25 Feb 2019

மட்டக்களப்பில் ஐரோப்பிய நாட்டைச்சேர்ந்த 200 மேற்பட்டவர்கள் பங்குகொள்ளும் பாரிய உல்லாச மேம்படுத்தல் செயற்பாடு!

SHARE
மட்டக்களப்பில் ஐரோப்பிய நாட்டைச்சேர்ந்த 200 மேற்பட்டவர்கள் பங்குகொள்ளும் பாரிய உல்லாச மேம்படுத்தல் செயற்பாடு!கிழக்கு மாகாணத்தில் உல்லாசபயணத்துறையை ஊக்குவிப்பதற்காக கடந்த ஆண்டு ஐரோப்பிய நாடுகளைச்சேர்ந்த 200 மேற்பட்டவர்கள் பங்குகொண்ட பல்வேறு பட்ட போட்டி நிகழ்வுகள் கிழக்கு மாகாணத்தில் நடைபெற்றது.

இந்த ஆண்டு மார்ச் 25 ஆம் திகதி தொடக்கம் 31 திகதி வரையுள்ள ஒரு வார காலத்திற்கு 200 க்கு மேற்பட்ட ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த உல்லாச பயணிகள் , அந்த நாடுகளை சேர்ந்த உயர் விருதுகளை பெற்ற விளையாட்டில் வீர வீராங்கனைகளை அழைத்துவந்து அவர்களினுடாக கிழக்கு மாகாணத்தில் உல்லாச பயணத்துறையை ஊக்குவிப்பதற்கான விஷேட வேலைத்திட்டம் இடம் பெறவுள்ளது.
இது தொடர்பான உயர் மட்ட கலந்துரையாடல் கிழக்கு ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புழ்ழாஹ் அவர்களின் தலைமையில் நேற்று (21.02.2019) மட்டக்களப்பு ஆளுநர் பணிமனையில் இடம் பெற்றது. 

கடந்த ஆண்டை விடவும் இவ்வாண்டு பாசிக்குடா, தொப்பிகல,மட்டக்களப்பு வெபர் விளையாட்டரங்கு இந்த பிரதேசங்களில் மையப்படுத்தி மட்டக்களப்பில் உள்ள உல்லாச பயணத்துறையை ஊக்குவிக்கும் நோக்கிலும் ,மட்டக்களப்பின் இயற்கையினை அவர்களுக்கு அறிமுகப்படுத்தும் வகையிலும் , இது தொடர்பான விளம்பரங்களை ஐரோப்பிய நாடுகளில் வழங்கும் வகையிலும் விஷேட ஏற்பாடு இடம்பெறவுள்ளது.
சகல திணைக்களங்களும் இதற்கான ஒத்துழைப்பை வழங்க வேண்டுமென்றும் ஆளுநர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தொப்பிகல வீதி உட்பட பல்வேறு பட்ட பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வு பெறப்பட்டது.
மேலும் வெபர் அரங்களிலே வருகைதரவுள்ள 200 பேரும் உள்ளுர் வீரர் களோடு கலந்து கொள்ளும் விஷேட கிரிக்கட் நிகழ்வினையும் நடத்துமாறு ஆளுநர் கேட்டுக்கொண்டார்.

இராணுவ ,பொலீஸ்,கடற்படை ,விமானப்படை உயர் அதிகாரிகள் ,ஆளுநரின் செயலாளர்கள்,உல்லாச பயணத்துறை பணிப்பாளர் நாயகம்,மாகாண சுகாதார பணிப்பாளர் ,மற்றும் பிரதேச சபை தலைவர்கள் பங்கு பற்றலுடன் இக் கலந்துரையாடல் இடம் பெற்றது.



SHARE

Author: verified_user

0 Comments: