொழிதல், உறுப்பினர்களுக்கும் மத்திய அரசு, மகாண சபை, மாநகர ஆணையாளர் உள்ளிட்ட மாநகரசபை அதிகாரிகளுக்குமிடையிலான சினேகபூர்வ உறவு முறையை வளர்த்தல் மூலம் அபிவிருத்திக்காக வளங்களைப் பெறல் பற்றிய விடயங்கள் தெளிவுபடுத்தப்பட்டன.

கடந்த ஆண்டில் தயாரிக்கப்பட்ட பாதீட்டின் வேலைத்திட்டங்கள் முன்னுரிமை அடிப்படையில் செயற்படுத்தப்பட்டபோது எதிர்கொண்ட சவால்களும் அவற்றிற்கான தீர்வுகளும் பற்றி கலந்துரையாடப்பட்டன.
இந்நிகழ்வில் வளவாளர்களாக கனடா நிறுவனத்தின் பிரதான பிரதிநிதி அன்றூ ஹோல்டர், உலகத் தமிழர் பேரவையின் பணிப்பாளர் வி. குகேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு விளக்கமளித்தனர்.





SHARE

Author: verified_user

0 Comments: