10 Jan 2019

பெற்றோர்கள் வறுமையை காட்டி பிள்ளைகளின் கல்வியை இடைநிறுத்தி விட வேண்டாம். தன்னார்வ தொண்டு அமைப்புக்களையும் அணுகுங்கள் இரா.சாணக்கியன்

SHARE
பெற்றோர்கள் வறுமையை காட்டி பிள்ளைகளின் கல்வியை இடைநிறுத்தி விட வேண்டாம். தன்னார்வ தொண்டு அமைப்புக்களையும் அணுகுங்கள்  இரா.சாணக்கியன்
பெற்றோர்கள் வறுமையை காட்டி பிள்ளைகளின் கல்வியை இடைநிறுத்தி விட வேண்டாம் என இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தவிசாளர் இரா.சாணக்கியன் அவர்கள் பின்தங்கிய கிராமமான மட்டு. தும்பங்கேணி இளைஞர் விவசாய திட்டத்தில் இருந்து பல்கலைகழகத்திற்கு தெரிவான க.மதிகரன் எனும் மாணவனிற்கு புதன்கிழமை (09) மடிக்கணணி வழங்கி வைத்து விட்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர்  மேலும் தெரிவிக்கையில்…

பெற்றோர்கள் தங்களது குடும்ப வறுமையை கருத்தில் கொண்டு பிள்ளைகளின் கல்வி செயற்பாட்டை இடை நிறுத்த வேண்டாம். பலர் இன்று தங்கள் குடும்ப சுமையை குறைக்க வீட்டுதலைவர்கள் பிள்ளைகளை தங்களுடன் வேலைக்கு அழைத்து செல்வது அல்லது வேறு வேலைகளுக்கு அனுப்புவது போன்ற செயல்கள், நடைபெற்று கொண்டிருப்பதை நாம் அறிகின்றோம். அவ்வாறு செய்யாது அவர்களை எவ்வாறேனும் கற்றல் செயற்பாட்டில் ஈடுபடுத்தி அவர்களை சமூகத்தில் உயர்த்தி விட வேண்டிய கடமை பெற்றோருக்குரியது. ஒரு பிள்ளை கல்வியில் சிறந்து விளங்கும் போதுதான் அச் சமூகம் வளர்ச்சி காணும். 

கல்வி கற்பது ஒரு பிள்ளையின் உரிமை. அதனை மீறுவது சட்டத்தின் பிரகாரம் குற்றமாகும். பெற்றோர்கள் அவர்களுக்கு சிறந்த கல்வி கற்பதற்கான சூழலை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். அரசாங்கம் கல்வியினை முழுமையாக இலவசமாகவே வழங்கி வருகின்றது. கற்பதற்கு தடை ஏதும் இருக்காது. கல்வியால் ஒரு பிள்ளை முன்னேறும் போது உயர் நிலையை அடையும் போது அப்பிள்ளை அச்சமூகத்தின் ஒரு பெரும் சொத்தாகவே பார்கக்கப்படுகின்றான்.

அவ்வாறு மிகவும் கஷ்டமான பிள்ளைகள் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் கல்வியை மேற்கொள்வதுடன் எமது இராசமாணிக்கம் மக்கள் அமைப்பினையும் நாடி உதவிகளை பெறலாம் என அவர் தெரிவித்தார். இந்த அமைப்பு கல்விக்காக பல்வேறுபட்ட உதவிகளை செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

SHARE

Author: verified_user

0 Comments: