6 Jan 2019

யுத்தத்தின்போது அவயைத்தை இழந்தவருக்கு வாழ்வாதார உதவி.

SHARE
கடந்த யுத்தத்தின்போது பாதிப்புற்று தற்போது தமது வாழ்வில் பல இன்னல்களைச் சத்தித்துக் கொண்டிருக்கும் மட்டக்களப்பு மாவட்டம் மாவடிமுன்மாரிக் கிராமத்தில் வசித்துவரும் தங்கராசா குலசேகரம் கும்பத்திற்கு அவரது வாழ்வாதாரத்திற்கு ஆதாரமாக ஞாயிற்றுக் கிழமை (06) ஆடுகள் வழங்கி வைக்கப்பட்டன. 
TORONTO BLUES FOUNDATIONஅமைப்பின் அனுசரணையில் மட்டக்களப்பிலிருந்து சமூகசேவையில் ஈடுபட்டு வரும் மக்கள் சக்தி எனும் அமைப்பினூடாக இவ்வுதவி வழங்கி வைக்கப்பட்டுள்ளது. TORONTO BLUES FOUNDATION அமைப்புக்கு இதற்கான நிதி உதவியை கனடாவில் வசிக்கும் சமூகசேவையாளரான ஜெயக்கண்ணன் கந்தசாமி என்பவர் வழங்கியுள்ளார்.

மக்கள் சக்தி அமைப்பின் தலைவர் க.ஏகலைவன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அவ்வமைப்பின் நிருவாகத்தினர், ஜனநாயகப் போராளிகள் கட்சியின் மட்டு அம்பாறை மாவட்ட இணைப்பாளர் நா.நகுலேஸ், கதிரவன் மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் தலைவர் ப.கோணேஸ்வரன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது மக்கள் சக்தி அமைப்பின் தலைவர் க.ஏகலைவன் கருத்துத் தெரிவிக்கையில்…..

புலம் பெயர்ந்து வாழும் எமது இரத்த உறவுகள் தாயகத்தில் வாழும் எமது மக்களின் சிந்தனையிலேதான் வாழ்ந்து வருகின்றார்கள். அவர்களுக்கு நாம் என்றும் நன்றிக்கடன் பட்டவர்களாக இருக்க வேண்டும்.  இவ்வுதவியை வழங்கிய கனடாவில் வசிக்கும் சமூகசேவையாளரான ஜெயக்கண்ணன் கந்தசாமி, மற்றும் எமது தாயக உறவுகளுக்கு கைகொடுத்துக் கொண்டிருக்கும் TORONTO BLUES FOUNDATION  அமைப்புக்கும் எமது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

புலம்பெயர்ந்த உறவுகள் அங்கு நிலவும் கடும் குளிருக்கும், பனிக்கும், முகம்கொடுத்து அவர்கள் உழைக்கும் பணத்தில்தான் எமக்கு உதவி செய்து வருகின்றார்கள். அவர்கள் அனுப்பும் பணத்தை நாம் சரியான முறையில் பயன்படுத்தி வாழ்வாதார ரீதியாக எமது மக்கள் முன்னேற்றிக் கொள்ள வேண்டும். அதனைக்கண்டு அவர்கள் மனம்நிறைவதோடு, மேலும் அவர்களை உதவி செய்ய முயற்சிக்கும் என அவர் தெரிவித்தார்.











SHARE

Author: verified_user

0 Comments: