20 Dec 2018

மாவட்ட இலக்கிய பண்பாட்டு விழா இவ்வார இறுதியில் நாட்களில் மட்டக்களப்பில் இடம்பெற ஏற்பாடுகள் பூர்த்தி மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார்

SHARE
மட்டக்களப்பு மாவட்ட இலக்கிய பண்பாட்டு விழா இவ்வார இறுதியில் நாட்களில் மட்டக்களப்பில் இடம்பெறுவதங்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க  அதிபர் மாணிக்கம் உதயகுமார் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்தில் புதன்கிழமை (19) மாலை இடம்பெற்ற ஊடகவியலாளர்களுக்கான சந்திப்பின்போது அவர் இந்த விவரங்களைத் தெரிவித்தார்.

மாவட்ட கலாசாரப் பேரவையும் மாவட்ட கலாசார அதிகார சபையும் இணைந்து மாவட்ட இலக்கிய பண்பாட்டு விழாவை இவ்வார இறுதித்த தினங்களான சனிக்கிழமையும் (22) ஞாயிற்றுக்கிழமையும் (23) மட்டக்களப்பு மஞ்சந்தொடுவாய் தொழில் நுட்பக் கல்லூரி மண்டபத்தில் நடாத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வு சனிக்கிழமை காலை 8.00 மணிக்கு மூவினங்களின் பாரம்பரியம், தொன்மை மற்றும் விழுமியங்களை வெளிப்படுத்தும் பண்பாட்டுப் பேரணி மற்றும் பல் மத கலாசார வெளிப்பாடுகள் கல்லடி விபுலானந்தா மணி மண்டபத்திலிருந்து ஆரம்பமாகி விழா நடைபெறும் மண்டபம் வரை செல்லவுள்ளது.

அமர்வுகள் நான்கு அரங்குகளாக சனிக்கிழமை காலை 9.00 மணிமுதல் கண்காட்சி அரங்கு (வி.சி.கந்தையா அரங்கு), பி.ப. 3.00 மணி முதல் 6.00 மணி வரை நாடக அரங்கு (பலவர்மணி பெலியதம்பிப்பிள்ளை அரங்கு, ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணி முதல் பி.ப. 12.30 மணி வரை ஆய்வரங்கு (பித்தன்ஷா அரங்கு மற்றும் பி.ப. 3.00 மணி முதல் 6.00 மணி வரை கலையரங்கு (வித்துவான் கமலநாதன் அரங்கு) என ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மாவட்டத்தின் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலுமிருந்து கலைஞர்கள், ஆர்வலர்கள், எழுத்தாளர்கள், இலக்கிய ஆர்வலர்களின் படைப்புக்கள காட்சிப்படுத்தப்படவுள்ளதோடு மூத்த கலைஞர்களின் கௌரவம் என்பன இடம்பெறவுள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

SHARE

Author: verified_user

0 Comments: