28 Feb 2019

தகவல் தொழினுட்ப பயிற்றுவிப்பாளர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்படும் தேசிய பயிலுநர் மற்றும் கைத்தொழிற் பயிற்சி அதிகார சபையின் புதிய தலைவர் செய்னுலாப்தீன் ஆலிம் நஸீர் அஹமட்

SHARE
தகவல் தொழினுட்ப  பயிற்றுவிப்பாளர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்படும் தேசிய பயிலுநர் மற்றும் கைத்தொழிற் பயிற்சி அதிகார சபையின் புதிய தலைவர் செய்னுலாப்தீன் ஆலிம் நஸீர் அஹமட்
தகவல் தொழினுட்ப  பயிற்றுவிப்பாளர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்படும் என தேசிய பயிலுநர் மற்றும் கைத்தொழிற் பயிற்சி அதிகார சபையின் யேவழையெட யுppசநவெiஉந யனெ ஐனெரளவசயைட வுசயiniபெ யுரவாழசவைல (Nயுஐவுயு) புதிய தலைவரும் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சருமான செய்னுலாப்தீன் ஆலிம் நஸீர் அஹமட் தெரிவித்தார்.

தேசிய பயிலுநர் கைத்தொழில் பயிற்சி அதிகார சபையி;ன் (நைற்றா) மூலமாக நாட்டிலுள்ள 25 மாவட்டங்களில் நடத்தப்பட்டுவரும் தகவல் தொழில் நுட்ப (ஐ.சி.ரி) பயிற்சிநெறிகளை வழங்கும் போதனாசிரியர்களுடனான சந்திப்பு புதன்கிழமை மாலை  27.02.2019  தேசிய பயிலுநர் கைத்தொழில் பயிற்சி அதிகார சபையி;ன் மாநாட்டு மண்டபத்தில்   நடைபெற்றது.

இச்சந்திப்பில் பகுதிநேர போதானாசிரியர்களாக கடமையாற்றுபவர்கள் தாம் இதுகாலவரையில் எதிர்கொண்டும்வரும் முக்கிய குறைபாடுகள் குறித்து தலைவரின் கவனத்திற்கு முன்வைத்தனர்.

குறிப்பாக பல வருடங்களாகப் பணி செய்தும் இது காலவரையில் பணி நிரந்தரம் ஆக்கப்படாமை, மருத்துவ விடுகை பெற முடியாமை, கடந்த இரண்டு மாத காலமாகச் சம்பளம் பெறமுடியாமல் இருக்கின்றமை, போதனாசிரியர்கள் தொழில்சார் பயிற்சிகளைப் பெறமுடியாமை போன்ற விடயங்களையும் தலைவரின் கவனத்திற்குக் கொண்டு வந்தனர்.

மேலும்,  கல்வி பொதுத் தராதர சாதாரண தரத்தில் சித்தி அடையாத மாணவர்கள 13 வருட உத்தரவாதப்படுத்தப்படும் கல்வி திட்டத்தின் கீழ்; தேசிய பயிலுநர் கைத்தொழில் பயிற்சி அதிகார சபையி;ன்   மூலமாக வழங்கப்படும் ஆளுமை விரத்தப்p பயிற்சி நெறிக்களுக்காக  இணைத்துக் கொள்ளப்படுவதில் பல இடர்பாடுகளைச் சந்திப்பதாகவும் இங்கு தலைவரின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டது.

முக்கியமாக இப்பயிற்சி நெறிகளில் சேருவதற்காக விண்ணப்பங்கள் கோரப்படும்போது 500 இற்கும் அதிகமானவர்கள் விண்ணப்பித்தாலும் 20 பேருக்கே இடமளிக்கப்படுகின்றது.

அத்துடன் இடப்பிரச்சினை மற்றும் உபகரணங்கள் இல்லாமை, வளப்பற்றாக்குறை குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.

இத்தகைய குறைபாடுகளை கேட்டறிந்து கொண்ட தேசிய பயிலுநர் கைத்தொழில் பயிற்சி அதிகார சபையி;ன் புதிய தலைவர் நஸீ;ர் அஹமட், இவற்றை வெகு விரைவில் தீர்த்து வைப்பதற்கான கொள்கைத் திட்டங்களை உடனடியாக அமுல்படுத்துமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளைப் பணித்தார்.







SHARE

Author: verified_user

0 Comments: