25 Jan 2019

சசிகலா நரேந்திரன் சாமசிறி விஸ்வகலாஜோதி, நர்த்தன கீர்த்தி, தேசஅபிமானி பட்டம் வழங்கிக் கௌரவிப்பு

SHARE
சசிகலா நரேந்திரன் சாமசிறி விஸ்வகலாஜோதி, நர்த்தன கீர்த்தி, தேசஅபிமானி பட்டம் வழங்கிக் கௌரவிப்புகௌரவப்பட்டங்களையும் விருதுகளையும் வழங்கிவரும் அகில இன நல்லுறவு ஒன்றியத்தினால் மட்டக்களப்பைப் பிறப்பிடமாகவும் கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி சசிகலா நரேந்திரன் சாமசிறி விஸ்வகலாஜோதி, நர்த்தன கீர்த்தி, தேசஅபிமானி பட்டம்  வழங்கிக் கௌரவிக்கப்பட்டார். 

மட்டக்களப்புக்கு வருகை தந்துள்ள சசிகலா நரேந்திரன் விருது வழங்கிக் கௌரவிக்கும் நிகழ்வு நேற்று மட்டக்களப்பில் அமைப்பின் தெசிய அமைப்பாளர்  கலாபூசணம் சமாதானநீதவான் யூ.எல்.எம்.ஹனிபா தலைமையில் நடைபெற்றது. 

இந் நிகழவில் பாராளுமன்ற உறுப்பினர் ஞா. சிறிநேசன் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டதுடன், மட்டக்களப்பு வின்சன்ற் மகளிர் தேசியப்பாடசாலையின் பிரதி அதிபர் திருமதி சாரததா ரவிச்சந்திரா  கௌரவ அதிதியாகவும கலந்து கொண்டார்.  அகில இன நல்லுறவு ஒன்றியத்தின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் கே.திருநாமம், மற்றும் உறுப்பினர்கள், உறவினர்கள், சசிகலா நரேந்திரனின் நண்பர்கள் எனப் பலரும் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர். அததுடன், வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.

இசை, நடன, ஆசிரியரும், அழகுக்கலை நிபுணரும், சமூக சேவகியுமான மட்டக்களப்பை பிறப்பிடமாகக் கொண்ட சசிகலா நரேந்திரன் திரு திருமதி விவேகானந்தா குணலட்சுமி தம்பதிகளின் முதல் மகளாவார். இவருக்கு நான்கு சகோதரிகளும் ஒரு சகோதரனும் உள்ளார். 

இவர் மட்டக்களப்பு இந்துக் கல்லூரியில் உயர்தரம் கற்று, விபுலானந்தா இசை நடனக் கல்லூரியில் சங்கீத டிப்ளோமாவை நிறைவு செய்து 12 வருடங்கள் ஆசிரியராகக் கயாற்றியுள்ளார்.  

இசை ஆசிரியராகவும்,  அரஜன் பியூட்டி அழகுக்கலை நிறுவனத்தின இயக்குனராகவும் செயற்பட்ட இவர், கேக், பிளவர் மேக்கிங், மணப்பெண் அலங்காரம் உள்ளிட்ட பயிற்சிகளையுமு் வழங்கினார்.  இதன் பயனாக 1998ம் ஆண்டு நவம்பரில் 100 மாணவர்களைக் கொண்டு 2 நாட்கள் கண்காடசியொன்றை நடத்தினார்.

சங்கீத ஆநசிரியராகவும் உடற்பயிற்சி ஆசிரியராகவும் மாவட்டததின் பினதங்கிய பாடசாலைகளில் பணியாற்றிய இவர், விளையாட்டுப் போட்டிகள், இசை நடனப் போட்டிகளில் மாணவர்களைப் பங்குபெறச்செய்து வெற்றியடையச் செய்து வந்தார்.

1999ம் ஆண்டு குடுமு்பத்துடன் கனடா நாட்டுக்குச் சென்ற இவர், அங்கு சங்கீதத்தைப் பயிற்றுவித்ததுடன், 2003ம் ஆண்டு அரஜன் அழகுக்கலை நிறுவனமான இலங்கைத் தமிழர்களின் ஆதல் அழகுக்கலை நிறுவனத்தை ஆரம்பித்தார். இது பல பெண்கள் அழகுக்கலையைப் பயின்று தொழிலவாய்ப்புப்பெற உதவியது. 

2005ம் ஆண்டு உலகத்திலேயே முதன் முதலாக கலாச்சார அழகுராணிப் போட்டியை நடத்தினார்.

தையல், கேக் அழகுபடுத்தல், கூந்தல் அழகுபடுத்தல், மணப்பெண் அலங்காரம் என பல துறைகளிலும் பயிற்றுவித்து 2010ம் ஆணடு கனடாவில் கண்காட்சி ஒன்றை நடத்தினார். இதில் 200க்கும் மேற்பட்ட பெண்களுக்குச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இதில் அழகுக்கலை தொடர்பான சஞ்சிகையும் வெளியிடப்பட்டது. கனடாவின் தொலைக்காட்சிகள், வானொலிகள், பத்திரிகைள் இது தொடர்பான செய்திகளை வெளியிட்டிருந்தது. 

அதன் பின்னர் ஏ.ஜீ.ஏ. பியூட்டி ஸ்பா பயிற்சி நிலையத்தினை ஆரம்பித்து பல தொழில வாய்ப்புக்களை வழஙகி வருகிறார். 

2013ம் ஆண்டு முதல் மொடேர்ன் சவுத் ஏசியன் வுமன் நிறுவனத்தின் தலைவராக செயற்பட்டார். இந்த அமை்பு 2014ஆம் ஆண்டு 180 பெண்களுக்கு சாதனைப் பெண்கள் விருது விழாவை நடத்தியது. 

2017ம் ஆண்டு      Event Beauty Folever DVD & Book     வெளியிட்டது. 

கலாசார அழகுராணிப் போட்டி Miss Tamil 2018ம் ஆண்டு நடத்தப்பட்டது.  

இந்தியாவில் தைமாதம 5ம் 6ம் திகதிகளில்  நடைபெற்ற  5வது உலகத்தமிழர் திருநாள் விழா மற்றும் உலகத் தமிழ் வம்சாவளி விழாவில் சசிகலா நரேந்திரன் கௌரவிக்கப்பட்டார். 

கனடாவில் சாதனைப்பெண்கள் விருது விழா , Miss Tamil அழகுராணிப் போட்டி என்பன இவவருடமும் நடைபெறவுள்ளன. 

கனடாவில் பலவித அமைப்புக்கள், சங்கங்களில் கடமையாற்றி கனடாவின் முதன்மைப் பெண்ணாக் திகழ்ந்துவரும் சசிகலா நரேந்திரனை நாமும் வாழ்த்துவோம்.





SHARE

Author: verified_user

0 Comments: