12 Dec 2018

தற்போது பிரதேச மட்டத்தில் அதிகளவு நுளம்பு பெருக்கம் அதிகம் காப்படுகின்றன – வைத்திய அதிகாரி கிருஸ்ணகுமார்.

SHARE
தற்போது அதிகளவு நுளம்பு பெருக்கம் அதிகம் காப்படுகின்றன. அவற்றால் பலவித நோய்களும் ஏற்படுகின்றது, என களுவாஞ்சிகுடி பிரதேச பொது சுகாதார வைத்திய அதிகாரி கே.கிருஸ்ணகுமார் தெரிவித்தார்.
இலங்கச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளையினால் களுவாஞ்சிகுடி பொது சுகாதார பிரிவுக்குட்பட்ட குடியிருப்பு, மற்றும் கோடை மேடு ஆகிய கிராமங்களிலிருந்து தெரிவு செய்யப்பட்ட 125 குடும்பங்களுக்கு துளம்பு வலைகளும், 40 குடும்பங்களுக்கு கிணறுகளை மூடிப் பாதுகாக்கும் கிணற்று மூடிகளும், புதன் கிழமை (12) வழங்கி வைக்கப்பட்டன. 

இதன்போது கோடைமேடு கிராமத்தில் வைத்து பயனாளிகளுக்கு மேற்படி பொருட்களை வழங்கி வைத்து விட்டு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் குறிப்பிடுகையில்…..

பிள்ளைகளுக்கும், தாய்மாருக்கும், பெரும் சவாலாக இருக்கின்ற நோய் டெங்கு நோயாகும், மழைகாலங்களிலும், தழை ஓய்ந்து கொண்டு செல்லும் காலங்களிலும் மக்கள் டெங்கு நோய்க்குட்படுவது வழக்கமாகும். மழை ஆரம்பிக்கும்போது நுளம் பெருக்கம் ஆரம்பித்து மழை விடும் காலங்களில் நீர்த் தேக்கங்கள் அதிகரித்து நுளம்பும் பெருக்கமும் அதிகரித்துக் காணப்படும். அக்காலங்களில் அதிகளவானோர் நோய்க்குட்படுவார்கள். எனவே பொதுமக்களும் இச்சந்தர்ப்பத்தில் விழிப்பபக இருந்து கடந்த காலங்களைப் போலல்லாமல் எதிர்காத்தில் நோய்வாய்க்குட்படுவதிலிருந்த தவிர்த்துக் கொள்ளும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும்.  

நோயேற்பட்டு அதிலிருந்து குணமாவதைவிட நோயற்றவர்களாக, ஆரோக்கியமுள்ளவர்களாக, குடும்பத்துடன் சந்தோசமுள்ளவர்களாக வாழக் கூடியவர்களாக இருக்க வேண்டும். எனவே நோயிலிருந்து தடுக்க வேண்டுமாக இருந்தால் நுளம்புப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த வேண்டும்.  இப்பிரதேசங்களில் நுளம்புத் தொல்லையிலிருந்து பாதுகாக்க இலங்கைச் செங்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளை துளம்பு வலை, மற்றும் கிணறுகளை மூடிப்பாதுக்காக்கும் கிணற்று மூடி போன்றவற்றை வழங்கி உதவியுள்ளது.

எனவே இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கம் இவ்வாறு மக்களுக்கு உதவும் இவ்வேளையில் மக்களும் இவற்றுக்கு ஏற்றாற்போல் விழிப்புடன் செயற்பட வேண்டும், கழிவுகளை முறையாகப் போணுதல், வெற்றுப் பாத்திரங்களை முறையாக பேணுதல், நீர் தேங்கி நிற்கும் இடங்களை மண் இட்டு மூடுதல், போன்ற உங்களுடைய வீட்டுச் சூழலை நீங்களே துப்பரவாக வைத்திருக்க வேண்டும் என அவர் இதன்போது தெரிவித்தார்.

கோடைமேடு கிராமத் தலைவர் க.விஜயரெத்தினத்தின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளையின் தலைவர் த.வசந்தராசா, செயலாளர் சா.மதிசுதன், பொருளாளர் வ.சகத்திவேல், களுவாஞ்சிகுடி பிரிவுத் தலைவர் ச.கணேசலிங்கம், மற்றும் தொண்டர்கள் பயனாளிகள் உள்ளிட்ட பலரும் வலந்து கொண்டிருந்தனர். 


















SHARE

Author: verified_user

0 Comments: