19 Feb 2019

மட்.பட்.வம்மியடியூற்று வாணி வித்தியாலயத்தின் வருடாந்த இல்லா மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி

SHARE
மட்.பட்.வம்மியடியூற்று வாணி வித்தியாலயத்தின் வருடாந்த இல்லா மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி வித்தியாலய அதிபர் க.சந்திரகுமார் தலைமையில் வியாழக்கிழமை (14) மாலை நடைபெற்றது.
வித்தியாலய அதிபர் க.சந்திரகுமார் தலைiமியல் நடைபெற்ற இவ்வளையாட்டுப் போட்டியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன், போரதீவுப்பற்றுப் பிரதேச உதவிப் பிரதேச செயலாளர் புவனேந்திரன், போரதீவு கோட்டக்கல்விப் பணிப்பாளர் த.அருள்சார, பட்டிருப்பு கல்வி வலய உடற்கல்வி உதவிக் கல்விப் பணிப்பாளர் ரி.இதயகுமார், மற்றும், அயல் பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள், கல்வி அதிகாரிகள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள் உள்ளிட்ட பலரும் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது பாரதி இல்லம், நவலர் இல்லம், விபுலாந்தர், இல்லம் என 3 இல்லங்களாக பிரிக்கப்பட்டு தமிழர்களின் கலைகாலாசார பாரம்பரிய அம்சங்களுடன் அதிகதிகள் வரவேற்கப்பட்டு, விளையாட்டுக்கள் இடம்பெற்றன. 

இறுதியில் பாரதி இல்லம் 308 புள்ளிகளைப் பெற்று முதலாம் இடத்தையும், நவலர் இல்லம் 287 புள்ளிகளைப் பெற்று இரண்டாம் இடத்தையும், விபுலாந்தர் இல்லம் 276 புள்ளிகளைப் பெற்று மூன்றாம் இடத்தையும், பெற்றுக் கொண்டது. 

இதில் வெற்றிபெற்ற வீர வீராங்களைகளுக்கு பரிசில்களும், சான்றிதழ்களும், வெற்றிக்கேடையங்களும், அதிதிகளால் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

















































SHARE

Author: verified_user

0 Comments: