20 Jan 2019

கிராம சகவாழ்வைப் பாதுகாப்பதில் கிராம சேவகர்களுக்கு தெளிவுபடுத்தல்

SHARE
கிராம சகவாழ்வைப் பாதுகாப்பதில் கிராம சேவகர்களுக்கு தெளிவுபடுத்தல்
கிராம சகவாழ்வைப் பாதுகாத்து இன மத முறுகல்களைத் தடுப்பதற்கு கிராம சேவையாளர்களை தயார் நிலையில் இருக்க வேண்டியதன் அவசிஜயத்தை வலியுறுத்தும் தெளிவுபடுத்தல் நிகழ்வு  தேசிய சமாதானப் பேரவையின் மட்டக்களப்பு மாவட்ட சர்வமதப் பேரவைக்கான இணைப்பாளர் ஆர். மனோகரன் தலைமையில் மட்டக்களப்பு கல்லடி கறீன் கார்டன் விடுதியில் ஞாயிற்றுக்கிழமை 20.01.2019 இடம்பெற்றது.
தேசிய சமாதானப் பேரவையின் ஒழுங்கமைப்பில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஆசிய மன்றத்தின் சமாதானத்திற்கும் சமூகக் கலந்துரையாடலுக்குமான நிகழ்ச்சித் திட்ட அலுவலர் செலினா கிறேமர் (Celina Cramer – Program Officer for Peacebuilding and Community Dialog)  தேசிய சமாதானப் பேரவையின் திட்ட முகாமையாளர் சம்சுதீன் ஷாபி நயாஜ், மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலுமிருந்து தெரிவு செய்யப்பட்ட தமிழ் முஸ்லிம் கிராம சேவையாளர்கள் சுமார் 40 பேர் உட்பட  மட்டக்களப்பு மாவட்ட சமாதானப் பேரவை உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இலங்கையில் அனைத்து மதங்கள் மற்றும் அனைத்து இனங்களுக்கிடையில் நீடித்து நிலைத்து நிற்கக் கூடிய சகவாழ்வுக்கான செயற்திட்டங்களில் கிராமங்களில் சமாதானத்தை ஏற்படுத்தும் நிகழ்ச்சித் திட்டத்தின் ஒரம்சமாக இது இடம்பெற்றது.






SHARE

Author: verified_user

0 Comments: