31 Jan 2019

கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளராக மீண்டும் எம்.டி.எம்.நிசாம் ஆளுனரால் நியமனம்.

SHARE
கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புழ்ழாஹ்வால்  கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளராக மீண்டும் எம்.டி.எம்.நிசாம் என்பவரை வியாழக்கிழமை (31) நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்க முன்னர் மிக நீண்ட காலமாக கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளராக கடமையாற்றி வந்த எம்.டி.எம்.நிசாம் கிழக்கு மாகாண ஆளுனர் ரோகித்த போகல்லாமகவினால் இடமாற்றப்பட்டு கிழக்கு மாகாண மேலதிக சிரேஸ்ட்ட கல்விச் செயலாளராக செயற்பட்டு வந்தார். பின்னர் கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் வெற்றிடத்திற்கு மன்சூர் என்பவர் நியமிக்கப்பட்டு அவர் கடமையை மேற்கொண்டு வந்த நிலையில் தற்போது மீண்டும் கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளராக எம்.டி.எம்.நிசாமை புதிய கிழக்குமாகாண ஆளுனர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புழ்ழாஹ் வியாழக்கிழமை (31) நயமித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

SHARE

Author: verified_user

0 Comments: