11 Dec 2018

துறைநீலாவணை பழைய தண்ணீர்த் தாங்கிவீதி சேறும் சகதியுமாக காணப்பட்டு போக்குவரத்து செய்ய முடியாத நிலை காணப்படுவதாக அக்கிராம பொதுமக்கள் மிகுந்த கவலை தெரிவிக்கின்றனர்.

SHARE
(விஜி)

துறைநீலாவணை பழைய தண்ணீர்த் தாங்கிவீதி சேறும் சகதியுமாக காணப்பட்டு போக்குவரத்து செய்ய முடியாத நிலை காணப்படுவதாக அக்கிராம பொதுமக்கள் மிகுந்த கவலை தெரிவிக்கின்றனர். 
மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட துறைநீலாவணை கிராமம் போக்குவரத்துக்குக் இன்னலுறும் கிராமமாகும். இக்கிராமத்தில் 8 ஆம் வட்டாரத்தில் மிகவும் பழமை வாய்ந்த வீதியாக தண்ணீர்த் தாங்கி வீதி காணப்படுகின்றது. இவ்வீதியில் பல ஊழியர்கள், புத்திஜீவிகள், பொதுமக்கள் என பலரும் வசித்து வருகின்றனர். 

இவ்வாறு புத்திஜீவிகள் உள்ள வீதியானது சுமார் 15 வருடங்களுக்கு மேலாக எதுவித புனரமைப்புமின்றி “சேறும் சகதியுமாக” காணப்படுகின்றது. மழைகாலங்களில் பெய்யுகின்ற மழை நீரானது வீதியின் நடுவேதான் வெள்ளமாக ஓடுகின்றது. பல இடங்களில் குன்றும், குழியுமாக காணப்பட்டு தண்ணீர் தேங்கி தொற்றுநோய்கள் பரவக்கூடிய வாய்ப்புள்ளன.

இவ்வீதியில் கனரக வாகனங்கள், மோட்டார்சைக்கிள்கள் பயணித்தால் புதையக்கூடியதாகவுள்ளது. சுமார் 1200 மீற்றர் நீளமான இத்தண்ணீர் தாங்கி வீதியானது கரடுமுரணான வகையிலும், நிலையிலும் காணப்படுகின்றது.

பல வளம் நிறைந்துள்ள கிராமமாகவும், கடந்த காலங்களிலி; பல தியாகங்களைச் செய்த கிராமமாகவும்  விளங்கும் துறைநீலாவணை கிராமத்தின் இவ்வீதியின் அவலநிலையை கண்டும் காணாமலும் பிரதேசத்திற்கு பொறுப்பான திணைக்கள அதிகாரிகளும், சமூகமட்ட பிரதிநிதிகளும் உள்ளார்கள் என பொதுமக்கள், வீதியில் பயணிப்போர் கவலை தெரிவிக்கின்றார்கள்.

எனவே இவ்வீதியின் அவலநிலையை கருத்திற்கொண்டு, துரித கவனம் செலுத்தி மிகவிரைவில் கொங்கிறீட் வீதியாக அல்லது தார்வீதியாக மாற்றித்தருமாறு பொதுமக்கள் கோரிக்கை முன்வைக்கின்றார்கள். 




SHARE

Author: verified_user

0 Comments: